பூமியின் மூன்றில் ஒரு பகுதியை ஆக்கிரமித்திருக்கும் காடுகள் உலகின் நுரையீரலாக செயல்பட்டு, ஏராளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் தாயகமாக விளங்குகின்றன. இந்த உலகில் உள்ள 10 மிகப்பெரிய காடுகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய வெப்பமண்டல மழைக்காடாகும். 5.5 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பிரேசில், பொலிவியா, கொலம்பியா, ஈக்வடார், பெரு, கயானா, சுரினாம், வெனிசுலா மற்றும் பிரெஞ்சு கயானா ஆகிய ஒன்பது நாடுகளில் பரவியுள்ளது. இந்தக் காடு 2.5 மில்லியனுக்கும் அதிகமான பூச்சிகள், 40,000 தாவர இனங்கள், 1,300 பறவை இனங்கள் மற்றும் 430 பாலூட்டிகள் உட்பட பரந்த அளவிலான பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு தாயகமாக உள்ளது.
இது உலகின் இரண்டாவது பெரிய வெப்ப மண்டல மழைக்காடு. இங்கு அரியவகை தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் உள்ளன. காட்டு யானை மற்றும் போனோபோ என்கிற அழிந்து வரும் உயிரினமும் இங்குள்ளது இங்குள்ள மக்களுக்கு தேவையான உணவும் மருந்தும் இந்த காடுகளில் கிடைக்கிறது.
சிலி மற்றும் அர்ஜென்டினா முழுவதும் பரவியுள்ள இந்தக்காடுகள் தோராயமாக 248,100 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளன. உயரமான மரங்களுக்கு பெயர் பெற்றவை. உள்ளூர் உயிரினங்களுக்கு தாயகமாக விளங்குகின்றது.
உலகின் மிகப்பெரிய வடக்குக் காடான இது கனடா, ரஷ்யா மற்றும் வடக்கு ஐரோப்பா முழுவதும் 11.5 மில்லியன் சதுர கிலோமீட்டருக்கும் அதிகமாக பரவியுள்ளது. ஃபிர் மற்றும் ஸ்ப்ரூஸ் போன்ற ஊசியிலை மரங்களால் நிறைந்துள்ள இந்தப் பகுதி நீண்ட, குளிர்ந்த குளிர்காலம் மற்றும் குறுகிய கோடைகாலங்களை கொண்டுள்ளது. இது கடமான்கள், கரடிகள் மற்றும் ஓநாய்கள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் தாயகமாகும்.
ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள டெய்ன்ட்ரீ மழைக்காடு, நாட்டின் மிகப்பெரிய தொடர்ச்சியான வெப்பமண்டல மழைக்காடுகளின் ஒரு பகுதியாகும். சுமார் 1,200 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. மற்றும் நம்பமுடியாத பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கு இனங்களுக்கு தாயகமாகும்.
அமெரிக்காவின் மிகப்பெரிய காடான டோங்காஸ், அலாஸ்காவின் பெரும்பகுதியை உள்ளடக்கியது. 68,062 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்து, உயர்ந்த மரங்களால் வகைப்படுத்தப்படுகிறது. கரடிகள், சால்மன் மீன்கள் மற்றும் வழுக்கை கழுகுகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளைப் பராமரிக்கிறது.
உலகின் மிகப்பெரிய சதுப்புநிலக்காடாகும். இந்தியா மற்றும் பங்களாதேஷ் முழுவதும் 3,860 சதுர மைல் பரப்பளவில் அமைந்துள்ள இது, ராயல் பெங்கால் புலியின் தாயகமாகும். யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான சுந்தரவனக்காடுகள், புள்ளிமான்கள், உப்பு நீர் முதலைகள், காட்டுப்பன்றிகள், கங்கை டால்பின்கள் மற்றும் 260 க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் உட்பட தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் வளமான பல்லுயிர் பெருக்கத்தைக் கொண்டுள்ளது.
இது தென்மேற்கு ஜெர்மனியில் உள்ள அடர்ந்த காடுகள் நிறைந்த மலைப்பகுதி. பிரெஞ்சு மற்றும் ஸ்விஸ் எல்லைகளுக்கு அருகில் அமைந்துள்ளது. இதிலுள்ள இருண்ட பசுமையான ஃபிர் மற்றும் பைன் மரங்களால் இந்த காட்டிற்கு பிளாக் பாரஸ்ட் என்று பெயர் வந்திருக்கலாம்
சுமார் 6.4 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் அமைந்துள்ளது. அரிய வகை கரடி இனங்கள் மற்றும் அரிதான விலங்கினங்களுக்கு தாயகமாக விளங்குகிறது.
பப்புவா நியூகினியா மற்றும் இந்தோனேசியாவை உள்ளடக்கிய இந்தக்காடு 5,45000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. 1000க்கும் மேற்பட்ட பழங்குடியினரின் தாயகமாகும். உலகில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் பிடித்தமான பகுதியாகும்.