
எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று அடர்த்தியான காடுகள் நிறைந்த பகுதி ஆகும். தென்மலை என்ற இடம் புனலூருக்கு அருகில் உள்ளது. கேரளா அரசின் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த இடங்களை எல்லாம் சுற்றிப் பார்ப்பதற்கு ஒரு நாள் போதாது.
இரண்டு நாட்கள் தங்கி பார்த்தால்தான் அனைத்து இடங்களையும் பார்க்க முடியும். அவ்வளவு கண்கொள்ளாக் காட்சி. முற்காலத்தில் இந்த மலையில் தேனீக்கள் அதிகமாக இருந்ததால் தேன் மலை என்று இருந்தது அதுவே நாளடைவில் தென்மலை என்று மாறிவிட்டது.
இந்த மலையின் அழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அணு அணுவாக சுற்றிப் பார்த்து பரவசமடைய செய்கிறது. சிறந்த சுற்றுலாத்தலமாகும்.
இங்கு படகு சவாரி மலை ஏறுதல் இசை நீர் ஊற்று சிறுவர் பூங்கா வனவிலங்கு சரணாலயம் தொங்கு பாலம் பட்டாம்பூச்சி சரணாலயம் என திரும்பும்இடமெல்லாம் வியக்க வைக்கிறது. இசை நீரூற்று அனைவரையும் கட்டிப்போட வைக்கிறது. செந்தூரணி வனவிலங்கு சரணாலயத்தில் அனைத்து வகையான விலங்குகளையும் நாம் பார்வையிடலாம். எட்டு வகையான காடுகள் உள்ளது. பறவைகள் சரணாலயம் மான்கள் சரணாலயம் பார்ப்பதற்கு ரம்யமாக இருக்கும். மான்கள் சரணாலயத்தில் புள்ளிமான் சாம்பார் மான் குறைக்கும் மான் என விதவிதமாக உள்ளது.
சாகச மண்டலம் தீம் பார்க் என வியக்க வைக்கிறது. மலை ஏறுதல் ஆற்றைக் கடப்பது தொங்கு பாலத்தில் நடந்து செல்வது. இவற்றில் சொல்லும்போது இரு பக்கமும் வனவிலங்குகள் நடமாட்டத்தை காணலாம். இடையிடையே ஓய்வு மண்டபம் உணவு அருந்தும் அறை காணப்படுகிறது. உள்ளே கோளரங்கம் ஆம்பி தியேட்டர் போன்றவை கண்களுக்கு விருந்தளிக்கிறது.
நட்சத்திர வனம். உண்மையிலேயே நட்சத்திர வானம் 27 நட்சத்திரங்களை கொண்ட மரங்களாக உள்ளது. 27 நட்சத்திரங்களுக்கும் 27 மரங்கள் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.
தென்மலைக்கு அருகில் பாலருவி உள்ளது. புனலூரில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் தென்மலை எக்கோ டூரிசம் உள்ளது பர்மா பாலம் பறக்கும் நரி விதவிதமான பறவைகள் ரிங்காரம் மனதுக்கு நிம்மதியாக இருக்கும். யுனெஸ்கோவின் பாரம்பரிய சுற்றுலா தலம் விருதைப் பெற்றுள்ளது.
விமானம் மூலம் வரவேண்டும் என்றால் திருவனந்தபுரம் வந்து அங்கிருந்து 75 கிலோமீட்டர் தென்மலைக்கு வரவேண்டும்.
செங்கோட்டையிலிருந்து 29 கிலோமீட்டர் தூரத்திலும் புன்னலூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த அடர்ந்த காடுகள் உள்ளது. பொழுதுபோக்கு பிரியர்களுக்கு சிறந்த வரப்பிரசாதம் ஆகும். தென்மலையை சுற்றி பார்ப்பதற்கு கைடுகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்
ட்ரெக்கிங் செல்ல வன பாதுகாவலர்கள் நம்மோடு வருவார்கள். தென்னக மக்களுக்கு ஒரு சிறந்த சுற்றுலா தலம் என்றால் அது தென்மலை என்பதை குறிக்கும். ஒருமுறை எனும் இந்த தென்மலையை சுற்றிப் பார்த்து அதன் அழகை ரசிக்க வேண்டும்.