
ஒரு நாட்டின் கலாச்சாரத்தை அறிய, நகரங்களைக் கடந்துள்ள கிராமங்களை சுற்றிப் பார்த்தால் நம்மை ஈர்க்கும் அதன் கலாச்சாரத்தை பார்க்கலாம். அவை அந்நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இருப்பதையும் உணரலாம்.
இங்கிலாந்தின் பிபரியில் உள்ள குளோசெஸ்டர்ஷைர் கவுண்டி, கோல்ன் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இதனை 'இங்கிலாந்தின் மிக அழகிய கிராமம்' என்று அழைக்கின்றனர். பார்க்கும் இடங்களில் எல்லாம் 17ஆம் நூற்றாண்டை கண்முன்னே காட்டக்கூடிய பழமையான கல் வீடுகள், பாரம்பரிய கட்டடங்கள் மற்றும் அழகிய கோல்ன்நதி ஆகியவை இந்த கிராமத்தின் சிறப்புகளாகும்.
கிரீஸ் நாட்டின் சாண்டோரினி பாறைகளின் உச்சியில் அமைந்துள்ளது ஒயா. தனித்துவமான செயற்கை கட்டமைப்புகளுக்கு பெயர் பெற்ற கிராமமாகும். கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது இந்த கிராமம். இங்கு பாழடைந்த கோட்டை, கப்பல் கேப்டன்களின் வீடுகள் மற்றும் காற்றாலை என அழகான கட்டமைப்புகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளியில் பளிச்சென மின்னக்கூடிய வெள்ளை நிற கட்டடங்களை கொண்ட இந்த நகரம் பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல சினிமா பாடல்களில் வந்துள்ளது.
சிக்கிம் மாநிலத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது ஜூலுக் கிராமம். 'இந்தியாவின் மினி சுவிட்சர்லாந்து' என அழைக்கப்படுகிறது. இந்தியாவின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பறைசாற்றக்கூடிய கோயில்கள், மடங்கள், ஏரிகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் அழகான ஆப்பிள் தோட்டங்களால் சூழப்பட்டுள்ளது. இமய மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இக்கிராமத்திற்கு பனி சீசனில் செல்வது உங்கைளை மேலும் களிப்பூட்டும்.
நெதர்லாந்தில் கீத்தோர்ன் என்ற ஒரு அழகான கிராமம் அமைந்துள்ளது. இங்கு அமைதியான டச்சு கிராமமாகும். அடர்ந்த காடுகளையும் நெதர்லாந்தின் பசுமையையும் கண் முன்னே காட்டக்கூடிய அழகிய கிராமம். நீர்நிலைகள், பாலங்கள் ஆகியன இந்த நிறைந்திருப்பதால் கிராமம் 'நெதர்லாந்தின் வெனீஸ்' என செல்லமாக அழைக்கப்படுவதும் உண்டு.
மால்டாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மார்சாக்ஸ் லோக் ஒரு அழகிய மீன் பிடி கிராமம் ஆகும். லூஸஸ் எனப்படும் வண்ணமயமான படகுகள், மீன்பிடி சந்தைகள், கலை கட்டடங்களுக்கு இந்த கிராமத்தின் அழகிய அடையாளங்கள் ஆகும்.