
கர்நாடகா மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது சிக்மகளூரூ. பெங்களூரிலிந்து 240கிமீ, மைசூரில் இருந்து 183கி மீ தூரத்தில் உள்ளது.
சிக்மகளூரு அழகிய நீர்வீழ்ச்சிகள் நிறைந்த நகரம். மலையேற்றங்களுக்கு பிரபலமானது. இயற்கை ஆர்வலர்கள் இங்கு நிலவும் இதமான காலநிலை, மலைப் பகுதிகள், காபி எஸ்டேட் என பலவற்றை காண வருகின்றனர். ஆண்டு முழுவதும் சீசன் என்றாலும் மழைக்காலம் பார்க்க ரம்யமாக இருக்கும்.
சங்கர் நீர்வீழ்ச்சி
குறுகிய பாதை கொண்ட இந்த நீர்வீழ்ச்சி காடுகளுக்கே இடையே அமைந்துள்ளது.வழிநெடுக இயற்கையை ரசித்துக்கொண்டே பறவைகளின் விதவிதமான ஒலியில் நம் மனதை பறிகொடுக்கலாம். நீர் வீழ்ச்சி ஆர்ப்பரித்து கொட்டுவதை ரசித்து குளித்து வரலாம்.
மாணிக்யதாரா நீர்வீழ்ச்சி
பாபாபுடான் கிரி மலையில் அமைந்துள்ள ஒரு நீர்வீழ்ச்சி.இதன் அருகில் புதன் கிரி குகைகள் உள்ளன.இங்கு பலர் சாகச பயணம் மேற்கொள்வர்.200படிகள் இறங்கினால் புனித நீராடி வரலாம்.
ஹெப்பே நீர்வீழ்ச்சி
அடர்ந்த காட்டுப்பகுதியில் காப்பித் தோட்டங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது
கல்லத்தி அருவி
இந்த நீர்வீழ்ச்சியை காலையில் சென்று தரிசிக்க அழகோ அழகு தான்.மழை அதிகமுள்ள பகுதியாக லால் தாவரங்கள், விலங்குகள் நிறைய இருக்கும். தனியாக செல்லாமல் குழுவாக செல்ல நன்றாக அனுபவித்து மகிழலாம்.
முல்லியங்கிரி மலையேற்றம்.
பாபா புதன் மலைத்தொடரில் அமைந்துள்ள இது 1936மீட்டர் உயரம் கொண்டது. மிக உயரமான சிகரமான இங்கு வெப்பநிலை குறைவாக இருக்கும் பசுமையான புல்வெளிகள்,கரடுமுரடான பாதைகளை கொண்டது. சிறந்த மலையேற்ற அனுபவத்தை தரும்.
பாபா புதன் மலையேற்றம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது. இங்குள்ள சூஃபி துறவி சன்னதி புகழ்பெற்றது. இது குரு தத்தாத்ரேயர் வழிபாட்டுக்கு உகந்ததாக உள்ளது
இவை அனைத்தும் பெங்களூரிலிருந்து பேக்கேஜ் டிரிப்பாக சென்று வரலாம்.
பெங்களூரிலிருந்து 276கி மீ முல்லயனகிரி ஏற மூன்று மணி நேரமாகும். சிக்மகளூரிலிருந்து 20கி மீ.சிக்மகளூரை சுற்றி 100கி மீட்டருக்குள் இந்த அனைத்து சிகரங்களும் உள்ளன.
இந்த மலையேற்றங்களுக்கு சிறந்த மாதம் செப்டம்பர் _பிப்ரவரி மாதங்கள். குமார பர்வத மலை ஏற்றம்தான் கடினமானது. இதன் மலையடிவாரத்தில்தான் குக்கே சுப்ரமணியர் கோயில் உள்ளது.
இங்கு சென்றுவர மனோதிடம், உடல் உறுதி அவசியம்.
சென்ற மாதம் மைசூருக்கு ஒரு பங்கஷனுக்கு சென்றிருந்த போது சிக்மகளூரு சென்றிருந்தோம். எல்லாவற்றையும் பார்க்கவில்லை. அங்கிருந்த கைடு சொன்னதை தொகுத்து எழுதியுள்ளேன். ஜார் நீர்வீழ்ச்சி, சங்கர் நீர்வீழ்ச்சி பார்த்தோம். அருமையாக இருந்தது.