
தமிழ்நாட்டின் வேகமாக வளரும் நகரமான தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையை இந்திய ரயில்வே பல முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது. அதில் குறிப்பிடத்தக்க அம்சங்களுடன் அழகாக இருக்கும் 5 வழித்தடங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1.பாலக்காடு - கோவை வழித்தடம்:
பசுமையான வெப்ப மண்டல ஆறுகளால் சூழப்பட்ட கேரளாவின் பாலக்காடு - கோவை வழித்தடம், மேற்குத் தொடர்ச்சி மலை வழியாகச் செல்லும் பாலக்காடு கணவாய்க்கு இட்டுச் சென்று உங்களை தமிழ்நாட்டிற்குள் கொண்டு வருகிறது. தேயிலை தோட்டங்கள், நெல் வயல்கள் மற்றும் மசாலாப் பொருட்களின் தோட்டங்கள் என பயணிகள் ரசிக்கக்கூடிய இடங்களை கொண்டுள்ளது .கேரளாவின் பசுமைக்கும் தமிழ்நாட்டின் வறண்ட நிலப்பரப்புக்கும் இடையிலான வேறுபாடு தவறவிடக்கூடாத ஒன்று.
2.ஹைதராபாத் - கோவை எக்ஸ்பிரஸ்:
தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்திலிருந்து கோவை வரையிலான ரயில் பயணம் தமிழ்நாடு மாநிலத்துடன் இணைக்கிறது. ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு இரண்டையும் கடக்கும்போது இது வழங்கும் கண்கவர் காட்சிகளையும், கோயம்புத்தூரின் எல்லைக்குள் இருக்கும்போது வறண்ட பீடபூமிகள், நதிப் படுகைகள் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் பயிர்களையும் இயற்கையின் இந்த அழகு பயணத்தில் பயணிகள் காணலாம்.
3.பெங்களூரு - கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ்:
சதாப்தி ரயில் எங்கும் நிற்காது என்றாலும் பெங்களூருவிலிருந்து கோவைக்கு ரயில் பயணிக்கும் போது காடுகள், விவசாய நிலங்களின் இயற்கையை கண்டு ரசிப்பதோடு குறிப்பாக சேலத்தில் இருந்து ஈரோடு வரை மலைகளையும் பெரிய பயிர் நிலைகளையும் கண்டு ரசிக்கலாம். தொழில் முனைவோரின் விருப்பமாக இருக்கும் இந்த ரயில் மன அழுத்தத்தை குறைக்கும் அற்புதமான ரயிலாக உள்ளது.
4.மங்களூர் - கோவை வழித்தடம்:
இயற்கையின் அழகை தன்னகத்தே கொண்ட மங்களூர்-கோவை வழித்தடத்தில் தூத்சாகர் அருவிக்கு அருகில், அடர்ந்த காடுகள், அருவிகள் மற்றும் மலைகள் வழியாக ரயில் படிப்படியாக மேலேறும்போது, குறிப்பாக, சக்லேஷ்பூர் பகுதி அழகான பள்ளத்தாக்குகளைக் காட்டுகிறது. மழைக்காலங்களில் ஒவ்வொரு மூலைகளிலும் நீர் நிலைகளை காணச்செய்யும் இந்த மங்களூர் - கோவை வழித்தடம் பசுமையை வழங்குவதோடு அழகை பன்மடங்கு அதிகரித்து காட்டுகிறது.
5.சென்னை - கோவை எக்ஸ்பிரஸ்:
தென்னிந்தியாவில் அதிகம் பயணிக்கப்படும் வழித்தடமான சென்னை- கோவை எக்ஸ்பிரஸ் பசுமையான வயல்வெளிகள், பழமையான கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களின் கண்கவர் காட்சிகளை அழகுற வழங்குகிறது.
தமிழ்நாட்டின் கிராமப்புற அழகை ஒவ்வொரு இடத்திலும் உணருவதோடு, சூரியனின் பொன்னிற கதிர்கள் நிலப்பரப்பில் பரவும் அதிகாலை அல்லது அந்தி சாயும் வேளையில் இந்த வழித்தடம் மிகவும் அழகாக இருக்கும்.
கோவைக்கு ரயிலில் பயணம் செய்வது ஒரு பயணமாக மட்டுமில்லாமல் மிகச் சிறந்த அனுபவமாகவும் இயற்கை அழகை கண்டு ரசிக்கும் ஒரு அற்புத இடமாகவும் இருக்கும் என்பதை பயணித்து பயன்பெறுங்கள்.