2026-ன் ஹாட் ஸ்பாட்ஸ்: இன்றைய இளைஞர்கள் கொண்டாடும் டாப் சுற்றுலாத் தலங்கள்!

Payanam Articles
Hot spots...

இன்றைய தலைமுறையினர் ஒரு இடத்திற்கு பயணம் மேற்கொள்ளும் பொழுது அந்த இடத்தை சுற்றிப் பார்ப்பது மட்டுமல்லாமல் அங்குள்ள கலாச்சாரம், பாரம்பரியத்தை ஆராய்ச்சியும் செய்கின்றனர். மேலும் மறக்க முடியாத அனுபவங்களைத் தேடி பயணிக்கின்றனர். அந்த வகையில் இளைஞர்கள் அதிகம் விரும்பும் சுற்றுலாத் தலங்கள் மற்றும் அவற்றின் சிறப்பு அம்சங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.

1. டோக்கியோ, ஜப்பான்

Payanam Articles
டோக்கியோ, ஜப்பான்

பாரம்பரியம், நவீன தொழில்நுட்பம் சங்கமிக்கும் ஜப்பானின் டோக்கியோ நகரம், ஃபேஷன்  தொழில் நுட்பத்தில் ஆர்வம் கொண்டவர்களுக்கு சிறந்த இடமாகவும்  இளைஞர்களின் விருப்பப் பட்டியலில்  முதலிடத்திலும் உள்ளது.   ஷிபுயா (Shibuya) மற்றும் ஹராஜுகு (Harajuku) பகுதிகள் உலகளாவிய ஃபேஷன் கலாச்சாரத்தின் மையப்புள்ளிகளாகவும்,அக்கிஹாபாரா (Akihabara) போன்ற இடங்கள் டிஜிட்டல் கலைக்கூடங்கள் மற்றும் அனிமி (Anime) பிரியர்களையும் இளைஞர் களையும் பெரிதும் ஈர்ப்பதால் புறநகர் பகுதிகளில் தங்கி, ஜப்பானிய கலாச்சாரத்தை இளைஞர்கள் மெதுவாக ரசிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
இரவில் மாறும் பஜார்... பகலில் மின்னும் அரண்மனை: இந்தூரின் விந்தைகள்!
Payanam Articles

2. ஐஸ்லாந்து

Payanam Articles
ஐஸ்லாந்து

ஐஸ்லாந்து இயற்கையோடு ஒன்றிப் பயணிக்க விரும்பும் இளைஞர்களுக்கு  ஒரு சொர்க்க பூமியாகும். விண்வெளி சார்ந்த சுற்றுலாவை அனுபவிக்கவும், 2026-ல் ஏற்படவுள்ள சூரிய கிரகணத்தை பார்க்கவும் இளைஞர்கள் அதிக அளவில் குவிகின்றனர். சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமான பனிப்பாறை நடைபயணம் மற்றும் எரிமலைப் பாறைகளுக்கு இடையே டைவிங் செய்வது, ஐஸ்லாந்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முறைகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு ஆகியவை இன்றைய இளைஞர்களை வெகுவாக ஈர்க்கின்றன.

3. மெடலின், கொலம்பியா

Payanam Articles
மெடலின், கொலம்பியா

குறைந்த செலவில் தங்கி வேலை செய்ய விரும்பும் 'டிஜிட்டல் நோமட்' (Digital Nomad) இளைஞர்களுக்குப் பிடித்தமான இடமாக நித்திய வசந்தத்தின் நகரம் (The city of eternal spring) என்று அழைக்கப்படும் கொலம்பியாவில் உள்ள மெடலின், மாறியுள்ளது. நவீன வேலைத்தலங்கள் மற்றும் காபி விடுதிகள் இங்குள்ள 'எல் போப்லாடோ' (El Poblado) பகுதியில் நிறைந்துள்ளது. ஒரு காலத்தில் சவால்களைச் சந்தித்து , இன்று கலை மற்றும் நடனம் மூலம் இந்த நகரம் எவ்வாறு உருமாறியுள்ளது என்பதை விளக்கும் 'கமுனா 13' (Comuna 13) சுற்றுப்பயணங்கள் இளைஞர்களுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கின்றன.

4. லிஸ்பன், போர்ச்சுகல்

Payanam Articles
லிஸ்பன், போர்ச்சுகல்

போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள லிஸ்பன் நகரம்  ஐரோப்பிய நகரங்களான லண்டன்,  பாரிஸை விட மலிவாகவும் அழகான நகரமாகவும் திகழ்கிறது. புகைப்படக் கலைஞர்களுக்கு வண்ணமயமான கட்டடங்கள் மற்றும் பாரம்பரிய தரை ஓடுகள் கொண்ட இந்த நகரம் விருந்தாக உள்ளது.  கடற்கரைக்கு அருகாமையில் இரவு நேர கேளிக்கை விடுதிகள் இருப்பதால், இளைஞர்கள் பகலில் அலைச்சறுக்கு (Surfing) விளையாட்டிலும், மாலையில் நகரத்தின் கொண்டாட்டங்களிலும் ஈடுபடுகின்றனர். ஐரோப்பாவை சுற்றி பார்க்க குறைந்த செலவில் விரும்பும் இளைஞர்களுக்கு இதுவே சிறந்த தீர்வாகும் .

மேற்கூறிய சுற்றுலா தளங்கள் குறைந்த செலவில் இளைஞர்களுக்கு நிறைவான அனுபவங்களை கொடுக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com