தேவ மருந்து தவசிக்கீரை!

தேவ மருந்து தவசிக்கீரை!
https://ayurvedham.com

வசுக் கீரையில் வைட்டமின்கள் ஏ, பி, பி-2, சி, டி, கே போன்றவை நிறைந்துள்ளதால், இதற்கு மல்டி வைட்டமின் கீரை மற்றும் ஹார்லிக்ஸ் கீரை என்ற பெயர்களும் உண்டு. தவசுக் கீரையில் நார்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நீர்ச்சத்து, மாவுச்சத்து போன்ற சத்துப் பொருட்களும், சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாது பொருட்களும், தயமின், ரிபோஃபுளேவின் நிகோடினிக் அமிலங்களும்  அடங்கியுள்ளன.

பெண்களுக்கு மாதவிடாய் கால கோளாறுகள், வெள்ளைப்படுதலை கூட இந்த தவசுக்கீரை சீர் செய்கிறது. தொடர்ந்து தவசுக்கீரையை உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள கெட்ட இரத்தங்கள் வெளியேற்றப்பட்டு இரத்தத்தில் ஏற்படும் கோளாறுகள் நீங்கும். புது இரத்தம் சுரப்பதும் அதிகரிக்கும்.

இந்தக் கீரையில் கால்சியம் சத்து மிகுந்துள்ளதால், சிறுவர்களின் எலும்பு வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, முதியோர்களின் எலும்பு தேய்வு, சுண்ணாம்பு பற்றாக்குறையை சீர் செய்யும். களைப்பாக இருக்கும் போது ஐந்து, ஆறு தவசு இலைகளை பச்சையாக  மென்று தின்றால் களைப்பு நீங்கும், புத்துணர்வு ஏற்படும்.

குழந்தைகளுக்கான சளி தீர ஒரு ஸ்பூன் அளவுக்கு, தவசு இலைச் சாற்றை எடுத்து, சம அளவு தேனுடன் கலந்து சாப்பிடக் கொடுக்க வேண்டும். தவசுக்கீரையை இரண்டு மிளகுடன் சேர்த்து அரைத்து, நெற்றியில் பற்று போட்டால், ஒற்றைத் தலைவலி காணாமல் போய் விடும். தவசுக்கீரை சிறுநீரகக் கற்களைக் கரைப்பதோடு மட்டுமின்றி, சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதையும் தடுக்கிறது.

இதையும் படியுங்கள்:
லகு நாரியல் என்றால் என்னவென்று தெரியுமா?
தேவ மருந்து தவசிக்கீரை!

இக்கீரையை பச்சையாக மென்று சாப்பிட வாய்ப்புண் உடனடியாகக் குணமாகும். இதில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் அதிகம் காணப்படுவதால், பற்கள் மற்றும் எலும்புகளுக்கு வலிமையை கொடுக்கும். தவசு இலைச்சாற்றை உட்கொண்டால் மூக்கில்  நீர்வழிதல், உள் நாக்கு இருமல், இரைப்பு போன்றவை குணமாகும்.

இதில் இரும்புச்சத்து உள்ளதால் ஹீமோகுளோபின் அளவு கூடும். இரத்த சோகை குணமாகும். குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க வல்லது தவசுக் கீரை. தொடர் இருமலால் அவதிப்படுபவர்கள், தவசுக் கீரையின் சாறை, தேனுடன் கலந்து சாப்பிட, நல்ல நிவாரணம் கிடைக்கும்.

தவசுக்கீரையை அரைத்து சாறுபிழிந்து காலையும் மாலையும் குடித்து வந்தால், ஆஸ்துமா நோய் மறையும். பெண்களின் பிரசவத்திற்கு பிறகு  மீதமுள்ள அழுக்குகள் கர்ப்பப்பையை விட்டு நீங்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com