ஆனந்தம் மட்டுமல்ல: சுற்றுலாவினால் ஏற்படும் சமூகப் பாதிப்புகள்!
சுற்றுலாவினால் பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்புகள் மற்றும் மேம்பட்ட உள்கட்டமைப்பு போன்ற நன்மைகள் இருந்தாலும் சுற்றுச்சூழல் பாதிப்பு, கலாச்சார சீரழிவு போன்ற தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன. சுற்றுலா என்றாலே ஆனந்தம், மகிழ்ச்சி, களிப்புதானே! அப்புறம் எப்படி சுற்றுலாவில் தீமைகள் ஏற்படும் என்று எண்ணலாம். உண்மையில் சுற்றுலாவின் தீமைகள் என்பவை சுற்றுச்சூழல், பொருளாதாரம், சமூக மற்றும் கலாச்சார ரீதியான எதிர்மறை விளைவுகளாகும்.
சுற்றுச்சூழலில் ஏற்படும் தீமைகள்:
a) சுற்றுச்சூழல் மாசு:
சுற்றுலாப் பயணிகளின் அதிகப்படியான வருகையால் சாலைகளின் பயன்பாடு அதிகரிப்பு மற்றும் கழிவுகள் அதிகரிப்பு ஆகியவற்றால் சுற்றுச்சூழல் பெரிதும் மாசுபடுகிறது. வாகனப்புகை, குப்பை, கழிவுநீர் வெளியேற்றம் போன்றவற்றால் மாசுபடுகிறது.
b) இயற்கை வளங்கள் சுரண்டல்:
அதிகப்படியான சுற்றுலாப் பயணிகளின் வருகையால் நீர், மரம் போன்ற இயற்கை வளங்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. ஹோட்டல்கள், நீச்சல் குளங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளுக்கு அதிக தண்ணீர் மற்றும் மின்சாரம் தேவைப்படுகிறது. இது உள்ளூர் வளங்களுக்கு அழுத்தத்தை அளிக்கிறது.
b) இயற்கை வளங்கள் சுரண்டல்:
அதிகப்படியான சுற்றுலாப் பயணிகளின் வருகையால் நீர், மரம் போன்ற இயற்கை வளங்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. ஹோட்டல்கள், நீச்சல் குளங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளுக்கு அதிக தண்ணீர் மற்றும் மின்சாரம் தேவைப்படுகிறது. இது உள்ளூர் வளங்களுக்கு அழுத்தத்தை அளிக்கிறது.
c) வனவிலங்கு பாதிப்பு:
சுற்றுலாப் பயணிகளின் நடமாட்டத்தால் வனவிலங்குகளின் வாழ்விடங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. சுற்றுலா சார்ந்த வளர்ச்சி, காடுகள், கடற்கரைகள் மற்றும் பவளப்பாறைகள் போன்ற இயற்கை வாழ்விடங்களை அழித்து, வனவிலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
2) பொருளாதார தீமைகள்:
a) பொருளாதார சமத்துவமின்மை:
சுற்றுலாத் துறையால் கிடைக்கும் வருவாய் முழுவதும் உள்ளூர் பொருளாதரத்திற்கு செல்வதில்லை. அவை பெரும்பாலும் பெரிய பன்னாட்டு நிறுவனங்கள், ஹோட்டல்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வருவாய் செல்கிறது. இதனால் உள்ளூர் மக்களிடையே பொருளாதார வேறுபாடுகள் அதிகரிக்கின்றன.
அதிக சுற்றுலாப் பயணிகள் வரும் பகுதிகளில் வீட்டு வாடகை, உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்கிறது. இதனால் உள்ளூர் மக்களுக்கு வாழ்க்கை செலவு அதிகரிக்கிறது.
b) உள்ளூர் பொருட்களுக்கு பதிலாக வெளிநாட்டு பொருட்கள்:
சுற்றுலாப் பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் உள்ளூர் வணிகங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
3) சமூக மற்றும் கலாச்சார தீமைகள்:
a) கலாச்சார மாற்றம்:
உள்ளூர் கலாச்சாரங்கள் வணிகமயமாக்கப்பட்டு காலப்போக்கில் மறைந்து விடக்கூடும். வெளிநாட்டுப் பயணிகளின் கலாச்சார தாக்கத்தால் உள்ளூர் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்கள் மாற்றமடைந்து சுற்றுலாப் பயணிகளின் கலாச்சாரத்தை பிரதிபலிக்க தொடங்கும் ஆபத்து உள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகையால் உள்ளூர் பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. சில நேரங்களில் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது.
b) சமூகப் பிரச்னைகள்:
சுற்றுலாப் பயணிகள் வருகையால் உள்ளூர் மக்களிடையே குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு போன்ற சமூகப் பிரச்சினைகள் அதிகரிக்க கூடும். வெளிநாட்டு கலாச்சாரங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் நடத்தைகள் உள்ளூர் பழக்க வழக்கங்களில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி, பண்பாட்டு மோதல்களுக்கு வழிவகுக்கும்.
c) பொருளாதார சார்பு:
ஒரு நாட்டின் பொருளாதாரம் சுற்றுலாவை மட்டுமே நம்பி இருந்தால், இயற்கை சீற்றங்கள், அரசியல் ஸ்திரமின்மை அல்லது நோய்த் தொற்றுகள் ஏற்படும்பொழுது பொருளாதார ரீதியாக பாதிக்கப்படும். சுற்றுலாத் துறையை முழுமையாக சார்ந்திருக்கும் பொழுது, சுற்றுலா தடைப்படும் காலங்களில் உள்ளூர் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
பிற தீமைகள்:
அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மற்றும் கூட்ட நெரிசல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. சில இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குற்ற செயல்களின் அளவை அதிகரிக்கிறது.

