இந்தியாவின் மகிழ்ச்சியான 7 நகரங்களைத் தெரியுமா?

Happy life articles
7 Happy city in india
Published on

கிராமப்புறத்தில் மட்டுமே மகிழ்ச்சிக்கான வாழ்க்கை வாழ முடியும் என்கிற பொதுவான கருத்து உள்ளது. ஆனால் பல இந்திய நகரங்கள் அவற்றின் பரபரப்பான தெருக்கள், துடிப்பான கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய கைவினைப் பொருட்களுக்கு பெயர் பெற்றவை. ஒரு நகரின் மகிழ்ச்சி என்பது அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம், நல்வாழ்வு, திருப்தி போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது. இந்தியாவில் உள்ள ஏழு மகிழ்ச்சியான நகரங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்

1. கான்பூர்

இந்தியாவின் மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியலில் முதலாவதாக இருப்பது கான்பூர். இது உலகின் மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே இந்திய நகரம் என்பது இதன் சிறப்பு. பாரம்பரியம் மற்றும் நவீனத்துவம் இரண்டும் கலந்த கலவையாகும். அருமையான விருந்தோம்பல் மற்றும் சுவையான தெரு உணவுகளுக்கு பெயர் பெற்றது.

இந்த நகரம்  மற்ற பெருநகரங்களை ஒப்பிடும்போது கான்பூரில் வாழ்க்கைச் செலவு குறைவாக இருக்கிறது. இங்குள்ள மக்கள் அதிகப்படியான நிதி நெருக்கடி இல்லாமல் வசதியான வாழ்க்கையை வாழ முடிகிறது. மாறுபட்ட கலாச்சார தாக்கங்கள் ஒரு துடிப்பான சூழலை வழங்குகின்றன. இது ஒரு பாரம்பரியமான தொழில் துறை மையமாக இருப்பதால், சிறந்த பொருளாதார வாய்ப்புகளுக்கும் வழி வகுக்கிறது.

2. ஜெய்ப்பூர்

இந்தியாவின் இளஞ்சிவப்பு நிறம் நகரமான ஜெய்ப்பூர் நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களில் ஒன்றாக ராஜஸ்தானின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. அதன் வளமான பாரம்பரியம், வண்ணமயமான சந்தைகள், நவீன உட் கட்டமைப்பு, உற்சாகமான சூழல், அன்பான விருந்தோம்பல் ஆகியவற்றுக்கு பெயர் பெற்றது அற்புதமான கோட்டைகள், ருசியான உணவு வகைகள், பாரம்பரிய மற்றும் நவீனத்துவமும் கலந்த கலவை என உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.  

மெகா நகரங்களின் பரபரப்பான வேகத்துடன் ஒப்பிடும்போது ஜெய்ப்பூர் மிகவும் நிம்மதியான சூழலை வழங்குகிறது. மன அழுத்தத்தைக் குறைத்து மகிழ்ச்சியான வாழ்க்கையை வழங்குகிறது. பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரமாகும். குற்றவிகிதங்கள் மிகக்குறைவு. ‌

இதையும் படியுங்கள்:
Google மேப்பில் உள்ள உண்மையான நிறங்களின் அர்த்தம் தெரிஞ்சுக்கங்க!
Happy life articles

3. அகமதாபாத்

வணிக வாய்ப்புகளை ஏராளமாகக் கொண்டுள்ள அகமதாபாத் அதன் துடிப்பான கலாச்சாரம், வரலாற்று அடையாளங்கள், பாரம்பரிய மற்றும் நவீன குஜராத்தின் உணவு வகைகள் போன்றவற்றுக்கு பெயர் பெற்றது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய நகரமான அகமதாபாத் பரபரப்பான சிஜி சாலை முதல் அமைதியான சபர்மதி ஆசிரமம் வரை அழகான இடங்களைக் கொண்டுள்ளது. ஏராளமான வணிகம் மற்றும் தொழில் முனைவோர் வாய்ப்புகளை வழங்குகிறது. நகர்ப்புற மேம்பாடு மற்றும் தூய்மையைப் பராமரித்தல் போன்றவை ஒட்டுமொத்த வாழ்க்கைச் சூழலை மேம்படுத்துகிறது. 

4. சண்டிகர்;

இந்தியாவின் முதல் திட்டமிடப்பட்ட நகரம் சண்டிகர். பசுமையான இடங்கள், நன்கு பராமரிக்கப்படும் உட்கட்டமைப்பு, உயர்தர வாழ்க்கை தரத்துடன் சிறந்து விளங்குகிறது. சுத்தமான மற்றும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட நகர்ப்புற சூழலை வழங்குவதால் இங்குள்ள மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். 

5. சென்னை;

வளமான கலாச்சாரம், வரலாறு மற்றும் அழகான கடற்கரை போன்றவற்றைக் கொண்டுள்ள இந்த நகரம் அமைதியான வாழ்க்கை முறையை வழங்குகிறது. பெங்களூரு மற்றும் மும்பை போன்ற நகரங்களை ஒப்பிடும்போது இங்கு வாழ்க்கை செலவு குறைவாகவே உள்ளது. செழிப்பான ஆட்டோ மொபைல், ஐ. டி மற்றும் உற்பத்தித் துறைகளுடன் சென்னை நிலையான பொருளாதார வாய்ப்புகளை வழங்குகிறது.

6. புனே; 

இனிமையான காலநிலை, ஏராளமான கல்வி நிறுவனங்களால் நாடு முழுவதும் இருந்து மாணவர்களை ஈர்க்கிறது. திறமையான பணியாளர்களை உற்பத்தி செய்து பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கிறது. ஐடி மற்றும் ஆட்டோமொபைல் தொழில்களில் குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. இதனால் இங்கிருக்கும் மக்களுக்கு பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தொழில் வளர்ச்சியை வழங்குகிறது.

இதையும் படியுங்கள்:
பூக்களின் பள்ளத்தாக்கு சாமோலி - இந்தியாவின் தனித்துவம் வாய்ந்த அழகியத் தோட்டங்கள் 6 !
Happy life articles

7. மங்களூர்;

புனே போலவே மங்களூரும் அதன் கல்வி நிறுவனங்கள் மற்றும் இனிமையான கால நிலைக்கு பெயர் பெற்றது. இதன் அழகான அமைதியான கடற்கரைகள் நிம்மதியான வாழ்க்கை முறை இங்கு வாழும் மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் மகிழ்ச்சி தருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com