பனி மலையில் நனைந்தபடி பனிக்கட்டியில் விளையாடுவது சிறியவர்கள் பெரியவர் வரை அனைவருக்கும் விருப்பமான ஒன்று. குளிர்காலமான டிசம்பர் முதல் பிப்ரவரி வரை இந்தியாவில் உள்ள மிகச்சிறந்த பனிப்பொழிவு இடங்களை இப்பதிவில் காண்போம்.
ஆங்கிலேயர் காலத்தில் ஸ்கை ரிசார்ட்டாக நிறுவப்பட்ட குல்மார்கில் நவம்பர் முதல் பிப்ரவரி வரை பனிப்பொழிவு அதிகமாக இருப்பதோடு பனி விளையாட்டுகளுக்கும் பெயர் பெற்றதாகும் . பனிச்சறுக்கு மற்றும் ஸ்னோபோர்டிங் போன்ற அட்ரினலின்-பம்பிங் செயல்பாடுகளை வழங்குவதோடு மலையேற்றம், மலையேறுதல் பனிச்சறுக்கு உள்ளிட்ட சாகச விளையாட்டுகளையும் இங்கு அனுபவித்து மகிழலாம்.
உத்தரகாண்டில் உள்ள ஆலி, பனிச்சறுக்கு சரிவுகள் மற்றும் நந்தா தேவி மலைத்தொடரின் பிரமிக்கவைக்க கூடிய காட்சிகள் பனிப்பொழிவு இடங்களில் ஒன்றாக இருப்பதோடு இங்கு பனிச்சறுக்கு விழாக்கள் நடைபெறுகிறது. சாம்பியன்ஷிப்புகளின் மையமாகவும் உள்ளதோடு ஆப்பிள் தோட்டங்களையும் கண்டு ரசிக்கலாம்.
3000 மீட்டருக்கு அதிகமான உயரத்தில் இயற்கை அழகு மற்றும் கலாச்சார வளர்ச்சியின் தனித்துவமான கலவையோடு பனிப்பொலிவை அமைதியாக ரசிக்க ஏற்ற இடங்களில் ஒன்று . பனி மூடிய மலைகள், செலா ஏரி போன்ற உறைந்த ஏரிகள் மற்றும் பனி அடுக்குக்கு கீழே உள்ள கம்பீரமான தவாங் மடாலயம் ஆகியவை உண்மையிலேயே மயக்கும் காட்சியை உருவாக்குகின்றன.
கடல் மட்டத்தில் இருந்து 3978 மீட்டர் உயரத்தில், ரோஹ்தாங் பாஸில் ஸ்னோ பாயிண்ட்டில்,சுற்றுலாப் பயணிகள் ஸ்லெட்ஜிங், பாரா-கிளைடிங், ஸ்னோ ஸ்கூட்டர் ரைடிங், மோட்டார் பைக்கிங், ஏடிவி ரைடிங் மற்றும் ஸ்கீயிங் போன்ற பல வேடிக்கையான செயல்களில் பங்கேற்கலாம். மணாலியில் இருந்து 51 கிமீ தொலைவில், லே / கீலாங் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்தப் பகுதியில் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே திறந்திருக்கும். ரோஹ்தாங் பாஸ், சாகச விரும்பிகளுக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கும் ஏற்ற இடமாகும்.
சுமார் 15,000 அடி உயரத்தில் லாட்சுங்கில் பனிப்பொழிவை அனுபவிப்பதற்கான ஒரு ஆஃப்பீட் மற்றும் இயற்கை அழகுக்கும் அமைதியான சூழலுக்கும் பெயர் பெற்றது. "சிக்கிமின் சுவிட்சர்லாந்து" என்று அழைக்கப்படும் இப்பகுதி பனி நிறைந்த மலைகள், அடர்ந்த ஆல்பைன் காடுகள் மற்றும் அழகான பள்ளத்தாக்குகளின் பரந்த காட்சிகளைக் கொண்டுள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 9000 அடி உயரத்தில், வெள்ளை பனி போர்வை புல்வெளிகள் மற்றும் ஜான்ஸ்கர் மலைத்தொடரின் சிகரங்களால் நிறைந்துள்ளதோடு, பனிச்சறுக்கு மற்றும் பனி மலையேற்றத்திற்கு சிறந்த இடமாகும். கங்காபால் ஏரி மலையேற்றம், சட்சரன் கணவாய், நிச்சினல் கணவாய், சோஜி-லா கணவாய் மற்றும் காஷ்மீர் கிரேட் ஏரிகள் உள்ளிட்ட பல்வேறு குளிர்கால மலையேற்றங்களோடு, கோடை காலங்களில் கூட பனிப்பொழிவு இருக்கும் இடமாக உள்ளது
தனிமையில் பனியில் விளையாட விரும்பினால், பனிச்சறுக்கு, குதிரை சவாரி மற்றும் பனிச்சறுக்கு வாய்ப்புகளுடன் சிம்லாவிற்கு அருகிலுள்ள குஃப்ரியில் உள்ள மஹாசு சிகரம் பனி மூடிய இமயமலைத் தொடர்கள் மற்றும் பள்ளத்தாக்குகளின் அற்புதமான காட்சிகளை வழங்குகிறது.
சுமார் 2,300 மீட்டர் உயரத்தில் பனிப்பொழிவோடு தேவதாரு மற்றும் ஓக் காடுகள் அடங்கிய ஒரு அழகிய பனி நிலப்பரப்பாக இருக்கிறது .மேலும் பனி படர்ந்த மரங்களால் சூழப்பட்ட சுற்றுச்சூழல் பூங்கா மற்றும் கர்வால் இமயமலையின் பரந்த காட்சிகளை உள்ளடக்கியதாக உள்ளது.