
பயணங்கள் என்பது எப்போதும் எல்லோருக்கும் ஒரு மகிழ்ச்சியான தருணம்தான். அதனை முழுமையாக அனுபவிக்க சில எளிய வழிகள்:
எடுத்துச் செல்லும் பொருட்களை மொபைல் போனில் டிக் மார்க் லிஸ்ட் போட்டு பட்டியலிட்டு, ஒரு முறைக்கு இரண்டு முறை சரிபார்த்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
பயணத்தின்போது நீங்கள் சந்திக்க வேண்டிய நபர்களுக்கு உங்களின் வரவை தெரிவித்து, அவர்களின் இருப்பையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
நீங்கள் தங்கும் ஹோட்டல் ரூம்களை முன்பதிவு செய்யும்போது, செல்லவேண்டிய இடங்களுக்கு அருகாமையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
ஒரு கத்தி, டார்ச் லைட், கொஞ்சம் செய்தித்தாள் மற்றும் பழைய டவல்கள் எடுத்துச் சென்றால், பயணத்தின்போது பயனுள்ளதாக இருக்கும்.
பட்டுச் சேலைகள் இருப்பின், அவற்றை நல்ல செய்தித்தாளில் சுற்றி, அதனுடன் அணியவேண்டிய உள்ஆடைகள், பிளவுஸ், கர்சீப் ஆகிய அனைத்தையும் ஒரு கவரில் செட் செய்து பேக் செய்யலாம். இதனால் பயண இடத்தில் Travel Bag-ல் தேடுதல் இருக்காது.
சுரிதார் வகைகள் என்றால், அதன் இணை ஆடைகளுடன் கவரில் வைத்துக்கொள்ளலாம்.
பேக் செய்யும்போதே, முதலில் பயன்படுத்த வேண்டிய ஆடைகள் மேலே அமையும்படியாக வைத்துக்கொள்ளவும்.
செல்லும் இடங்களின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப ஆடைகளை தேர்வு செய்யுங்கள். கோடைகாலத்தில் காட்டனில் கனமில்லாத ஆடைகள் சிறந்தவை.
எளிதில் உலரக்கூடிய துவாலைகளை தேர்ந்தெடுத்து கொள்ளவும்.
எல்லோருடைய பைகளிலும் 1–2 பிளாஸ்டிக் கவர் (polythene cover) வைத்துக்கொண்டால், ஈரமான ஆடைகளை தனியாக வைத்து விடலாம்.
லக்கேஜுடன் extra bag ஒன்றை வைத்துக்கொண்டால்.
போகும் வழியில் வாங்கும் பொருட்களை எளிதாக எடுத்துச் செல்லலாம்.
தேவையான மாத்திரைகள், தைலங்கள் போன்றவற்றை பயண நாள்களை விட 1–2 நாட்கள் கூடுதலாக எடுத்துச் செல்லவும்.
தொடர்ந்து மருந்து சாப்பிடுபவர்களாயிருந்தால் மருந்து சீட்டையும் உடன் எடுத்துச்செல்லுங்கள்.
பயணச்சீட்டு, ஆதார் அடையாள அட்டை, மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களையும் பிரிண்ட் செய்து, ஒவ்வொரு லக்கேஜிலும் எளிதாக எடுக்கும்படி வைத்துக்கொள்ளுங்கள்.
பயணத்தின்போது 10, 20, 50 ரூபாய் நோட்டுகள் தனியாக வைத்துக் கொண்டால், பண பரிவர்த்தனையின்போது, தவிர்க்க முடியாத இடங்களில் கொடுக்க உதவும்.