மலைகளின் ராணி சிம்லா: வெள்ளிப் பனிமலைகளுக்கு இடையே ஒரு கனவுப் பயணம்!

Payanam articles
shimla nature ville

இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகர் சிம்லா ஒரு சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இது ஒரு சிறந்த மலைவாச ஸ்தலமாகும். குளுகுளு வெப்பநிலை பனிப்பொழிவு இயற்கை காட்சிகள் சாகச நடவடிக்கைகள் இவற்றிற்கு பெயர் பெற்றது.

சிம்லாவில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் விமான நிலையம் உள்ளது. இதற்கு ஜிப்பர் டி விமான நிலையம் என்று பெயர்.  கல்கா வரை ரயிலில் சென்று அங்கிருந்து டோய் ட்ரெயின் மூலம் சிம்லா செல்லலாம் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை சிறந்த நேரமாகும். 

மால் ரோட்டில் பல வகையான உணவகங்கள் உள்ளன. இங்குள்ள இந்தியன் காபி மிகவும் பிரசித்தி பெற்றது சிம்லா மலைகளின் ராணி என அழைக்கப்படுகிறது.  இங்குள்ள வெப்பநிலை மைனஸ் 20 டிகிரி இருப்பதால் எங்கு பார்த்தாலும் வெள்ளிமலை போன்று காட்சி அளிக்கிறது. பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும் சிம்லாவில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குர்பி மலை சிறந்த சுற்றுலாத் தலமாகும்.

இங்குள்ள செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள ஐஸ் கட்டி மைதானம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாடி மகிழ்கிறார்கள். குலு பகுதியில் புகழ்பெற்ற பிஜிலி மகாதேவ் சிவன் கோவில் உள்ளது இந்த சிவலிங்கம் பணியால் மூடப்பட்டு இருக்கும் எங்கு பார்த்தாலும் பணி மூடிய மலைகள் பிரமிக்க வைக்கும் ஏரிகள் கலர் கலரானதாவரங்கள் நிறைந்து காணப்படும் சிம்லா தன் அழகிய வசீகரத்தால் அனைவரையும் கட்டிப்போட்டு வைக்கிறது. 

1. மால் ரோடு 

shimla nature ville
மால் ரோடு

இது மலை நகரத்தின் ஹாட்ஸ்பாட் பல காபி பார்கள் உணவகங்கள் ஷோரூம்கள் தங்கும் விடுதி பல்பொருள் அங்காடி கைவினைப் பொருட்கள் கடைகள் என ஏராளமாக உள்ளன. இதன் அருகில் காளி கோவில் டவுன்ஹால்  கேட்டி தியேட்டர் ஆகியவை அருகில் உள்ளன. 

இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் அட்வான்ஸ் ஸ்டடிஸ்  சிம்லாவில் உள்ள மிகவும் பிரபலமான சுற்றுலா பகுதிகளில் எதுவும் ஒன்று. 1884 முதல் 18ரை இந்தியன் வைஸ்ராய் லார்ட் பெரின் இல்லமாக கட்டப்பட்டது. மேம்பட்ட படிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கு சிறந்த இடமாக விளங்கி வந்தது. தற்போது ஜனாதிபதியின் ஓய்வு கால இல்லமாக செயல்பட்டு வருகிறது 

2. தி  ரிட்ஜ் 

shimla nature ville
தி ரிட்ஜ்

தி ரிட்ஜ் சிம்லாவின் மையப்பகுதி என கூறலாம். பிரபலமான சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. மால் ரோட்டை இணைக்கும் பகுதியாகும். இதனை சொர்க்க பூமி என அழைக்கின்றனர். இயற்கை காட்சிகள் இங்கு ஏராளமாக உள்ளதால் இந்த இடத்திலிருந்து கண்டுகளிப்பதற்கு மிகவும் ரம்யமாக இருக்கும். 

3. கோடை மலைகள் 

shimla nature ville
கோடை மலைகள்

சிம்லாவில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு அழகிய கிராமம். இந்த கிராமம் மலைகள் மற்றும் பசுமையான தாவரங்களால் மூடப்பட்டு இருக்கும் ஏழு மலைகள் ஒன்றாக இணைந்த பகுதி. சம்மர்  ஹில்லின் பிரம்மாண்டம் என அழைக்கப்படுகிறது. சிம்லாவின் சிறந்த சுற்றுலா தலமாகவும் உள்ளது. 

