சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கம்: பாலி தீவின் அழகிய இடங்கள்!

Tourist's paradise
Payanam articles
Published on

ந்தோனேசியா மாகாணத்தின் 17,500 தீவுகளில் மிகவும் பிரபலமானது பாலி தீவு. பாலி தீவு  கோவில்கள், சிற்பங்கள் மற்றும் இயற்கை வளங்கள் நிறைந்த இடம். மேலும் பலதரப்பட்ட கலாச்சாரங்களை இங்கு காணலாம். தேசா தெமுகாஸ் (Desa temukus), தனா லாட் கடல் கோவில் (Tanah lot sea temple), திர்டா எம்புல் கோவில் (Tirta empul temple) போன்ற கோவில்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களே.

அதேபோல் பாலி தீவு முழுவதுமே அருவி, கடற்கரை போன்ற இயற்கை வளங்கள் நிறைந்தது என்பதால் அழகை ரசிப்பதற்கு பஞ்சமே இருக்காது. குறிப்பாக துக்கட் செபுங் (Tukad chepung) என்ற இடத்தில் இருக்கும் குஷிங் (gushing) அருவி, சுகாவதி கேன்யன் (Sukawati canyon), பலங்கன் கடற்கரை (Balanghan beach) போன்ற இடங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்.

பாலி தீவில் பாலி ஸ்விங், பத்தூர் மலை ஏறுதல், பாலி சஃபாரி ஆகியவை செய்து மலை அழகை சுவாரசியமாக ரசிக்கலாம்.

மேலும், தனா கோவிலின் கலை சிற்பம், கோவா கஜாவின் தண்ணீர், பாலி உயிரியல் பூங்காவின் விலங்குகள் ஆகியவை பாலியின் அற்புதங்களாகும். அதேபோல் பாலியில் நெற் சாகுபடி செய்யும் இடம், வாட்டர் பாம், உபுத் குரங்கு காடு, பறவைகள் பூங்கா, Finn’s beach club, கரங்கேசம் (Karangesam) ஆகியவை பாலியில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள்.

இதையும் படியுங்கள்:
மனதின் தூய்மையும் வலிமையும் நம் வெற்றிக்கான தடங்கள்!
Tourist's paradise

மெஞ்சங்கன் தீவு (Menjangan island), நூசா கெனிங்கன் (Nusa ceningan) ஆகிய இடங்களில் பல வகையான பொழுது போக்குகள் உள்ளன. நூசா டுவா திரையரங்கில் நடைபெறும் கலாச்சாரம் சார்ந்த நாடகம் பாலியில் மிகவும் பிரபலமானது. அதேபோல் வாசனைத் திரவியங்கள் மற்றும் கைவினைப் பொருட்களுக்கான தொழிற்கூடங்களை பாலி அரசு நடத்தி வருகிறது. இது பாலியின் கைவினை கலாச்சாரத்தை வளர்ச்சியடைய செய்யும் ஒரு தொழிற்கூடமாக கருதப்படுகிறது. பாலி சுற்றுலா செல்லும்போது அந்த தொழிற்கூடங்களிலும் சேர்ந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலே சொன்ன இடங்கள் பாலியில் முதலில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்களாகும்.

இந்த இடங்களை சுற்றிப் பார்த்தப் பிறகு நாட்கள் இன்னும் மீதமிருந்தால் மேலும் சில இடங்களுக்கு செல்லலாம். பன்யுமாலா இரட்டை அருவி, உலுன் தானு பெரட்டன் கோவில், செகும்புல் அருவி (Sekumpul waterfall), அலிங் அலிங் அருவி (Aling aling), ஹந்தாரா கேட் (Handara gate), பெசாகி கோவில் (Besakih great temple), புரா லெம்புயாங் (Pura lempuyang) ஆகிய இடங்களுக்கு செல்லலாம்.

சென்னையிலிருந்து பாலி தீவிற்கான விமானக் கட்டணம் 10 ஆயிரம் முதல் ஆரம்பமாகிறது. மேலும் பயணத்திற்கு 8 மணி நேரமாகும். இயற்கையையும் கலையையும் விரும்புபவர்கள் கட்டாயம் பாலி தீவுக்குச் சென்று வருவது சிறப்பான அனுபவமாக இருக்கும்.

-பாரதி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com