
நண்பர்களுடன் ஒருசில பயணங்களுக்கு திட்டம் போடுவது என்பது Gen Z தலைமுறையினருக்கு ஒரு கனவு போன்றது. குரூப் சாட்டில் ஆரம்பித்து, முடிவில் அந்த ட்ரிப் உண்மையில் நடந்தால், அது ஒரு பெரிய சாதனையாக இருக்கும். இந்நிலையில், ஒரு குழுவாக பயணம் செய்யும்போது பின்பற்ற வேண்டிய சில ஸ்மார்ட் ஹேக்குகள் மற்றும் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் பற்றி இங்கே வாசித்து தெரிந்து கொள்வோம்.
ஸ்மார்ட் டிராவல் ஹேக்குகள்:
முன்கூட்டியே திட்டமிடுங்கள்:
விமான டிக்கெட்கள் மற்றும் தங்குமிடங்களை 2-3 மாதங்களுக்கு முன்பே பதிவு செய்வது செலவுகளை குறைக்க உதவும். உதாரணமாக, கோவாவிற்கு பிப்ரவரி ஆரம்பத்தில் பதிவு செய்வது, பீக் சீசனின் செலவுகள் விட குறைவாக இருக்கும்.
வார இறுதி நாட்களைத் தவிர்த்து, வார நாட்களில் பயணம் செய்வது அல்லது ஆஃப்-சீசனில் செல்வது, விலைகளைக் குறைக்க உதவும். இதனால் கூட்டம் குறைவாக இருக்கும், மேலும் உள்ளூர் கலாச்சாரத்தை அனுபவிக்க முடியும்.
பயண தலைவரை நியமியுங்கள்:
குழுவில் ஒருவரை 'ட்ரிப் கேப்டன்' ஆக நியமிப்பது நல்லது. இவர் பயண திட்டமிடல், நிதி மேலாண்மை, டிக்கெட் புக்கிங் போன்றவற்றை ஒருங்கிணைப்பார். இது குழப்பங்களைத் தவிர்க்கவும், அனைவரையும் ஒரே பக்கத்தில் வைத்திருக்கவும் உதவும்.
ஹோம்ஸ்டேக்களைத் தேர்ந்தெடுங்கள்:
விலையுயர்ந்த ஹோட்டல்களைத் தவிர்த்து, பட்ஜெட்டுக்கு ஏற்ற ஹோம்ஸ்டேக்களைத் தேர்வு செய்யுங்கள். இது பணத்தை சேமிப்பதுடன், உள்ளூர் மக்களை சந்தித்து, கலாச்சாரத்தை நெருக்கமாக அனுபவிக்க உதவும்.
உள்ளூர் போக்குவரத்து பயன்படுத்துங்கள்:
டாக்ஸிகளைத் தவிர்த்து, உள்ளூர் போக்குவரத்து முறைகளைப் பயன்படுத்துங்கள். வாரணாசியில் ரிக்ஷாவில் பயணம் செய்வது, இமாச்சலில் ஷேர் ஆட்டோ பயன்படுத்துவது அல்லது கேரளாவில் பொது படகில் செல்வது செலவைக் குறைப்பதுடன், உள்ளூர் அனுபவத்தையும் தரும்.
சமூக ஊடகங்களை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துங்கள்:
இன்ஸ்டாகிராம், யூடியூப் பயண இன்ஸ்பிரேஷனுக்கு சிறந்த தளங்கள். பிரத்யேக இடங்கள், உணவு அனுபவங்கள், மற்றும் புதிய டிராவல் ஐடியாக்களை கண்டறிய இவற்றைப் பயன்படுத்துங்கள்.
தவிர்க்க வேண்டிய விஷயங்கள்:
கடைசி நேரப் பதிவு:
விமான டிக்கெட் மற்றும் தங்குமிடங்களை கடைசி நிமிடத்தில் பதிவு செய்வது, அதிக விலைக்கும், குறைந்த தேர்விற்கும் வழிவகுக்கும். கோவா அல்லது சிம்லா போன்ற பிரபலமான இடங்களுக்கு, பண்டிகை காலத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு பதிவு செய்தால், விலை இரட்டிப்பாகலாம்.
அதிகமாக திட்டமிடுவது:
குறுகிய காலத்தில் அதிகமாக செய்ய முயற்சிப்பது பயணத்தின் மகிழ்ச்சியைக் குறைக்கும். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அவசரமாக ஓடுவதைத் தவிர்த்து, ஒரு இடத்தில் நிதானமாக இருந்து, அதன் அழகை முழுமையாக அனுபவிப்பது நல்லது.
செலவுகளை முன்கூட்டியே திட்டமிடாமல் இருப்பது:
குழு பயணத்தில் பணம் ஒரு பெரிய பிரச்சனையாக மாறலாம். யார் எதற்கு எவ்வளவு செலவழிக்க தயாராக இருக்கிறார்கள் என்பதை பயணத்திற்கு முன்பே வெளிப்படையாகப் பேசுங்கள்.
'Buy Now, Pay Later' போன்ற வசதிகள் மூலம் விமான மற்றும் தங்குமிட செலவுகளைப் பிரித்து செலுத்த உதவியாக இருக்கும்.
"ஸ்பிலிட்வைஸ்" போன்ற செயலிகள் செலவுகளைப் பிரித்து, யார் யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதைக் கணக்கிட உதவும்.
பாதுகாப்பை புறக்கணிப்பது:
பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது, பட்ஜெட்டைக் காட்டிலும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
குறிப்பாக புதிய இடங்களுக்குச் செல்லும்போது பாதுகாப்பு மிக முக்கியம். அவசியமான மருந்துகள், ஒரு சிறிய முதலுதவி கிட், பவர் பேங்க், ஆஃப்லைன் மேப்கள் மற்றும் போதுமான பணம் போன்றவற்றை எடுத்துச் செல்வது அவசியம்.
மேற்கண்ட இந்த ஸ்மார்ட் ஹேக்குகள் மற்றும் தவிர்க்க வேண்டிய விஷயங்கள், உங்கள் நண்பர்களுடனான பயணத்தை மறக்க முடியாததாகவும், சுவாரஸ்யமாகவும் மாற்ற உதவும். நண்பர்களுடன் திட்டமிட்ட ஒரு ட்ரிப் வாழ்க்கை முழுவதும் நினைவில் நிற்கும். உங்கள் அடுத்த பயணம், இந்த டிப்ஸ்களை பகிர்ந்து குரூப் சாட்டோட மட்டும் முடியாமல், உண்மையில் நடக்கும் என்று நம்புவோம்.