4. கல்கா ரயில் பயணம் 

shimla nature ville
கல்கா ரயில் பயணம்

இதுவும் ஒரு சிறந்த சுற்றுலா பகுதியாக உள்ளது. ஹரியானாவில் உள்ள கல்காவிலிருந்து சிம்லாவுக்கு ரயிலில் பயணம் செய்வது ஒரு தனி அனுபவம். இரண்டு புறமும் அழகிய இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து கண்டு செல்லலாம். போகும் இடங்களில் சோலன் தரம்பூர் சம்மர் ஹில் தாரா தேவி போன்ற இடங்களை பார்க்கலாம்.  இந்தப் பயணத்தில் 864 பாலங்கள் 919 ஆற்று படுகைகள் 102 சுரங்கப்பாதைகள் இவற்றை கண்டு ரசிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
அனுபவச் சுற்றுலா: உள்ளூர் கலாச்சாரத்தை உள்வாங்கும் புதிய கலை!
Payanam articles

5. ஜூஹூ மலை

shimla nature ville
ஜூஹூ மலை

8000 அடி உயரமுள்ள மலை, சுற்றுலா பயணிகளின் பிரியமான இடமாக உள்ளது. ஜக்கு கோவிலில் 108 அடி உயரமுள்ள பிரம்மாண்டமான அனுமான்சிலை உள்ளது. யாத்திரிகர்களுக்கு ஏற்ற இடம் ஆகும். இது ஒரு குறுகிய நடைபயணம் கொண்ட பகுதியில் அமைந்துள்ளது.

6. தாரா தேவி கோவில் 

shimla nature ville
தாரா தேவி கோவில்

நீங்கள் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் இந்த கோவிலில் கண்டிப்பாக பார்வையிட வேண்டும். மலை மீது அமைந்துள்ள இந்த கோவில் 250 ஆண்டுகள் பழமையான கோவில். துர்கா தேவியின் ஒன்பது சகோதரிகளில் ஒருவரான தாராதேவி ஆட்சி புரியும் இடமாகும். தாராதேவி சிலை மரத்தால் ஆனது நேர்த்தியான கட்டடக்கலை உடன் அமைந்துள்ளது பாராட்டத்தக்கது. 

7. சாட்விக் நீர்வீழ்ச்சி 

shimla nature ville
சாட்விக் நீர்வீழ்ச்சி

சிம்லாவில் உள்ள அழகிய நீர்வீழ்ச்சி 86 மீட்டர் உயரத்திலிருந்து கீழே தண்ணீர் விழுகிறது. இந்த நீரானது கீழே உள்ள பள்ளத்தாக்கில் சேர்கிறது.  தேவதாரு பைன் மரங்கள் அதிகம் உள்ள பகுதி ஆகும். இந்த இடத்திற்கு ஜூன் முதல் செப்டம்பர் வரை செல்வதற்கு உகந்த இடமாகும்.

8. சிம்லா அருங்காட்சியகம் 

shimla nature ville
சிம்லா அருங்காட்சியகம்

சிம்லா  ஸ்டெம் மியூசியம் என அழைக்கப்படுகிறது. சிறந்த லைப்ரரி மற்றும் விரிவான மைதானம் உள்ள பகுதி கட்டிடக்கலைக்கு பெயர் பெற்றது. பிரிட்டிஷ் கட்டடக்கலையில் அமைப்பில் அழகாக அமைந்துள்ளது. பழங்கால கலைப்பொருட்கள் சிற்பங்கள் ஓவியங்கள் கைவினைப் பொருட்கள் ஏராளமாக இந்த அருங்காட்சியகத்தில் உள்ளது. 

9. அன்னண்டலே 

shimla nature ville
அன்னண்டலே

போலோ கிரிக்கெட் விளையாட்டிற்கு சிறந்த இடமாக உள்ளது. பிரிட்டிஷ்காரர்கள் அந்த காலத்தில் போலோ கிரிக்கெட் இந்த மைதானத்தில் விளையாடினார்கள். தற்போதும் இந்த இடம் விளையாட்டு மைதானமாக உள்ளது. தேவதாரு பைன் மரங்கள் அதிகம் நிறைந்த பகுதி ஆகும். செங்குத்தான பள்ளத்தாக்கு உள்ளது. நவம்பர் மாதம் பார்க்க வேண்டிய இடமாகும். இங்கு ராணுவ அருங்காட்சியகமும் உள்ளது. 

10. சாயில் 

shimla nature ville
சாயில்

தேவதாரு பைன் மரங்கள் பின்னணியில் மிக உயரமான கிரிக்கெட் மைதானம் உள்ளது. புகழ்பெற்ற செயில் அரண்மனை பிரிட்டிஷ்காரர்களின் கட்டிடக்கலைக்கு பெயர் பெற்று விளங்குகிறது. இரவில் வண்ண விளக்குகளில் ஜொலிக்கிறது. சிம்லாவை விட உயரமான பகுதியில் உள்ளது. 

11. குத்தர் கோட்டை 

shimla nature ville
குத்தர் கோட்டை

வரலாற்று தலத்தை அடிப்படையாகக்கொண்ட கோட்டை ஆகும். 52 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள கோட்டை சுற்றியும் மலைகள் பைன் மரங்கள் அதிகம் காணப்படுகிறது. இந்த கோட்டை பகுதியில் அழகான தோட்டங்கள் அருவிகள் குளங்கள் உள்ளது. 

12. நரகந்தா 

shimla nature ville
நரகந்தா

இது ஒரு அழகிய கிராமம் சிம்லாவில் இருந்து 60கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 8,100 அடி உயரத்தில் அமைந்துள்ள சிறிய மலைப்பகுதியில்  பாரு நகரத்தின் காட்சிகளை ரசிக்கலாம். சிறந்த சுற்றுலாதளமாக விளங்கி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com