வெளிநாடு செல்ல பிளான் பண்றீங்களா? இந்த இடங்களை மிஸ் பண்ணாதீங்க!

Payanam articles
planning to go abroad?

குறைந்த பட்ஜெட்டில் வெளிநாடு செல்லத் திட்டமிட்டால், இவற்றில் ஏதாவது ஒரு நாட்டை தேர்வு செய்து விடுமுறையில் சுற்றுலா சென்று பாருங்கள். முறையான திட்டமிடல் மற்றும் சேமிப்பு உங்கள் பயணத்தை எளிதாக்கும்.

1. சீனா

Payanam articles
சீனா

உலகில் புகழ்பெற்ற சில இடங்களுக்கு தாயகமாக இது உள்ளது. இங்கு அழகான வியப்பளிக்க வைக்கும் இயற்கை காட்சிகளும், அதிசயங்களை வழங்குகிறது. பெருஞ்சுவரிலிருந்து ஷாங்காய், பெய்ஜிங் போன்ற மாயாஜால நகரங்கள் வரை உலகில் அதிகம் பார்க்கப்படும் அழகான இடங்களில் சீனாவும் ஒன்றாகும்.

இங்கு  பெரிய சுவர், டெரகோட்டா வீரர்கள், ஜாங் ஜியாஜி அவதார் மலைகள், மஞ்சள் மலைகள், குய்லின் கார்ஸ்ட் நிலப்பரப்புகள், கலாச்சாரம், பழங்கால கோயில்கள் என உலகின் சிறந்த சுற்றுலாவில் ஒன்றாக விளங்குகிறது.

2. ஜப்பான்

Payanam articles
ஜப்பான்

உலகின் மிக அழகான சுற்றுலா இடங்களில் ஜப்பானும் ஒன்றாக விளங்குகிறது. செர்ரி பூக்கள், மவுண்ட் ஃபுஜி, புல்லட் ரயில்கள் மற்றும் பல நூற்றாண்டுகள் பழமையான கோயில்களுக்கு இது மிகவும் பிரபலமானது. அதன் இயற்கை அழகு கலாச்சாரம் உலகின் மிகவும் சின்னமாக மற்றும் அழகான இடங்களில் இது ஒன்றாக விளங்குகிறது.  புகழ் பெற்ற பல இடங்களை ஜப்பான் கொண்டுள்ளது. உலகில் பார்வையிட சிறந்த சுற்றுலா தலங்களில் இதுவும் ஒன்றாகும்.

3. இலங்கை

Payanam articles
இலங்கை

இலங்கை உலகில் மிக அழகான இடங்களைச் சுற்றுலா சென்று பார்க்கவேண்டிய இடங்களில் இதுவும் ஒன்றாகும். இங்கு சிகிரியா பாறை கோட்டை, கண்டி, எல்லா மிரிஸ்ஸா, காலி என விடுமுறையில் கடற்கரைகள், நிலப்பரப்புகள் உலகின் சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகின்றது.

4. பாலித்தீவு

Payanam articles
பாலித்தீவு

இங்கு கடற்கரைகள், கோயில்கள் நீர்வீழ்ச்சிகள் பசுமையான காடுகள் அனைத்திற்கும் பிரபலமானது. உலகல் மிக அழகான இடங்களில் ஒன்றாக உலகளவில் மிகவும்  பிரபலமாக விளங்குகிறது. இங்குள்ள இடங்கள் உலகின் சிறந்த சுற்றுலா இடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

5. சிங்கப்பூர்

Payanam articles
சிங்கப்பூர்

சிங்கப்பூர் உலகின் மிகவும் சுத்தமான எதிர்காலத்திற்கு ஏற்ற அழகான இடங்களில் இதுவும் ஒன்றாகும். மெரினா பே சாண்ட்ஸ், கார்டன்ஸ் பை தி பே, சென்டோசா ஆகியவற்றிற்கும் இந்த நாடு உலகிலேயே பாதுகாப்பான  சிறந்த சுற்றுலா செல்ல பயணிகள் இங்கு செல்ல மிகவும் விரும்புகிறார்கள்.

6. துபாய்

Payanam articles
துபாய்

துபாய் உலகில் மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் அழகான இடங்களில் இதுவும் ஒன்றாகும். வானளாவிய கட்டிடங்கள்,  கடற்கரைகள் பாலைவன சஃபாரிகள், ஷாப்பிங் இவற்றிற்கு மிகவும் பிரபலமானது இது. உலகின் பிரபலமான இடங்களில் இது உலகளாவிய அடையளமாகும். புர்ஜ் கலிஃபா , பாம் ஜுமேரா, துபாய் மால் போன்ற இடங்கள் உலகின் சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது.

7. நேபாளம்

Payanam articles
நேபாளம்

நேபாளம் உலகில் மிகவும் பார்க்க வேண்டிய இடங்கள் ஆன்மீகம் மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் இதுவும் ஒன்றாகும். எவரெஸ்ட் சிகரத்தையும் இங்கு சென்று பார்வையிடலாம். உலகில் பார்வையிட சிறந்த இடங்களில் இதுவும் ஒன்றாகவும். இங்கு மலையேற்ற பயணங்கள், யாத்திரைகள் என மிகச் சிறந்தசுற்றுலா தலங்களில் நேபாளமும் ஒன்றாகும்.

8. துருக்கி

Payanam articles
துருக்கி

துருக்கி ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாடாகும். இங்குள்ள இஸ்தான்புல் அரண்மனை மிகவும் பிரசித்தி பெற்றது. இங்குள்ள வளமான வரலாறு, துடிப்பான கலாச்சாரம், இயற்கை அழகு மற்றும் விருந்தோம்பல்  மக்கள் இதை உலகில் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக மாற்றிய தற்கு முக்கிய காரணமாக விளங்குகிறது.

9. தாய்லாந்து

Payanam articles
தாய்லாந்து

தாய்லாந்து சிறந்த கடற்கரைகள் விடுமுறையை அனுபவிக்கும்   இடங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு மிகவும் அழகிய கடற்கரைகள், கிராமப்புற பொழுது போக்கு இடங்கள், புத்தர் கோயில்கள், ஷாப்பிங் மால்கள் கொண்டு உள்ளது. இங்கு தாய் உணவுகள் மற்றும் பரபரப்பான உள்ளூர் சந்தைகள் ஆகியவை மிகவும் பிரபலமானவை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com