பூமியில் இருக்கும் சொர்க்கம் 'பூகா பள்ளத்தாக்கு' - வாங்க ஒரு விசிட் அடிக்கலாம்!

Puga valley
Puga valleyImage Credit: tripoto

இந்தியாவில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் பூகா பள்ளாத்தாக்கும் ஒன்றாகும். இந்த இடம் பார்ப்பதற்கு உண்மையாகவே உள்ளதா இல்லை கற்பனை உலகமா என்று தோன்றுமளவிற்கு அத்தனை அழகையும் தன்னுள் அடக்கி வைத்துக்கொண்டிருக்கும் பூமியில் ஒரு சொர்க்கமாக விளங்குகிறது.

பூகா பள்ளத்தாக்கு லடாக்கில் தென்கிழக்கு சாங்தாங் பள்ளத்தாக்கில் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. லடாக் செல்லும் போது கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடத்தில் பூகா பள்ளதாக்கும் உள்ளது. லடாக்கிலிருந்து 176 கிலோ மீட்டர் தொலைவிலே பூகா பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. இங்கே லடாக்கிலிருந்து வருவதற்கு 4 முதல் 5 மணி நேரம் ஆகும். இங்கே வெந்நீர் நீரூற்றும், களிமண் குளங்களும் அமைந்துள்ளது. அவற்றை காண்பதற்காகவே ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருடம் முழுவதும் வருகிறார்கள். இங்கிருக்கும் களிமண் குளத்திற்கும், வெந்நீர் நீரூற்றுக்கும் இயற்கையாகவே தோல் நோய்களை  போக்கக்கூடிய குணம் உள்ளது என்று நம்பப்படுகிறது.

பூகா பள்ளத்தாக்கில் இருக்கும் புவி வெப்ப சக்தி நிறைய சுற்றுலாப்பயணிகளை மட்டுமில்லாமல் விஞ்ஞானிகளையும் தன்பால் ஈர்க்கிறது. விஞ்ஞானிகளும் இந்த வெப்பசக்தியை பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். வெந்நீர் ஊற்றிலிருந்து ஒரு நாளைக்கு பலமுறை வரும் நீரானாது மேலும் அவ்விடத்தை அழகாக காட்டுகிறது. பூகா பள்ளத்தாக்கு 30 கிலோ மீட்டர் நீளமாகும். இவ்விடமானது வனவிலங்கு ஆர்வலர்களுக்கும், இயற்கை விரும்பிகளுக்கும் ஏற்ற இடமாக அமைந்துள்ளது.

 பூகா பள்ளத்தாக்கிற்கு அதிகமாக மக்கள் கூட்டம் வருவதற்கான முக்கிய காரணம், இங்கிருக்கும் வெந்நீர் நீரூற்று தான். இதில் சல்பர், போராக்ஸ் ஆகியன அதிகமாக உள்ளது. சுமாதாங் வெந்நீர் நீரூற்றை தூரத்திலிருந்து கூட காண முடியும் ஏனெனில் அது அதிகமாக நீரை வெளியிடுகிறது. இந்த நீரானது தோல்நோய்களை குணப்படுத்தக்கூடியது என்று நம்புகிறார்கள்.

பூகா பள்ளத்தாக்கு அதன் அபரிமிதமான அழகுக்கு பெயர் போனதாகும். சாம்பல் நிற மலைகளும், குன்றுகளும் பச்சைபசேல் என்ற புல்வெளியும் இதன் அழகை இன்னும் கூட்டுகிறது. கேம்பிங், புகைப்படம் என்று இந்த இடத்திற்கு மக்கள் கூட்டம் வந்து குவிந்த வண்ணம் உள்ளது.

சாங்தாங் வனவிலங்கு சரணாலயம்  சாங்தாங் பீடபூமியில் 4000 முதல் 9000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு அரிய வகையான பூக்களும், விலங்குகளும் உள்ளது.

சோ மோரிரி (Tso moriri) ஏரி கடல் மட்டத்திலிருந்து 4522 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரி அமைதியாக இயற்கையோடு கலந்து இருக்கக்கூடிய அழகிய ஏரியாகும். பனிப்படர்ந்த மலைகளுக்கு நடுவே அமைந்திருக்கும் ஏரியை பார்ப்பதற்கு கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
உறையும் அதிசய நீர்வீழ்ச்சி இந்தியாவில் எங்குள்ளது தெரியுமா?
Puga valley

சோ கார் (Tso kaur) லடாக் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள உப்பு ஏரி தான். இதை வெள்ளை ஏரி என்றும் அழைப்பார்கள். இந்த ஏரியில் உப்புகள் படிந்திருப்பதால் வெண்மையாக காட்சியளிக்கிறது.

நயோமா என்னும் கிராமம் இன்டஸ் நதிக்கரையோரம் அமைந்துள்ளது. இந்த கிராமம் மிகவும் அமைதியான மற்றும் அழகானதாகும். இங்கே 100 வருட பழமையான புத்தமடாலயம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பூகா பள்ளத்தாக்கு வாழ்க்கையில் ஒருமுறையாவது வந்து ரசித்துவிட்டு செல்லவேண்டிய இடங்களுள் ஒன்று என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com