டேராடூனில் உள்ள கொள்ளையர் குகை (Robbers Cave) ஒரு த்ரில் அனுபவம்!

Robbers Cave
Robbers Cave

குச்சுபானி (Gucchupani Robbers Cave) "கொள்ளையர் குகை" என்று அழைக்கப்படும் இந்த குகை இயற்கையாக உருவானது. இந்த குகை இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் டேராடூனில் உள்ள பிரபலமான சுற்றுலா தலமாகும். அனர்வாலா கிராமத்திற்கு அருகில் உள்ள விஜய்பூரில் உள்ளது. 

டேராடூனின் புகழ்பெற்ற  சுற்றுலாத்தலமான இந்த கொள்ளையர் குகை ரிஷிகேஷிலிருந்து 53 கிலோமீட்டர் தொலைவிலும், ஹரித்வாரிலிருந்து 61 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

இதையும் படியுங்கள்:
தேவ மருந்து தவசிக்கீரை!
Robbers Cave

சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் இந்த குகை 600 மீட்டர் நீளமுள்ளது. இந்த  குகை இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்டமான குகையானது பத்து கிலோமீட்டர் உயரத்தில் மிகவும் உயரமான வீழ்ச்சியை கொண்டுள்ளது. நடுவில் கோட்டை சுவர் அமைப்பு ஓன்றுள்ளது.

இங்கு ஒரு நீரோடை நிலத்தடியில் மறைந்து சில மீட்டர் தொலைவில் மீண்டும் தோன்றுகிறது. மலைகளால் சூழப்பட்ட  இயற்கையாக அமைந்த இந்த குகையின்  அழகை ரசிக்கவும், நீரோடை வழியாக நடந்து செல்லவும் என மிக ரம்யமாக அமைந்த இடம். இந்த குகை டூன் பள்ளத்தாக்கின் டெஹ்ரா பீடபூமியில் உள்ள சுண்ணாம்புக்கல் பகுதியில் உருவாக்கப்பட்ட மிகக் குறுகிய பள்ளத்தாக்கை கொண்டுள்ளது.

குளிர்ந்த நீரோடை
குளிர்ந்த நீரோடை

கொள்ளையர் குகை - பெயர் காரணம்:

முந்தைய நாட்களில் இந்த குகை கொள்ளையர்கள் கொள்ளையடித்த பின்பு தஞ்சம் புகும் சிறந்த  மறைவிடமாக இருந்தது. எனவே இதனை ஆங்கிலேயர்கள் ராபர்ஸ் குகை என்று பெயரிட்டனர். இந்த குகையின் உட்புறத்தில் குகையின் வழியாக குளிர்ந்த நீரோடை ஓடுகிறது. இந்த நீரோடை வழியே செல்ல அங்கே ஒரு அழகான சிறிய நீர்வீழ்ச்சியை காணலாம்.

ராபர்ஸ் குகை...
ராபர்ஸ் குகை...

இந்த ராபர்ஸ் குகைக்கு செல்ல சிறந்த நேரம் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையாகும். உண்மையில் ஒரு த்ரில்லிங்கான அனுபவத்தைக் கொடுத்தது இந்தப் பயணம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com