

ராமேஸ்வரத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தனுஷ்கோடி. 1964 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட கோர புயலில் கிட்டத்தட்ட தனுஷ்கோடி நகரம் முழுமையாக அழிந்து விட்டது என கூறலாம். மிச்சம் இருந்தது கோதண்ட ராமசாமி கோவில் மட்டுமே. புயலுக்கு முன்பாக தனுஷ்கோடி நகரம் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு பகுதியில் இருந்தது. இங்கிருந்து இலங்கைக்கு கடற்கரை வணிகம் நடைபெற்று வந்தது. முக்கிய துறைமுகமாக விளங்கி வந்தது.
2017 க்கு பிறகு இங்கு புதிய சாலைகள் அமைக்கப்பட்டு தனுஷ்கோடி நகரம் புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. மிகச்சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. தினசரி எண்ணற்ற சுற்றுலா பயணிகள் இந்த இடத்தை காண ஆர்வமாக வருகின்றனர். தனுஷ்கோடி ராமேஸ்வரம் தீவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஒரு துறைமுகம் ஆகும். 1964 இல் ஏற்பட்ட புயலில் சுமார் 1800 பேர் பலியாகி உள்ளனர். இந்த இடம் தொன்மையான வரலாற்றில் அடையாளங்களுடன் காணப்படுகிறது.
முன்னர் மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக விளங்கியது இந்த தனுஷ்கோடி பகுதி. இந்த இடத்தில் வங்கக்கடலும் இந்திய பெருங்கடலும் சங்கமிக்கும் இடமாகும். இந்த கடற்கரையில் குளித்தால் காசியில் குளித்த புண்ணியம் கிடைக்கும்.
என்பது ஐதீகம். கோதண்ட ராமசாமி கோவில் ராமேஸ்வரத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நீலக்கடலின் அழகும் சுற்றுப்புற சூழ்நிலைகளும் பார்ப்பதற்கு கண்களை கொள்ளை கொள்ளும் விதத்தில் அமைந்திருக்கும்.
தமிழ்நாட்டின் பரந்த கடற்கரையாக ஆக இந்த இடம் உள்ளது.
மிகவும் கவர்ச்சிகரமான இடமாகவும் சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்ப்பதற்கு ஏற்ற இடமாகவும் உள்ளது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கிறார்கள்.
இந்த இடத்தில் எண்ணற்ற சிற்றுண்டி மையங்கள் உள்ளது. சுவையான மீன் சாப்பாடு சுடச்சுட கிடைக்கும்.
கடற்கரையின் ஒருபுறம் மன்னார் வளைகுடா மறுபுறம் வங்காளவிகுடா மூலம் இயற்கையாக சூழப்பட்டுள்ளது. தனுஷ்கோடி என்று சொல்லுக்கு வில்லின் முனை என்று பெயர்.
ராமன் இந்த இடத்திலிருந்து இலங்கைக்கு செல்ல பாலம் அமைப்பதற்கு தனது படைகளுக்கு கேட்டுக்கொண்ட இடமாக ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த இடம் ராமாயண காலத்தில் இடம் பெற்றுள்ளது
சுமார் 15 கிலோ மீட்டர் நீளமுள்ள தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் அதிக அலைகளை கொண்ட பகுதியாகும் அடிக்கடி கடல் சீற்றம் ஏற்படும். இந்தப் பகுதியில் நிறைய குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். கடல் அலையின் சீற்றத்தை குறைக்க இருபுறமும் சீமை கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்க்கப்பட்டுள்ளது.
இங்கு பிளமிங்கோ பறவைகளை அதிக அளவில் காணலாம்.
புயல் வருவதற்கு முன்பு இங்கு பெரிய கிறிஸ்தவ தேவாலயம் ரயில் நிலையம் தபால் நிலையம் பள்ளிக்கூடம் நிறைய குடியிருப்புகள் இருந்து வந்தது.
1964 டிசம்பர் மாதம் ஏற்பட்ட புயலால் கோதண்டராமன் கோவில் தவிர மற்ற பகுதிகளில் அனைத்தும் அழிந்துவிட்டது. இந்த விபத்து ஏற்பட்டு 60 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அதன் எச்சங்கள் அழியாமல் காணப்படுகிறது. இந்த இடத்தில் ராவணன் சகோதரர் விபீஷணன் ராமனிடம் சரணடைந்த இடமாக கருதப்படுகிறது. இந்த இடத்தில் அழகிய மணற்பாங்கான பகுதிகள் நிறைய உள்ளன.
2017 புதிதாக கட்டப்பட்டுள்ள தார் சாலைகள் மூலம் இந்த இடம் புதிய பொலிவு ஏற்பட்டுள்ளது. புத்துணர்ச்சி பெற்றுள்ளது. இதன் முனைப்பகுதி அரிச்சல் முனை எனப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் இந்த இடங்களில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை முழுமையாக சுற்றி பார்த்துவிட்டு சுவையான மீன் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு மன நிம்மதியுடன் வரலாம்.
தற்போது சுற்றுலா செல்வதற்கு மிகவும் உகந்த இடமாக இந்த தனுஷ்கோடி பகுதி காணப்படுகிறது