பாஸ்போர்ட் - சில சுவாரஸ்யமான தகவல்கள்...!

passport...
passport...

நீங்கள் உலகத்தின் பல்வேறு நாடுகளைச் சுற்றிப்பார்க்க அந்நாட்டின் கதவுகள்  திறக்கப்பட  உங்களுக்குத் தேவையான முக்கியமான ஆவணம் பாஸ்போர்ட். அதை தமிழில் கடவுச் சீட்டு என்கிறார்கள்.

பைபிளில் பாஸ்போர்ட் முறை பற்றிய குறிப்பு ஹீப்ரு மொழியில்  நெஹேமியா புத்தகத்தில்  உள்ளது. கி.மு 405 ல் பாரசீகத்தின் அரசர் ஒன்றாம் அர்டாக்செர்செக்ஸ் அவரிடம் பணியாற்றிய  நேகமியா என்பவர்   யூதேயா வழியாக மறுபுறம் உள்ள ஆற்றங்கரை பகுதிக்கு  அவர் பாதுகாப்பாக பயணம் செய்வதற்கு  அடுத்த பகுதியில் உள்ள கவர்னருக்கு கடிதம் ஒன்றை வழங்கினார். அது தான்  உலகின் முதல் பாஸ்போர்ட்.

இஸ்லாமிய கலீபாக்களின் ஆட்சியில் நாடு கடந்து செல்லும்போது இதே முறையில் "பாரா ஆ" என்ற ரசீது வழங்கப்பட்டது அந்த ரசீதில்  வருபவர் பாதுகாப்பு வரி மற்றும் அனைத்து வரிகளும் செலுத்தி உள்ளார் என்ற விபரம் இருக்கும், இதுவே  பயணிகளுக்கான முதல் பாஸ்போர்ட். இந்த வார்த்தை கடல், துறைமுகம் மற்றும் ஒரு நாட்டின் நுழைவு வாயில் ஆகியவற்றை கடந்து செல்வது என்ற வார்த்தையிலிருந்து வந்தது. அத்தகைய பாஸ்போர்ட்க்கு "சீ போர்ட்ஸ்" , "பாஸ் த்ரு தி கேட்" என்ற பெயர்களும் இருந்தன.

இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஹென்றி முதல் முறையாக வெளிநாட்டவர் யார்  என்பதை தெரிந்து கொள்ள பாஸ்போர்ட் முறையை அறிமுகப்படுத்தினார். இதுவே கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து முதலாம் உலகப் போரின்போது பாதுகாப்பு காரணங்களுக்காக பாஸ்போர்ட் கட்டாயம் என்றானது. ஆனால், ஒரு நாட்டின் குடிமகன் மற்றொரு நாட்டிற்குச் செல்லும்போது, ​​அவரிடம் வலுவான ஆவணங்கள் இருக்க வேண்டும் என்ற ஒப்பந்தம் உலக நாடுகளிடையே இல்லை. முதல் உலகப்போரும் நடந்து கொண்டிருந்த காலத்தில்தான் பாஸ்போர்ட் போன்ற நடைமுறையை உருவாக்குவது மிகவும் முக்கியம் என்பதை ஒவ்வொரு நாடும் புரிந்துகொள்ளத் தொடங்கியது.

1920 இல் திடீரென்று எல்லாம் மாறியது. அமெரிக்கா தனது நாட்டிற்கு ரகசியமாக வரும் புலம்பெயர்ந்தோரை தடைசெய்யும் வகையில் உலகம் முழுவதும் பாஸ்போர்ட் போன்ற அமைப்பை உருவாக்க முன் முயற்சி எடுத்தது." லீக் ஆஃப் நேஷன்ஸ்" அமைப்பில் இது குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது. 1924 இல், அமெரிக்கா தனது புதிய பாஸ்போர்ட் முறையை வெளியிட்டது. பெயர், முகவரி, வயது, புகைப்படம், குடியுரிமை மற்றும் கையெழுத்து அனைத்தும்  அதில் இடம்பெற்றன. அந்த நபர் செல்லும் நாட்டிற்கு அவரின் அடையாளத்தை கண்டுகொள்ள இது எளிமையான முறையாக மாறியது.

