மகாராஷ்டிராவின் அம்போலியில் பார்க்க வேண்டிய சிறப்புமிக்க இடங்கள் சில..!

Payanam articles
Amboli in maharashtra..
Published on

ம்போலி (Amboli) மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அழகிய கிராமம். இது மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அழகான மலை வாசஸ்தலமாகும். இங்கு பரந்து விரிந்த காடுகள், மயக்கும் நீர்வீழ்ச்சிகள், மாதவ்காட் கோட்டை, ஹிரண்யகேசி கோவில் என பல இடங்கள் சுற்றுலா செல்ல ஏற்ற இடமாகவும், ரசிக்கும் படியும் உள்ளன.

பார்க்க வேண்டிய இடங்கள்:

அம்போலி காட்:

அம்போலி காட் மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் (Sindhudurg) மாவட்டத்தில் உள்ள பசுமையான சஹ்யாத்ரி மலைகளில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 690 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. அதிக மழைப்பொழிவு காரணமாக அம்போலி 'மகாராஷ்டிராவின் சிரபுஞ்சி' என்று அழைக்கப்படுகிறது. இதன் பசுமையான நிலப்பரப்புகள் அருவிகள் நிறைந்த மலை வாசஸ்தலமாகும்.

ஹிரண்யகேசி கோவில்:

அம்போலி ஹிரண்யகேசி கோவில் என்பது மகாராஷ்டிராத்தின் அம்போலி மலை வாசஸ்தலத்தில் அமைந்துள்ள மிகவும் பிரபலமான கோவிலாகும். இது மேற்கு தொடர்ச்சி மலையில் சஹ்யாத்ரி தொடரில் அமைந்துள்ள அழகிய மலை வாசஸ்தலமாகும். இங்கு பார்வதி தேவி ஹிரண்யகேசி என்று வழிபடப்படுகிறாள். ஹிரண்யகேசி நதி இந்த மலையிலிருந்து உற்பத்தியாகிறது.

அதன் நினைவாக இக்கோவிலுக்கு ஹிரண்யகேசி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆற்றங்கரையில் அமைந்துள்ள மிகவும் அமைதியான கோவில் இது. ஆண்டு முழுவதும் இங்கு பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

ஹிரண்யகேசி கோவில்
ஹிரண்யகேசி கோவில்

இங்கு கருவறையில் உள்ள தேவியும், ஹிரண்யகேஸ்வரர் எனப்படும் சுயமாக வெளிப்பட்ட சிவப்பு நிற சிவலிங்கமும் காண வேண்டிய ஒன்று. இது பசுமையான காடுகளின் மத்தியில் அமைந்துள்ளது. ஆனால் சாலைகள் இங்கு நன்கு அமைந்திருப்பதால் செல்வதற்கு வசதியாக உள்ளது. கோவிலுக்கு அருகில் ஒரு குகை உள்ளது. இது ஹிரண்யகேசி நதி உற்பத்தியாகும் இடம் என்று சொல்லப்படுகிறது. தண்ணீர் அங்கிருந்து வெளியேறி ஒரு குளத்தில் விழுந்து பிறகு வெளியே பாய்கிறது.

கோவில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். மகா சிவராத்திரி மற்றும் நவராத்திரி பண்டிகைகள் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
விவேகமான விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் குறித்து காண்போமா?
Payanam articles

சிறந்த மலை வாசஸ்தலம்:

1880 களில் கர்னல் வெஸ்ட்ராப் உள்ளிட்ட பிரிட்டிஷ் அதிகாரிகள் அம்போலியை ஒரு சிறந்த மலைவாச ஸ்தலமாக அறிவித்தனர். சாவந்த் போன்ஸ்லே வம்சத்தின் கோடைகால ஓய்வு இடத்தின் எச்சங்கள் அதன் வரலாற்று அழகை அதிகரிக்கின்றன. இங்கு அடர்த்தியான மரங்கள் சூழ்ந்த காடுகளும், சுற்றுலாவிற்கு ஏற்ற வானிலையும் கொண்டுள்ளதால் மக்கள் ஆண்டு முழுவதும் இங்கு வருகின்றனர். இங்கு தங்குவதற்கு நிறைய ஹோட்டல்களும், மோட்டல்களும், ரிசார்ட் போன்ற  பல்வேறு தங்குமிடங்கள் உள்ளன.

வியூ பாயிண்ட்கள்:

அழகிய மலைகளும், மூடுபனி நிறைந்த காடுகள் வழியாக செல்வது அருமையான உணர்வையும், மகிழ்ச்சியும் கொடுக்கும். இங்கு சன்செட் பாயிண்ட், பரிக்ஷித் பாயிண்ட், கவேல்சாத் பாயிண்ட் மற்றும் ஷிர்கோன்கர் பாயிண்ட் போன்ற  இடங்களுக்குச் சென்று அற்புதமான காட்சிகளை கண்டு களிக்கலாம்.

அழகான நீர்வீழ்ச்சிகள்:

காட்டுப் பகுதிக்கு மத்தியில் அம்போலி நீர்வீழ்ச்சியைக் கண்டு மகிழலாம். அழகான நீர்வீழ்ச்சிகள் ஆழமான பள்ளத்தாக்கில் விழுகின்ற அழகை ரசிக்கலாம். 400 அடி உயரத்தில் அமைந்துள்ள அம்போலி நீர்வீழ்ச்சி மிக உயரமானதாக இருக்காது; ஆனால் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியாகும்.

அழகான நீர்வீழ்ச்சிகள்
அழகான நீர்வீழ்ச்சிகள்

நங்கர்டா நீர்வீழ்ச்சி: 

அம்போலியின் பிரதான பேருந்து நிலையத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதில் தண்ணீர் 40 அடிக்கு மேல் உயரத்திலிருந்து கொட்டுகிறது. நீர்வீழ்ச்சியின் அழகை ரசிக்க அருவிக்கு அருகில் ஒரு பாலம் மற்றும் காட்சிப் புள்ளி கட்டப்பட்டுள்ளது.

மாதவ்காட் கோட்டை: 

அம்போலியின் பிரதான பேருந்து நிலையத்திலிருந்து 2.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க கோட்டையாகும். கோட்டை சேதம் அடைந்திருந்தாலும் கோட்டையின் உச்சியில் இருந்து அழகான புகைப்படங்களை எடுத்து மகிழலாம். இது அம்போலியின் ஒரு சிறந்த அடையாளமாகவும், இயற்கை அழகை ரசிக்க ஏற்ற இடமாகவும் உள்ளது.

பார்வையிட சிறந்த நேரம்: 

ஜூன் முதல் செப்டம்பர் வரை சுற்றுலாவுக்கு ஏற்ற பருவமாகும். அருகில் உள்ள விமான நிலையம் கோவாவின் டபோலிம். அம்போலியிலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாவந்த்வாடி அருகில் உள்ள ரயில் நிலையமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com