
ஒருவரின் மனதை பொறுத்து மட்டும் அமைவது அல்ல மகிழ்ச்சி. அவர்களுடைய வருமானம், சுகாதாரம், சுதந்திரம் மற்றும் அவர்களுடைய நாட்டின் நிலையை பொருத்தும் மகிழ்ச்சி அமைகிறது. அந்த வகையில் மகிழ்ச்சியற்ற முதல் 5 நாடுகளின் பட்டியலையும், இந்தியாவின் இடத்தையும் இப்பதிவில் காண்போம்.
1. ஆப்கானிஸ்தான்:
தாலிபான் ஆட்சிக்கு வந்த பிறகு பல உலக நாடுகளை கவலை கொள்ள வைத்த நாடாக ஆப்கானிஸ்தான் உள்ளது. ஏனெனில் இங்குள்ள பெண்களுக்கு எதிரான சட்டங்களான பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது ; ஆண்களை ஏறெடுத்து பார்க்கக்கூடாது; பெண் களுக்கான திருமண வயது 9; மீறினால் தண்டனை ;மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகம் நிகழும் நாடாக இருப்பதோடு பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பதால் ஆப்கானிஸ்தான் மகிழ்ச்சியற்ற நாடுகளின் பட்டியலில் 147 ஆவது இடத்தில் உள்ளது.
2.சியாரா லியோன்:
சியாரா லியோன் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளில் ஒன்றாகும். இந்த நாட்டில் உள்நாட்டு போர் நிலவி வருவதால் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது . அடிப்படை சேவைகளுக்கு அரசின் அணுகுமுறையும் ,வறுமையும் இந்த நாட்டில் மிக மோசமாக இருப்பதால் மகிழ்ச்சியற்ற நாடுகளின் பட்டியலில் 146 வது இடத்தில் உள்ளது .இதனால் மகிழ்ச்சியற்ற நாடுகளின் பட்டியலில் இந்த நாடு 146 வது இடத்தில் இருக்கிறது.
3. லெபனான்:
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான், மகிழ்ச்சியற்ற நாடுகளின் பட்டியலில் 145வது இடத்தில் இருக்கிறது. இந்த நாட்டில், அரசியல் ஊழலும் மக்களிடையே அமைதி இல்லாத நிலையும், இதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும் லெபனான் நாட்டு மக்களின் வாழ்க்கையை பாதித்துள்ளதால் மகிழ்ச்சியற்ற நாடாக இது உள்ளது.
4.லெசோதோ:
2.3 மில்லியன் மக்கள் வசிக்கும் தென்னாப்பிரிக்காவில் இருக்கும் லெசோதோ, மகிழ்ச்சியற்ற நாடுகளின் பட்டியலில் 144 வது இடத்தில் உள்ளது. இங்கு நடுத்தர வர்க்க மக்கள் அதிகம் உள்ளதால், நேர்மையான நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இந்நாடு தற்போது பெரும் பொருளதார சிக்கலில் உள்ளதால், பெரும் சவால்களை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
5. ஜிம்பாப்வே:
மிகவும் வறுமையான நாடுகளில் ஒன்றான ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வே எளிமையான நாடுகளில் ஒன்றாக இருந்தாலும் இங்கு திருட்டுகள், பகல் கொள்ளைகள் அதிகம். மேலும் பொருளாதாரத்தின் உறுதியற்ற தன்மை, பணவீக்கம் மற்றும் அரசாங்க நிர்வாக பிரச்னைகள் காரணமாக 1.63 கோடி பேர் வசிக்கும் ஜிம்பாப்வே மகிழ்ச்சியற்ற நாடுகளின் பட்டியலில் 143 ஆவது இடத்தில் உள்ளது.
அதெல்லாம் சரிங்க! நம்ம நாடு எந்த இடத்துல இருக்குன்னு கேட்கிறது காதுல விழுது. இந்த வருஷம் 2025 இல் 118 வது இடத்தில இருக்கோம். இதுவே போன வருஷம் 126 வது இடத்துல இருந்தோம். முன்னேற்றமா தாங்க இருக்கோம்.