முதலாம் உலகப் போரின்போது 1914 ம் ஆண்டு இந்தியா தனது முதலாவது பாஸ்போர்ட் முறையை அறிமுகப் படுத்தியது. 1917 ம் ஆண்டு முதல் இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்கிறவர்கள் அவசியம் பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. முதன் முதலாக நேவிபுளூ கலரில் பாஸ்போர்ட் வெளியிடப் பட்டது.சுதந்திரத்திற்கு பிறகு பாஸ்போர்ட் முகப்பில் இருந்த ராயல் கோட் மாறி அசோகா சக்கரம் வந்தது.

இந்தியா மூன்று ரக பாஸ்போர்ட்டை வழங்குகிறது. சாதாரண மக்களுக்கு நீல நிற பாஸ்போர்ட் இருக்கும். அரசாங்கத்துடன் தொடர்புடைய உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கான உத்தியோகபூர்வ பாஸ்போர்ட், ராஜதந்திர பாஸ்போர்ட் மெரூன் நிறத்தில் இருக்கும். மூன்றாவதாக, உச்சபட்ச சலுகை கொண்ட பாஸ்போர்ட் நாட்டின் பிரதமர், ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதிக்கு வழங்கப்படுகிறது. தற்போது இந்திய அரசு ஒரு நாளைக்கு  அதிகபட்சமாக 70,000 பாஸ்போர்ட்களை வழங்கி வருகிறது.

passport...
passport...

உலகில் பாஸ்போர்ட் முறை தொடங்கப்பட்டு 102 ஆண்டுகள் ஆகிறது. ஜனாதிபதி முதல் பிரதமர் வரை, அரசு பிரமுகர்கள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குச் செல்லும்போது, ​​அவர்களிடமும் ராஜதந்திர பாஸ்போர்ட் இருக்க வேண்டும். இந்த பூமியில் 200க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ள நிலையில், இந்த மூன்று பிரமுகர்களுக்கு மட்டும் பாஸ்போர்ட் தேவையில்லை என்ற சிறப்பு சலுகை உள்ளது. பிரிட்டன் மன்னர், ஜப்பான் ராஜா மற்றும் ராணி ஆகிய மூவருக்கும்தான் இந்த சலுகை உள்ளது.

இதையும் படியுங்கள்:
பிரபலங்கள் குடிக்கும் ‘பிளாக் வாட்டர்’ பற்றித் தெரியுமா?
passport...

உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் ஜெர்மன் நாட்டு பாஸ்போர்ட்தான். இதன் மூலம் 177 உலக நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம். அடுத்த இடத்தில் சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து நாடுகள் உள்ளன. இந்திய பாஸ்போர்ட் மூலம் 49 நாடுகளுக்கு செல்லலாம்.

உலகிலேயே மிகவும் அழகான பாஸ்போர்ட் கனடா நாட்டு பாஸ்போர்ட் தான். அதில் அந்நாட்டின் முக்கிய இடங்கள் பாஸ்போர்ட்டில் ஒளிரும் வண்ணம் உள்ளது. ஹங்கேரி நாட்டின் பாஸ்போர்டை திறந்தால் அந்நாட்டின் தேசிய கீதம் ஒலிக்கும். உலகிலேயே முறைகேடு செய்வதற்கு கடினமானதொரு ஆவணமாக நிகராகுவா  பாஸ்போர்ட் கருதப்படுகிறது.

ஆஸ்திரேலியா முதன்முதலாக டிஜிட்டல் பாஸ்போர்டை அறிமுகப்படுத்தியது. உலகில் முதன்முதலில் ஸ்மார்ட்போன் செயலி அடிப்படையில் செயல்படும் டிஜிட்டல் பாஸ்போர்ட்டை பின்லாந்து அறிமுகப்படுத்தியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com