கோயம்புத்தூரில் ஒருநாளில் சுற்றிப்பார்க்கவேண்டிய இடங்களை தெரியுமா?

கோயம்புத்தூர் தென்னிந்தியாவின் நொய்யல் நதி கரையில் இருக்கும் ஒரு பழமையான நகரம். இங்கு நிறைய அருவிகள், பள்ளத்தாக்குகள் மற்றும் காடுகள் உள்ளன. ஆகையால் நீங்கள் கோயம்புத்தூர் சுற்றிப்பார்க்க வேண்டுமென்றால் முன்கூட்டிய திட்டம் போட்டு வைப்பது நல்லது. உங்கள் திட்டத்திற்கு உதவும் விதமாக கோயம்புத்தூரில் ஒரே நாளில் சுற்றுப்பார்க்கவேண்டிய எந்தெந்த இடங்களுக்கு செல்லலாம் என்பதைப் பற்றி பார்ப்போம்.
Places near Coimbatore for one day trip
Places near Coimbatore for one day trip

1. சிறுவாணி அருவி:

சிறுவாணி அருவி: Places near Coimbatore for one day trip
சிறுவாணி அருவி: Places near Coimbatore for one day trip

சிறுவாணி அருவி கோயம்புத்தூரிலிருந்து 35.4 கிலோமீட்டர் தூரம் உள்ளது. இது 1927ம் ஆண்டு கட்டப்பட்டது. மேலும் கடல் மட்டத்திலிருந்து 49.53 அடி உயரமும் 878.5 மீட்டர் அகலமும் கொண்டது. இந்த அருவியை சுற்றியுள்ள முத்துக்குளம் மலை அருவியின் அழகைக் கூட்டித்தரும்.

சிறுவாணி அருவிக்கு சென்றால் சிறுவாணி அணை, ஏராளமான பறவைகள் , ஜங்கிள் சபாரி ஆகியவற்றைப் பார்க்கலாம். இந்த அருவிக்கு அருகே பாலக்காடு கோட்டை, வெள்ளையங்கிரி மலை, தோனி அருவி, ஃபேண்டஸி பூங்கா ஆகிய இடங்கள் உள்ளன.

சிறுவாணி அருவிக்கு ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களில் செல்லலாம். நுழைவுக்கட்டணம் இல்லை. காலை 8 மணி முதல் 5 மணி வரை அங்கு சுற்றிப்பார்க்கலாம்.

2. மலம்புழா அணை மற்றும் பூங்கா:

மலம்புழா அணை மற்றும் பூங்கா Places near Coimbatore for one day trip
மலம்புழா அணை மற்றும் பூங்கா Places near Coimbatore for one day tripwww.keralatourism.org

கோயம்புத்தூரிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் கேரள தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ளது. இந்த பூங்கா ப்ளாஸ்டிக், டைல்ஸ், பாட்டில்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி வடிவமைத்திருப்பார்கள்.

மலம்புழா அணை மற்றும் பூங்கா Places near Coimbatore for one day trip
மலம்புழா அணை மற்றும் பூங்கா Places near Coimbatore for one day tripwww.keralatourism.org

மலம்புழா அணைக்கு ஆகஸ்ட் மற்றும் ஏப்ரல் மாதங்களில் செல்லலாம். இங்கு படகு சவாரி, மீன் பிடித்தல், மலை ஏறுதல் ஆகியவை செய்யலாம். இந்த இடத்திற்கு அருகே ஃபேண்டஸி பூங்கா, மலம்புழா பூங்கா, கோவை குற்றாலம் அருவி, திப்பு சுல்தான் கோட்டை ஆகியவை உள்ளன.

3. பலக்காடு கோட்டை:

Places near Coimbatore for one day trip
Places near Coimbatore for one day trip

லக்காடு கோட்டையை திப்பு சுல்தான் கோட்டை என்றும் அழைப்பார்கள். இது 18ம் நூற்றாண்டு ஹைதர் அலியால் மறுக்கட்டுமானம் செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள்:
சென்னையிலிருந்து 2 நாள் டூர் பிளான் பண்றீங்களா?அப்போ இந்த மூன்று இடங்களுக்கு கண்டிப்பா போங்க!
Places near Coimbatore for one day trip

அதன்பின்னர் அரசு அதைப் பராமரித்து வருகிறது. கோயம்புத்தூரிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த கோட்டை அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய கோட்டை.

இங்கு நவம்பர் மற்றும் மார்ச் மாதங்களில் செல்லலாம். ஆனால் கேமரா எடுத்துச் சென்றால் மட்டும் அதற்கான கட்டணம் உண்டு.

4. சைலண்ட் வேலி தேசிய பூங்கா:

சைலண்ட் வேலி தேசிய பூங்கா Places near Coimbatore for one day trip
சைலண்ட் வேலி தேசிய பூங்கா Places near Coimbatore for one day tripwww.keralatourism.org

இது கோயம்புத்தூரிலிருந்து 50 கிலோ மீட்டர் தூரமும் பலக்காட்டிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இங்கு சஃபாரி செய்யலாம் மற்றும் நிறைய காட்டு விலங்குகள் பறவைகள் ஆகியவற்றையும் பார்க்கலாம். இந்த பூங்காவிற்கு டிசம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களில் செல்லலாம் . இந்த இடத்திற்கு அருகே காஞ்சிரப்புழா அணை, கேரளம் குண்டு அருவி,விர்ஜின் பள்ளத்தாக்கு, மன்னார்க்காடு ஆகியவை உள்ளன.

5. லாஸ் நீர்விழ்ச்சி:

லாஸ் நீர்விழ்ச்சி Places near Coimbatore for one day trip
லாஸ் நீர்விழ்ச்சி Places near Coimbatore for one day tripdynamic-media-cdn.tripadvisor.com

கோயம்புத்தூரிலிருந்து 62 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பெரிய அருவி லாஸ் நீர்விழ்ச்சி. இது 30 அடி உயரம் கொண்டது. இந்த அருவியை சுற்றி குன்னூர் காடு உள்ளது. ஆகையால் இது சுற்றிப்பார்க்க ஏற்ற ஒரு சுற்றுலாத்தலம்.

இதையும் படியுங்கள்:
ஷாட் அண்ட் ஸ்வீட்டா ஒரு சுற்றுலா போக ஐடியா உள்ளதா... அப்போ இந்த இடங்கள் உங்களுக்குத்தான்!
Places near Coimbatore for one day trip

இங்கு செப்டம்பர் மற்றும் மே மாதங்களில் செல்லலாம். இந்த அருவிக்கு அருகே காமராஜ் சாகர் அணை, கல்ஹட்டி அருவி, அப்பர் பவாணி ஏரி, அவ்லாஞ்ச் ஏரி ஆகியவை உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com