இந்தியாவின் எலும்புக்கூடு ஏரியை சுற்றி வருவோமா?

Shall we circumnavigate India's Skeleton Lake?
payanam articles
Published on

த்தரகாண்ட் மாநிலத்தில் முற்றிலும் எலும்பு கூடுகளால் நிறைந்த  ரூப்குண்ட் ஏரி, எலும்புக்கூடு ஏரி என அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 5,029 மீட்டர் உயரத்தில், கர்வால் மலைகளுக்கு அருகில் திரிசூல் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த 'ரூப்குண்ட் ஏரி' இந்தியாவின் உயரமான ஏரிகளில் ஒன்றாகும். 

மற்ற சாதாரண ஏரிகளைப்போல அல்லாமல் இந்த ஏரி  நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள் நிரம்பி இருப்பது இன்றளவும் மர்மமான ஏரியாகத்தான் பார்க்கப் படுகிறது. 1942 ல் இந்திய வன அதிகாரியான எச் கே மத்வால், என்பவர் ரூப்குண்ட் ஏரி மற்றும் அதைச் சுற்றி பதுக்கி கிடந்த நூற்றுக்கணக்கான மனித எலும்புக்கூடுகளைக் கண்டபோதும் இது யாருடையது என்பதற்கான சரியான காரணம் இன்று வரை கிடைக்கவில்லை. மாறாக இந்த இடம் ஒரு மிகப்பெரிய சுற்றுலா ஈர்ப்பாக இப்போது மாறி இருக்கிறது.

ஆண்டு முழுவதும் உறைந்து கிடக்கும் ஏரி, விரிவடைந்து சுருங்கினாலும் பனி உருகும்போது மட்டுமே எலும்புக்கூடுகள் தெரியும், சில நேரங்களில் எலும்புக் கூடுகள் இணைக்கப்பட்டு நன்கு ஒட்டிக்கொண்டு இருக்கும். இன்றுவரை, 600-800 பேரின் எலும்புக்கூடுகள் இங்கு இணைக்கப்பட்டு நன்கு ஒட்டிக்கொண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுளது. உள்ளூர் அரசாங்கம் இதை "மர்ம ஏரி" என்று விவரிக்கிறது.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக மானுடவியலாளர்களும் விஞ்ஞானிகளும் எச்சங்களை ஆய்வு செய்ததின் அடிப்படையில் ஒரு இந்திய ராஜா, அவரது மனைவி மற்றும் அவர்களது உதவியாளர்கள் அனைவரும் இடம் பெயரும்போது 870 ஆண்டுகளுக்கு முன்பு பனிப்புயலில் சிக்கி இறந்ததாக கிடைக்கும் தகவல் மட்டுமே மிச்சம்.

பெரும்பாலோர், 35 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அனைவரும் சராசரி உயரத்தை விட அதிகம் எனவும் மரபணு ரீதியாக வேறுபட்டவர்கள் என்பதையும் அவர்களின் இறப்புகள் ஆயிரம் ஆண்டுகள் வரை பிரிக்கப்பட்டதையும் கண்டறிந்துள்ளனர். இதில் குழந்தைகள் இல்லை என்பது ஆச்சரியப்படக்கூடிய தகவல்.

இதையும் படியுங்கள்:
கண் கவர் கடற்கரை நகரங்களுக்கு போலாமா..?
Shall we circumnavigate India's Skeleton Lake?

நாளடைவில் உலகம் முழுக்க பிரபலமான இந்த எலும்புக்கூடு ஏரியை பார்க்க உலகின் பல்வேறு இடங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் உத்தரகாண்ட்டிற்கு வர ஆரம்பித்தனர். அதனால் அரசாங்கமே இதனை சுற்றுலாத் தலமாக மாற்ற முடிவெடுத்து இங்கு ட்ரெக்கிங் செயல்பாடுகளுக்கு ஏற்பாடு செய்தது. 

இரண்டு ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ள இந்த ஏரியின் ஆழம் வெறும் ஒன்பது அடி மட்டுமே. சமீபத்தில் இந்த ஏரியை பார்வையிட்ட பாதுகாப்பு அதிகாரிகள், இந்த ஏரியின் அளவு சுருங்கி வருவதாகவும் பருவநிலை மாற்றமே இதற்கு காரணம் எனவும் நம்பப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com