விவேகமான விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் குறித்து காண்போமா?

Long distance travel
vivek express rail
Published on

நீண்ட தூர பயணம் என்றவுடன் நம் அனைவர் மனதிலும் முதலில் வருவது ரயில் பயணம்தான். இதற்கு காரணம் குறைந்த கட்டணமும், அதிக வசதிகளும் கொண்டதாக இருப்பதால் பெரியவர்கள்  முதல் சிறியவர்கள் வரை விரும்பும் பயணமாக ரயில் பயணம் இருக்கிறது. அத்தகைய ரயில் பயணங்களில் அதிக தூரம் செல்லும் முதன்மையான ரயிலாக விவேக் எக்ஸ்பிரஸ் இருக்கிறது. அந்த விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் குறித்து இப்பதிவில் காண்போம்.

இந்தியாவின் வடகிழக்கு எல்லையான அசாம் மாநிலத்தின் திப்ரூகரில் தொடங்கி தெற்கு எல்லையான  கன்னியாகுமரி வரை விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் செல்கிறது. இதன் மொத்த தூரம் சுமார் 4,273 கிலோமீட்டர்கள் ஆகும். இந்த ரயில், இந்தியாவின் மிக நீண்ட தூரம் செல்லும் ரயில்களில் ஒன்றாகும் என்பது பெருமைக்குரியது.

திப்ரூகரில் இருந்து சனிக்கிழமை இரவு 10.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மூன்று நாள் மற்றும் நான்கு இரவுகள் பயணித்து, புதன்கிழமை காலை 11 மணிக்கு கன்னியாகுமரிக்கு சென்றடைகிறது. இது சுமார் 80 மணி 15 நிமிடங்கள் பயணிக்கிறது. மறுமார்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து வியாழக்கிழமை இரவு 11மணிக்கு புறப்பட்டு, திங்கள் காலை 7.15 மணிக்கு திப்ரூகரை அடைகிறது.

விவேக் எக்ஸ்பிரஸில் மொத்தம் 21 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதில் குளிர்சாதன வசதியுள்ள பெட்டிகள், படுக்கை வசதி உடையவையும், பொது பயணிகள் வகை பெட்டிகளும் உள்ளன. இதில் அதிகபட்சமாக 1,800 பயணிகள் வரை ஒரே நேரத்தில் பயணிக்க முடிகிறது.

இந்த ரயில் தனது பயணத்தில் 55 இடங்களில் நின்று செல்கிறது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஒரிசா, மேற்குவங்கம், பீகார், அசாம் மற்றும் நாகாலாந்து போன்ற மாநிலங்களில் உள்ள மக்கள் இதில் பயணிக்கின்றனர்.

பயண வழித்தடம் மிகவும் விரிவாகவும், பல்வேறு மாநில கலாசாரங்களை இணைப்பதுபோலவும் அமைந்துள்ளது. இது கன்னியாகுமரியிலிருந்து நாகர்கோவில் வழியாக கேரளாவிற்கு  செல்கிறது. அங்கிருந்து திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், கோவை, ஈரோடு, சேலம் வழியாக ஆந்திராவைஅடைகிறது.

இதையும் படியுங்கள்:
இந்தியாவின் மகிழ்ச்சியான 7 நகரங்களைத் தெரியுமா?
Long distance travel

அதன்பின் புவனேஷ்வர், அசன்சோல், சிலிகுரி, குவாஹாத்தி, திமாபூர் வழியாக கடைசியாக திப்ரூகரை அடைகிறது. இவ்வாறான பயணம் இந்தியாவின் புவியியல் மற்றும் பண்பாட்டை  ஒரே பயணத்தில் அனுபவிக்கச் செய்யும் தன்மை கொண்டதாக இருக்கிறது.

இந்த பயணம் வெறும் இடமாற்றம் மட்டுமல்ல, இது இந்தியாவின் வளம், பரப்பளவு மற்றும் மக்கள் வாழும் மாறுபட்ட சூழல்களின் சிறந்த பிரதிபலிப்பாக இருக்கிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தால் அது வெறும்  பயணமாக இல்லாமல் பல்வேறு கலாசார அனுபவங்களை  அறியச் செய்யும் என்பதின் சற்று ஐயம் இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com