27 பேர் மட்டும் வசிக்கும் மிகச் சிறிய நாட்டை தெரிந்து கொள்வோமா?
இந்தியா சீனா போன்ற பெரிய நாடுகள் உலகின் மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளாக அறியப் படுகின்றன. அந்த வகையில் இதே பூமியில் 27 பேர் மட்டும் பசிக்கும் மிகச்சிறிய நாடான வடகடலில் அமைந்துள்ள சீலாண்ட் குறித்து இப்பதிவில் காண்போம்.
மிகச் சிறிய நாடு என்றவுடன் வாடிகன்தான் அனைவரின் மனதிற்குள்ளும் வரும். ஆனால் வாட்டிகன் சுமார் 800 மக்கள் தொகை கொண்ட நாடாக அறியப்படுகிறது. அதைவிட குறைந்த 27 பேர் மட்டும் வசிக்கும் இங்கிலாந்தின் சஃபோல்க் கடற்கரையிலிருந்து சுமார் 6.5 மைல் தொலைவில் இருக்கும் சீலாண்ட் ஒரு மைக்ரோ நாடாக இருப்பதோடு எந்த இறையாண்மை அங்கீகாரமும் இல்லாத உலகின் மிகச் சிறிய நாடாக அறியப்படுகிறது.
இந்த நாடு கடற்கொள்ளையர்கள் மற்றும் ஹேக்கர்களுக்கான புகலிடமாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. யுனைடெட் கிங்டம் சீலாண்டை ஒரு நாடாக அங்கீகரிக்கவில்லை. இதைத் தவிர உலகின் எந்த நாடும் Sea land யை நாடாக அங்கீகரிக்கவில்லை. இருந்தாலும் இந்த நாட்டுக்கென்று சொந்தமாக கொடி, நாணயம் மற்றும் ஒரு அரசாங்கம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சீலாண்ட் சுதந்திர நாட்டிற்கான அனைத்தையும் உருவாக்கியதோடு சுதந்திரப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளபடி, பேட்ஸ் குடும்பம் Sea land கொடியை ஏற்றி, அதன் கீழ் வாழும் அனைவருக்கும் சுதந்திரத்தையும் நீதியையும் வழங்கியுள்ளது.
பேட்ஸ் குடும்பம் பரம்பரையாக ஆட்சி செய்யும் இந்த நாட்டில் அரசாங்கம், பாஸ்போர்ட்டுகள், நிரந்தர மக்கள் தொகை, அரசியலமைப்பு, நாணயம், முத்திரைகள் மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் என அனைத்தும் உள்ளன.
1967 ஆம் ஆண்டில், முன்னாள் பிரிட்டிஷ் இராணுவ மேஜர் ராய் பேட்ஸ் Sea land-ன் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி அதை ஒரு சுதந்திர இறையாண்மை கொண்ட நாடாக அறிவித்தார். அவர் Sea land-ன் இளவரசர் ராய் என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டு தனது சொந்த பாஸ்போர்ட்டுகள் மற்றும் தபால் தலைகளை வெளியிடத் தொடங்கினார்.
2012ல் காலமான சீலாண்ட் முதல் ஆட்சியாளரான ராய் பேட்ஸிற்குப் பிறகு அவரது மகன் மைக்கேல் பேட்ஸ் பதவியேற்றார். மைக்கேல் ஸ்பெயினுக்கு கடல் உணவுகளை ஏற்றுமதி செய்யும் ஒரு சேவல் மீன்பிடி தொழிலைத் தொடங்கியதோடு சுவாரஸ்யமாக, 1978 இல், Sea land-ன் மீது ஹெலிகாப்டரில் பயணம் செய்து திருமணம் செய்து கொண்டார்.
உலகின் அங்கீகரிக்கப்படாத சிறிய நாடாக இருக்கும் சீலாண்ட்யைத் தொடர்ந்து மோலோசியா எனப்படும் நெவாடா பாலைவனம் 33 பேர் மட்டும் வசிக்கும் மற்றொரு சிறிய நாடாக உள்ளது.