சந்தோஷத்தை அள்ளித் தரும் பயணங்களின் மாயாஜாலம்!

Some journeys
Payanam articles
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

வாழ்வில் எவ்வளவோ திட்டமிட்டும், திட்டமிடாமலும் நிறைய பயணங்களை மேற்கொள்கிறோம். அனைவருமே ஏதோ ஒன்றை நோக்கி பயணிப்பவர்களாகவே இருக்கிறோம். குதூகலப்பயணம், அலுவலகத்திற்காக மேற்கொள்ளப்படும் பயணம், ஆன்மீகப் பயணம், கல்விப் பயணம், வணிகப் பயணம் என நம் வாழ்வில் நிறைய பயணங்களை மேற்கொள்கிறோம். பயணம் என்பது எவ்வாறான விளைவைக் கொண்டிருந்தாலும் அது அளிக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு இணையே கிடையாது. தாலாட்டும் வகையில் இருக்கும் ரயில் பயணங்களும், பைக் பயணங்களில் காற்றை எதிர்கொண்டபடி செல்லும் பயணமும் என்றுமே நம் மனதில் நீங்காத இடம் பிடித்துவிடும்.

வழக்கமான சூழலில் இருந்து விடுபட்டு புதிய இடங்களுக்கு செல்லும்பொழுது, சாலைகளில் வாகனங்கள் முன்னோக்கிச் செல்ல நம் நினைவுகளோ நம்மை பின்னோக்கி அழைத்துச் செல்லும். சிறுவயது பயணங்கள், கல்லூரியில் பயிலும் பொழுது மேற்கொண்ட பயணங்கள், காதல் கணவனுடன் கைப்பிடித்து நடந்து சென்ற பயணங்கள், வயதான நம் பெற்றோரை கைபிடித்து அழைத்துச் சென்ற சேத்திராடனங்கள் என வாழ்ந்த அந்த காலத்திற்குள் உள்ளிழுத்துச் சென்று நம்மை, நம் நினைவுகளை அதில் மூழ்கச் செய்துவிடும். சில பயணங்கள் மகிழ்ச்சியையும், சில பயணங்கள் ஆர்வத்தையும், வேறு சில பயணங்களோ தேடலையும் உண்டாக்கியதுண்டு.

நம்மை வேக வேகமாக கடந்து செல்லும் கண்ணுக்கு குளிர்ச்சியான பெரிய மரங்களும், சூரியனின் பொன்னிற கதிர்களும், கருமை படர்ந்த தார்ச்சாலைகளும், அந்தி மாலையில் சூரியனின் கதிர்கள் பட்டு மின்னும் தடாகங்களும், மலை உச்சிகளும் நாம் காணப் போகின்ற இடங்களுக்கான முன் தயாரிப்பை மனதில் விதைத்து விடும்.

ஆர்வத்தை தூண்டிவிடும். மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பயணமுமே அதற்கான வரலாற்றைக் கொண்டுள்ளது. பயணம் என்பது அங்குள்ள மக்களின் வாழ் வாதாரங்களையும், இயற்கை சூழல்களையும், அந்த நாட்டின் வளத்தையும், மற்றும் ஆட்சி முறையினையும் அறிய முடிகிறது.

சந்தோஷத்தை தரக்கூடிய பயணங்கள் நம் அறிவை பெருக்குவதுடன், நம்மை புத்துணர்வுடன் வைத்திருக்கவும் உதவுகிறது. பயணத்தின் வாயிலாக நாம் பிறப்பகுதிகளில் வாழும் மக்களின் பழக்கவழக்கங்களையும், நாகரீகத்தையும், அந்த இடத்தின் காலநிலை, தட்பவெப்பம், கலாச்சாரம் மற்றும் பண்பாட்டையும் அறிந்துகொள்ள முடிவதுடன் வாழ்க்கை அனுபவத்தையும் பெற உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
தமிழக எல்லையில் ஒரு சொர்க்கம்: தாளவாடியின் தனித்துவமான அம்சங்கள்!
Some journeys

மனிதர்கள் ஆதிகாலத்தில் இருந்தே பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். நாடோடிகளாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயர்ந்து இருக்கின்றார்கள். அப்போது அவர்கள் கண்டவை, கேட்டவைகளைப் பாடலாகவும், ஓவியமாகவும், எழுத்தாணி கொண்டு ஓலைகளில் உரைகளாகவும் படைத்திருக்கிறார்கள்.

பயணம் செய்வது என்பது என்றுமே வாழ்க்கையில் சலிப்பைத் தராது. பயணம் என்ற சொல்லே நமக்கு ஆர்வத்தையும், மகிழ்ச்சியையும், ஈடுபாட்டையும் உண்டாக்கும். பயணத்தின் பல்வேறு வடிவங்களான சுற்றுலா, செலவு, பிரயாணம் போன்ற சொற்களும் பயணத்தைத்தான் குறிக்கின்றன.

புதிய இடங்களை ஆராயவும், பலதரப்பட்ட மக்களை சந்திக்கவும், புதுப்புது விஷயங்களை கற்கவும், வெவ்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மக்களை சந்திப்பதன் மூலம் சகிப்புத்தன்மையை வளர்ப்பதும் பயணத்தின் நோக்கமாக இருக்கிறது. எனவே வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் பயணம் செய்ய மறக்கவேண்டாம்!

பயணத்தின் மொழி என்றுமே மகிழ்ச்சிதான்!

logo
Kalki Online
kalkionline.com