ஒரு நாள் சுற்றிப் பார்க்க ஒகேனக்கல் ஸ்பாட்! அருமையான ஸ்பாட்!

payanam articles
payanam articles

மிழ்நாட்டில் பிரபலமான அருவிகள் உண்டு கும்பக்கரை அருவி, குற்றால அருவி, அகஸ்தியர் அருவி, என ஒவ்வொரு அறிவிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு ஒவ்வொரு அழகும் உண்டு. தனித்துவமும் உண்டு. மலையும் மலை சார்ந்த பகுதியும் இடங்களில் அருவிகள் உண்டு மலை கிராமங்களில் பல அருவிகள் இருந்தாலும் இந்த அருவி மிக சிறப்பு வாய்ந்தது.

இயற்கை அழகோடு அருவியல் குளித்தபடி பரிசல் பயணம் மேற்கொள்ள ஒரு இடம் உண்டு அது எல்லோரின் மனதையும் கவர்ந்த இடம் யாருக்குமே இந்த இடத்தை பார்த்தால் சிறு பிள்ளையாக மாறி துள்ளி குதித்து விளையாட ஆரம்பித்து விடுவார்கள் அப்படி எந்த இடம் என்றுதானே யோசிக்கிறீர்கள். ஒகேனக்கல் அருவியின் சிறப்புகள் குறித்து இப்பதிவில் காணலாம்.

"தர்மபுரியில் இருந்து சுமார் 47 KM தொலைவிலும், பென்னாகரத்தில் இருந்து 16 KM தொலைவிலும் அமைந்து உள்ளது. ஓகேனக்கல் கடல் மட்டத்தில் இருந்து 1500 அடி உயரத்தில் உள்ளது. ஓகேனக்கல் புகையும் நீர் திவலைகளும் அதன் வெளியை கவர்ந்து இருப்பதால் உருவான பெயர்.

ஒகேனக்கலின் பழைய பெயர் உகுநீர்க்கல் என்பதாகும். 1940ஆம் ஆண்டுவாக்கில் கூட தாழ்த்தப்பட்ட மக்களால் நடத்தப்பட்ட சேமன் சண்டை என்னும் தெருக்கூத்தில் கட்டியங்காரனாகிய கோமாளி, நான் கங்கையாடப் போரேன். அட, நான் குமரியாடப் போரேன் எனப் பாடும் சாமியாரைப் பார்த்து, ஏன் பக்கத்திலிருக்கும் உகுநீர்கல்லுக்குப் போகக்கூடாதா என நகையாடுவான் என்பர்.

1969ஆம் ஆண்டு சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்த புது இலக்கியப் பதிப்பகம் வெளியிட்ட குளிர் காவிரி என்னும் கவிதை நூல் இவ்வருவியை 100 பாடல்களில் வருணிக்கிறது. இதன் ஒன்பதாம் தலைப்பு உகுநீர்க்கல் உயிர்காவிரி எனத் தரப்பட்டுள்ளது.

உகுநீர்க்கல் என்பதே ஒகேனக்கல் எனத்திரிந்துவிட்டது. திப்பு சுல்தான் காலம் முடிய வரிவாங்கும் அதிகாரிகள் கன்னடம் பேசுபவர்களாக இருந்த காரணத்தால் தருமபுரி மாவட்டத்து ஊர்ப் பெயர்கள், மலைப்பெயர்கள், ஆறுகளின் பெயர்கள் ஆகியவற்றைக் கன்னடப் பெயர்களாக வருவாய்த்துறைப் பதிவேட்டில் பதிவு செய்தனர். அதை அப்படியே ஆங்கிலேயர் காலத்திலும் பின்பற்றினர். அது இப்போதுவரை தொடர்கிறது. பரிசல் மூலம் சுற்றுலாப் பயணிகளை அருவிகளுக்கு அருகே அழைத்துச்செல்வார்கள். எண்ணெய்க் குளியல் இங்கு பிரபலம்."

இதையும் படியுங்கள்:
எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள்; ஏற்றம் நிச்சயம்!
payanam articles

நம் தமிழ்நாட்டில் இருக்கும் இப்படி ஒரு அற்புத இடத்திற்கு ஒரு நாள் விசிட் அடித்தால் போதும் காலை முதல் மாலை வரை எண்ணெய் குளியல் வரை அசைவ பிரியர்களுக்கு அசைவ உணவு சைவ பிரியர்களுக்கு சைவ உணவு என இங்கு இயற்கை ருசியுடன் சாப்பிட்டு மகிழலாம். அது மட்டும் அல்ல உடலுக்கு ஆரோக்கியம் தரும் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவியில் குளித்தால் உங்களுக்கு உடல் மீண்டும் பூஸ்ட் ஆன மாதிரி இருக்கும் நீங்கள் அனுபவித்து பாருங்கள் நிச்சயம் உணர்வீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com