உலகின் 2வது பெரிய கொதிக்கும் ஏரி! சாகசப் பிரியர்களின் சொர்க்கம்!

Boiling Lake, Dominica
Boiling Lake
Published on

பூமியின் மேற்பரப்பில் நடக்கும் அற்புதமான இயற்கை நிகழ்வுகளில் ஒன்றுதான் டொமினிகாவில் (Dominica) உள்ள 'கொதிக்கும் ஏரி' (Boiling Lake). மொர்னே ட்ராயிஸ் பிடோன்ஸ் தேசியப் பூங்காவில் (Morne Trois Pitons National Park) அமைந்துள்ள இந்த ஏரி, உலகிலேயே இரண்டாவது பெரிய வெந்நீர் ஏரி (Hot Lake) என்ற தனித்துவமான பெருமையைப் பெற்றுள்ளது. பூமியின் அடி ஆழத்தில் இருந்து வரும் தீவிர வெப்பத்தை நமக்கு உணர்த்தும் ஒரு நேரடிச் சான்றாக இந்த ஏரி விளங்குகிறது.

கொதிக்கும் ஏரியின் (Boiling Lake) மர்மம் என்ன?

டொமினிகாவின் தலைநகரான ரோஸோவிலிருந்து சுமார் 10.5 கிமீ தொலைவில் இந்த ஏரி அமைந்துள்ளது. இது ஒரு நீர் நிரம்பிய பியூமரோல் (Fumarole), அதாவது எரிமலைப் பகுதியில் உள்ள ஒரு ஆவிக் கசிவுப் பள்ளம் ஆகும்.

தோற்றம்:

இந்த ஏரியின் நீர் எப்போதும் சாம்பல்-நீல நிறத்தில் கொதித்துக் குமிழ்கள் விட்டுக்கொண்டே இருக்கும். அடர்த்தியான நீராவி மேகங்கள் அதைச் சூழ்ந்திருப்பதால், ஒரு மர்மமான தோற்றத்தைத் தரும்.

இதையும் படியுங்கள்:
இரவே இல்லாத நாடு, தலைநகரம் இல்லாத குடியரசு – ஒரு பார்வை!
Boiling Lake, Dominica

ஏரியின் குறுக்களவு சுமார் 60 முதல் 75 மீட்டர் வரை இருக்கும். இதன் விளிம்புப் பகுதிகளில் மட்டுமே வெப்பநிலையை அளவிட முடிந்தது. அதன் வெப்பம் 82°C முதல் 92°C வரை இருக்கும். மையப்பகுதியில் உள்ள அதிக வெப்பம் காரணமாக, அதை அளவிடுவது சாத்தியமில்லாமல் இருக்கிறது.

இந்த இயற்கை அதிசயத்தை முதன்முதலில் 1870 ஆம் ஆண்டு எட்மண்ட் வாட் மற்றும் ஹென்றி ஆல்பிரட் ஆல்பர்ட் நிக்கோல்ஸ் ஆகியோரால் பதிவு செய்யப்பட்டது. எரிமலைச் செயல்பாடுகளின் காரணமாக, ஏரியின் நீர்மட்டம் மற்றும் வெப்பநிலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சில சமயங்களில் எரிமலை நீராவி வெடிப்புகளால் (Phreatic Eruptions) இதன் ஆழமும் வெப்பநிலையும் கூட மாறுபட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
சாகசப் பயணிகளின் சொர்க்கம்: வியட்நாம் சன் டூங் குகையின் சிறப்பு அம்சங்கள்!
Boiling Lake, Dominica

சாகசப் பிரியர்களுக்கு இந்த ஏரி ஒரு சொர்க்கம் என்றாலும், இங்குச் செல்வது மிகவும் சவாலானது.

இந்த ஏரிக்குச் செல்வது ஒரு நாள் முழுவதுமான, சவாலான மலையேற்றப் பயணமாகும். சுமார் 13.2 கிமீ தூரம் கொண்ட இந்தப் பயணம், பூங்காவின் மிகக் கடினமான ட்ரெக்கிங் பாதைகளில் ஒன்றாகும். இது முடிக்க 6 முதல் 8 மணி நேரம் ஆகலாம்.

இதையும் படியுங்கள்:
30 மில்லியன் மக்களுக்கு ஒரே ரயில் பாதை எந்த நாடு தெரியுமா?
Boiling Lake, Dominica

வெப்ப நீரூற்றுகள் மற்றும் பாறைகள் நிறைந்த பகுதி என்பதால், பாதைகள் வழுக்கும் தன்மை கொண்டவை. எனவே, கட்டாயம் சான்றளிக்கப்பட்ட வழிகாட்டியுடன் (Certified Guide) செல்வது அவசியம். வழிகாட்டிகள் ட்ரெக்கிங் குறித்த அறிவையும், அப்பகுதி தாவரங்கள் மற்றும் விலங்குகள் பற்றிய தகவல்களையும் வழங்குவார்கள்.

கொதிக்கும் ஏரி (Boiling Lake) என்பது வெறும் புவியியல் அதிசயம் மட்டுமல்ல. சுற்றியுள்ள கடலின் அழகையும், அருகில் உள்ள மார்டினிக் தீவையும் பார்க்கும் வாய்ப்பை இது வழங்குகிறது. சவாலை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் இயற்கைப் பிரியர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு இடம், இந்த ஏரி கரீபியன் தீவுகளின் மறக்க முடியாத அனுபவத்தை இந்த ஏரி வழங்குகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com