சாதாரணமானவர்கள் முதல் பிரபலங்கள் வரை மன அமைதிக்காக ஆசிரமங்களுக்கு செல்வது உண்டு. அந்த வகையில் இந்தியாவில் இலவசமாகவும் இயற்கையையும் மன அமைதியையும் அள்ளித்தரும் ஏழு ஆசிரமங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
இயற்கை அழகு நிறைந்த உத்தரகண்டின் ரிஷிகேஷின்நதிக் கரையில் பல ஆசிரமங்கள் அமைந்துள்ள நிலையில் கீதா பவன் ஆசிரமம் எந்த பணமும் கொடுக்காமல் அமைதியையும் மன நிறைவையும் கொடுக்கும் ஒரு ஆசிரமமாக இருக்கிறது. 1000அறைகள் கொண்ட இந்த ஆசிரமத்தில் ஒரு ஆயுர்வேத பிரிவும் ,நூலகமும் அமைந்துள்ளது. இங்கு தங்கும் பயணிகளுக்கு சைவ உணவு வழங்கப்படுகிறது.
பசுமையான இயற்கைக்கு இடையில் தனிப்பட்ட அமைதியை தரும் கேரளாவின் ஆனந்தாஷ்ரமம் பறவைகளின் சத்தத்தை கொடுப்பதோடு வீட்டில் தயாரித்த உணவு போன்ற சுவையை இங்கு தங்கும் பயணிகளுக்கு எந்த கட்டணமும் இல்லாமல் வழங்குகிறது. கிராமப்புற பாணியில் நான்கு புறமும் இயற்கையால் சூழப்பட்டு இருப்பது ஆசிரமத்திற்கு வருபவர்களுக்கு நிம்மதி கொடுக்கிறது.
ரிஷிகேஷில் அமைந்துள்ள பாரதி ஆசிரமமும் நிறுவனமும் உடல் மற்றும் மனதை குணப்படுத்தும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை படிப்புகளை வழங்குவதோடு, தன்னார்வ நடவடிக்கைகளில் பங்கேற்பவர்களுக்கு சான்றிதழும் வழங்குகிறது. தன்னார்வ திட்டங்களில் பங்கேற்பவர்கள் இங்கு இலவசமாக தங்கி வெளிநாட்டவருடன் பேசும் வாய்ப்பையும் ஏற்படுத்தித் தருகிறது இந்த ஆசிரமம்.
வெள்ளியங்கிரி மலைகளால் சூழப்பட்ட சத்குருவின் ஆன்மீக மையமான பெரிய ஆதியோகி சிவன் சிலையை உடைய கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் வரும் விருந்தினர்களுக்கு உணவு ,பானம் மற்றும் தங்குவதற்கு என அனைத்து சேவைகளும் இலவசமாக செய்யப்படுகிறது. மகா சிவராத்திரி அன்று கொண்டாட்டம் மற்றும் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது.
திருவண்ணாமலை மலைகளில் அமைந்துள்ள ஸ்ரீ ரமணாஸ்ரமத்தில் பகவானின் பெரிய கோவிலும், பெரிய தோட்டமும் ஒரு நூலகமும் உள்ளது. பக்தர்களுக்கு இங்கு தங்க எந்த கட்டணமும் இல்லாததோடு தூய சைவ உணவை அனுபவிக்கலாம். ஆனால் அவர்கள் குறைந்தது ஆறு வாரங்களுக்கு முன்பே இங்கு தங்க முன்பதிவு செய்ய வேண்டும்.
இமாச்சலப் பிரதேசத்தில் குருத்வாரா மணிகரன் சாகிப்பில் தங்குவதற்கோ சாப்பிடுவதற்கோ பணம் செலுத்த தேவையில்லை. இயற்கையை ரசிப்பதோடு இங்கு காலையிலும் மாலையிலும் லங்கர் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு, ரிஷிகேஷ், கேரளா, புனே அசாம் மற்றும் நாக்பூர் போன்ற நகரங்களைத் தவிர இந்தியாவின் எல்லா இடங்களிலும் இருக்கும் ஆர்ட் ஆஃப் லிவிங் ஆசிரமங்களில் வசிப்பதற்கு தினமும் குறைந்தது 5 மணி நேரம் வீட்டு பராமரிப்பு , வெளி நடவடிக்கைகள், விருந்தினர் சேவைகள் கரிம பண்ணைகள் போன்ற சேவை செய்யவேண்டும். தனிப்பட்ட குளியல் அறைகள் மற்றும் தாவர உணவுகள் தங்குமிடங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
மேற்கூறிய ஏழு ஆசிரமங்களும் உணவு தங்கும் இடம் அனைத்தும் இலவசமாக வழங்கும் இந்தியாவிலுள்ள ஆசிரமங்களாக உள்ளன.