இந்தியாவில் இந்தியர்களுக்கே 'தடை': ஆச்சரியமூட்டும் 6 இடங்கள்!

tourist attractions
Payanam articles
Published on

ந்தியா பல்வேறு கலாச்சாரங்கள், மதங்களை கொண்டிருந்தாலும் அனைவரும் சமம் என்ற கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. ஆனால் இந்தியாவில் சில இடங்களில் இந்தியர்களுக்கே அனுமதி கிடையாது. அந்த வகையில் இந்தியர்கள் தடை செல்ல முடியாத அல்லது கடுமையாக கட்டுப்படுத்தப்பட்ட 6 முக்கிய இடங்களைப் பற்றி இப்பதிவில் காண்போம்.

ரெட் லாலிபாப் விடுதி

சென்னையில் அமைந்துள்ள 'ரெட் லாலிபாப் விடுதி'யில் தங்க விரும்பும் பார்வையாளர்கள் கட்டாயம் பாஸ்போர்ட் சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதிமுறையால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமே இந்த விடுதி சேவை செய்கிறது. இதனால் இவ்விடுதி சர்ச்சைக்குரிய இடமாக மாறி இருந்தாலும், இந்தியாவிற்கு முதன் முறையாக வரும் வெளிநாட்டு பயணிகளுக்காகவே இந்த ஹோட்டல் வடிவமைக்கப்பட்டுள்ளதாக விடுதி நிர்வாகம் விளக்கம் அளிக்கிறது.

கோவாவின் சில கடற்கரை பகுதிகள்

சுற்றுலாப்பயணிகளின் சொர்க்க பூமியாக கருதப்படும் கோவாவில் உள்ள சில கடற்கரை பகுதிகள் குறிப்பாக அரம் போல் போன்ற பகுதிகள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்தியர்கள் நுழைவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு பயணிகள் பிகினி மற்றும் நீச்சல் உடை அணிநதிருப்பதால் தேவையற்ற பார்வைகளில் இருந்து அவர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடைமுறை உருவானதாக கூறப்படுகிறது.

ஃப்ரீ கசோல் கஃபே - இமாச்சல்

இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் கசோல் பகுதியில் உள்ள ஃப்ரீ கசோல் கஃபே, இந்தியர்களுக்கு அனுமதி இல்லை அதாவது இந்திய வம்சாவளியினர் மெனு கேட்டபோது மறுக்கப்பட்ட சம்பவங்களால் சர்ச்சைக்கு உள்ளானது. ஆனால் இதற்கு மாறாக இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமே இந்த கஃபே திறந்திருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பொங்கல் லீவுக்கு ஜாலியா டூர் போக 6 சிறந்த கடற்கரைகள்!
tourist attractions

பிராட்லாண்ட்ஸ் ஹோட்டல்

வெளிநாட்டினருக்கு அதிக முக்கியத்துவம் வழங்கும் இடமாக சென்னையில் உள்ள பிரிட்டிஷ் பாணி ஹோட்டலான பிராட்லாண்ட்ஸ் ஹோட்டல் அறியப்படுகிறது. இங்கு இந்தியர்களுக்கு தடையில்லை என்றாலும் வெளிநாட்டவர்களே பெரும்பாலான வாடிக்கையாளர்களாக உள்ளனர். மேலும் அடையாள ஆவணங்கள் மற்றும் நுழைவு விதிமுறைகள் இந்தியர்களுக்கு கடுமையாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

சகுரா ரியோகான் உணவகம் - அகமதாபாத்

அகமதாபாத்தில் உள்ள சகுரா ரியோகான் உணவகத்தின் ஊழியர்கள் இந்தி அல்லது ஆங்கிலம் பேசத் தெரிந்திருந்தாலும் நுழைவாயிலில், “இந்தியர்களுக்கு அனுமதி இல்லை” என்ற பலகை வெளிப்படையாகவே வைக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய வாடிக்கையாளர் களுக்கான பாரம்பரிய சேவையை இந்த உணவகம் முதன்மையாக வழங்குவதால் இந்திய வாடிக்கையாளர் களுக்கு சிரமம் ஏற்படுவதாக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

ரஷ்ய காலனி - கூடங்குளம்

இந்தியர்களுக்கு தடை செய்யப்பட்ட முக்கியமான இடங்களில் ஒன்றாக தமிழ்நாட்டின் கூடங்குளத்தில் உள்ள ரஷ்ய காலனி உள்ளது. ரஷ்யர்களால் 1800-களில் உருவாக்கப்பட்ட இந்த பகுதி, தற்போது சுற்றுலாத் தளமாக கருதப்பட்டாலும் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக உள்ளது. இந்திய குடிமக்கள் ரஷ்ய தூதரகத்தின் சிறப்பு அனுமதி இல்லாமல் இங்கு நுழையவே முடியாது.

இந்தியாவில் இந்தியர்கள் சில இடங்களுக்கு செல்ல முடியாத நிலை சமூக மற்றும் அரசியல் ரீதியாக கேள்வியை எழுப்பினாலும் பாதுகாப்பு காரணங்களுக்காகத்தான் என்பதால் இதனை விவாதிக்க தேவையில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com