சோகோட்ரா தீவின் மிரள வைக்கும் காட்சிகள்!!

payanam articles
Socotra Island
Published on

சிலருக்கு தீவுகள் என்றாலே மிகவும் பிடிக்கும். அவர்களுக்கு ஏற்ற இடம்தான் சோகோட்ரா. சோகோட்ராவை ஒரு மர்மம் நிறைந்த இடம் என்று கூறுவார்கள். ஏனெனில் இங்கு வித்தியாசமான விலங்குகளும் மரங்களும் அதிகம் இருக்கும். உலகிலேயே மூன்றில் இரு பங்கு வித்தியாசமான தாவரங்கள் இங்குத்தான் இருக்கிறது. அனைத்திற்கும் மேல் இங்கு வளரும் ட்ராகன் மரம் மிகவும் பிரபலமானது.

இங்கு வித்தியாசமான விலங்குகள் இருப்பதற்கு முக்கிய காரணம் ஒன்று சொல்லப்படுகிறது. அதாவது இந்த நிலத்தின் வித்தியாசமான வெப்பநிலை மற்றும் நிலத்தினால் விலங்குகள் தங்கள் குணத்தினை அந்த நிலத்திற்கேற்றவாரு மாற்றிக்கொள்கிறதாம். ஆகையால்தான் வித்தியாசமான விலங்குகள் தாவரங்கள் வளர காரணமாகிறது. அந்தவகையில் இந்த இடத்தில் நாம் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றி பார்ப்போம்.

ஹடிபோ:

முதல்நாளில் சோகோட்ராவின் தலைநகரமான ஹடிபோவிற்கு செல்லலாம். இங்கு நீங்கள் செல்வதற்கு முன்னர் சோகோட்ராவில் உள்ள டூர் கைட் ஒருவரைப் பார்த்து வைத்துக்கொள்ளவும். ஏனெனில் இங்கு வசதியான ஹோட்டல்கள் எதுவும் இருக்காது. சில நேரம் டென்ட் அமைத்து தங்குவது போல் தான் இருக்கும். அதேபோல் இங்கு அதிகமான ஆட்கள் சுற்றிப்பார்க்க வரமாட்டார்கள் என்பதால் முன்னேற்பாடுகள் செய்துக் கொள்வது நல்லது.

பின்னர் தேட்வா லகூன் தீவிற்கு செல்லலாம். இந்த தீவு பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருக்கும். நிறைய புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளலாம். பிறகு அங்கேயே இரவு டென்ட் அமைத்து தங்கிக்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
உலகின் 2வது பெரிய கொதிக்கும் ஏரி! சாகசப் பிரியர்களின் சொர்க்கம்!
payanam articles

இரண்டாவது நாள் ஷோப் பே செல்லலாம். முதல் நாள் இரவு தேத்வா லகூனில் தங்கிவிட்டு அடுத்த நாள் காலை அருகில் இருக்கும் க்வாலன்ஸியா கிராமத்திற்கு செல்லலாம். அங்கு போட் ரைட் சென்றுவிட்டு பிறகு ஷோப் பே செல்லலாம். சோகோட்ராவிலேயே இந்த பீச்தான் மிகவும் அழகானது.

அதிகப்படியான டால்பின்ஸைப் பார்க்கலாம். இங்கு நீங்கள் படகில் சென்று கடலை சுற்றிப் பார்க்கலாம். அந்த வெள்ளை மணல், நீல நிற கடலைப் பார்த்துக்கொண்டே இரவு டென்ட் அமைத்து தங்கிக்கொள்ளலாம்.

டிக்ஷாம் பீடபூமி:

காலை எழுந்தவுடன் ஷோப் பேவிலிருந்து கிளம்பி க்வாலன்ஸியா கிராமத்திற்கு சென்றுவிட்டு அதே வழியாக டிக்ஷாம் பீடபூமிக்கு செல்லலாம். இந்த இடத்தில் அதிகமான ட்ராகன் மரம் காணப்படும். அந்த மரத்திலிருந்து சிவப்பு நிற ரெஸின் உற்பத்தியாகும். அது நிறைய வியாதிகளுக்கு மருந்தாக செயல்படுகிறது. இதன்பின்னர் வாடி திர்ஹுர் கேன்யன் சென்று நேரத்தை செலவிடலாம். பின்னர் அன்றிரவு அங்கு டென்ட்டில் தங்கிக்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
குளிர்காலச் சுற்றுலா: இப்போதே பிளான் செய்யுங்கள்!
payanam articles

மணல் டூனே ஆஃப் ஸ்டிரோ:

மூன்றாவது நாள் இங்கு செல்லலாம். இங்குள்ள கடற்கரையில் வெள்ளை மணல்கள் தான் அழகாக காட்சியளிக்கும். இங்கு விளையாண்டால் பெரியவர்கள் கூட குழந்தைப் பருவத்திற்கு திரும்பி விடுவார்கள். அங்கு இரவு அதேபோல் டென்ட்டில் தங்கிவிட்டு செல்லலாம்.

மேலும் மணல் வளைவு, ராஸ் எரிஸல், அயஃப்ட் கார்ஜ் ஆகிய இடங்களுக்கு செல்லலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com