ஆன்மீகப் பயணம்; மங்களூரின் புகழ் பெற்ற 7 கோவில்கள்!

famous temples of Mangalore!
Mangalore temples

ங்களூர் கர்நாடக மாநிலத்தின் ஒரு முக்கிய துறைமுக நகரமாகும். இது ஒரு அழகிய சுற்றுலாத்தலம் மட்டுமல்ல, புகழ் பெற்ற ஆலயங்களும் இங்குள்ளன. 

1. மங்களாதேவி ஆலயம்

மங்களாதேவி ஆலயம்
மங்களாதேவி ஆலயம்

துர்கா தேவியின் வடிவமான மங்களாதேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது இந்தக் கோவில். மங்களாதேவி அம்மனின் பெயராலேயே இந்த ஊருக்கு மங்களூர் என்று பெயர் வந்தது. இந்தக் கோவில் பரசுராமரால் கட்டப்பட்டது என்று புராணங்கள் கூறுகின்றன. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த அலுபா வம்சத்தின் மன்னர் குந்தவர்மன் இதை விரிவாக்கம் செய்துள்ளார். இது அழகிய கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. 

2. ஸ்ரீ மஞ்சுநாதா கோவில், கத்ரி

ஸ்ரீ மஞ்சுநாதா கோவில், கத்ரி
ஸ்ரீ மஞ்சுநாதா கோவில், கத்ரி

சிவபெருமான் இங்கு மஞ்சுநாதர் என்று பெயரால் வணங்கப்படுகிறார். இந்த பகுதியில் உள்ள மிகப் பழமையான கோவில்களில் ஒன்றாகும். திராவிட மற்றும் துளுவக் கட்டிடக்கலை பாணிகளின் கலவைகளில் அமைந்தது இந்த கோவில். பிரமிப்பூட்டும் சிற்பங்கள் மற்றும் உயரமான கோபுரத்தைக் கொண்டது. இங்குள்ள ஐந்தடியில் வெண்கலத்தாலான மஞ்சுநாதேஸ்வரர் சிலை சுயம்புவாக தோன்றியது என்று கூறுகிறார்கள். இங்கு இயற்கை நீரூற்றுகள், பாண்டவக் குகைகள் போன்றவை உள்ளன. மகா சிவராத்திரி, யுகாதி, நவராத்திரி ஆகியவை மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

3. குட்ரோலி கோகர்ணநாதேஸ்வரர் கோவில்

சமூக சீர்திருத்தவாதியும் தத்துவஞானியுமான ஸ்ரீ நாராயண குருவால் 1912ம் ஆண்டு கட்டப்பட்டது இந்தக் கோவில். இது சாதி வேறுபாடு இன்றி அனைவரும் வழிபடக் கூடிய வகையில் கட்டப்பட்டது. மூலவர் சிவபெருமான் கோகர்ணநாதர் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். இந்து இதிகாசங்களை சித்தரிக்கும் சிக்கலான சிற்பங்கள், துடிப்பான சுவர் ஓவியங்களுடன் பிரம்மாண்டமான சோழ கோபுர பாணியில் அமைந்திருக்கிறது இந்த கோவில். சமூக, சமத்துவ மற்றும் நல்லிணக்கத்தை குறிப்பதால் பல்வேறு நம்பிக்கைகளை சேர்ந்த பக்தர்களை ஈர்க்கிறது.

4. ஆயிரம் தூண்கள் கொண்ட ஜெயின் கோவில்

ஆயிரம் தூண்கள் கொண்ட ஜெயின் கோவில்
ஆயிரம் தூண்கள் கொண்ட ஜெயின் கோவில்

மங்களூரில் இருந்து சுமார் 37 கி.மீட்டரில் மூடபித்ரியில் உள்ளது. திரிபுவன திலக சூடாமணி பசதி என்றும் அழைக்கப்படும் இந்த கோயில் கி.பி 1430 க்கு முந்தையது. ஜெயின் துறவி  சந்திரநாதருக்கு அர்ப்பணிக்கப் பட்டுள்ளது. சிக்கலான செதுக்கப்பட்ட தூண்கள் மற்றும் விஜயநகர மற்றும் நேபாள பாணிகளின் கலவையுடன் ஒரு கட்டிடக்கலை அற்புதமாகும்.

இதையும் படியுங்கள்:
உலகிலேயே மிக நீளமான குகை- சாகஸ பயணம் போவோமா?
famous temples of Mangalore!

5. ஸ்ரீ வெங்கட்ரமண கோவில்

ஸ்ரீ வெங்கட்ரமண கோவில்
ஸ்ரீ வெங்கட்ரமண கோவில்

வெங்கடாஜலபதிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில். இங்கு வருடாந்திர தேர்த்திருவிழாவான மங்களூரு ரதோத்சவாவிற்கு மிகவும் பெயர் பெற்றது. பிரம்மாண்டமான பிரம்ம ரதத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் இழுத்து இறைவனை சேவிப்பது வழக்கம். இந்தக் கோவில் மத்வ, வைணவ மரபை பின்பற்றும் பாரம்பரியத்தை சேர்ந்தது. மர வேலைப்பாடுகளுக்கு புகழ்பெற்றது இந்தக் கோவில்.

6. பொளலி ராஜராஜேஸ்வரி கோவில்

பொளலி ராஜராஜேஸ்வரி கோவில்
பொளலி ராஜராஜேஸ்வரி கோவில்

கி.பி. எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த கோவில் இது. இங்குள்ள பிரதான தெய்வமான இராஜராஜேஸ்வரி சிலை மருத்துவ குணங்கள் கொண்ட சிறப்புக் களிமண்ணால் வடிவமைக்கப்பட்டது. 10 அடி உயரம் கொண்ட இந்த சிலை தனித்துவமானது. இந்த களிமண் சில நேரங்களில் ஸ்டக்கோ என்று குறிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு 12 வருடங்களுக்கும் லேபாஷ்ட காந்தா எனும் சிறப்புக் கலவை  இதன் மேல் பூசப்படுகிறது.

இந்த சுரத மன்னரால் கட்டப்பட்டது இந்தக் கோவில். அவர் களிமண் சிலையை செதுக்கி தவமிருந்தார் என்று கூறப்படுகிறது. இது அமைதியான சூழலுக்கு மத்தியில் பசுமையான நெல் வயல்களின் நடுவில் அமைந்துள்ளது. இதன் அருகில் பால்குனி நதியும் ஓடுகிறது. மார்ச் மாதத்தில் ஆண்டுதோறும் ஒரு மாத காலத் திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது.

7. கட்டில் ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி கோவில்

கட்டில் ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி கோவில்
கட்டில் ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி கோவில்

மங்களூரில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் புனிதமான நந்தினி நதிக்கரையில்,  அமைதியான இயற்கை சூழலுக்கு மத்தியில் ஒரு தீவில் அமைந்துள்ளது. அருணாசுரன் என்று அரக்கனை தோற்கடித்து அமைதியையும் செழிப்பையும் கொண்டு வருவதற்காக துர்க்கையம்மன் கோயில் கொண்டிருக்கிறார் என்பது ஐதீகம்.

பாரம்பரிய கலை வடிவமான யஷகானத்தை பாதுகாப்பதில் இந்த கோவில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தென்னிந்திய பாணி கட்டிடக்கலையில், அற்புதமான கோபுரங்கள், அலங்கரிக்கப்பட்ட தூண்கள் இங்கு பிரசித்தம். இங்கு நவராத்திரி திருவிழா விமர்சையாக  9 நாளும் கொண்டாடப்பட்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com