சுற்றுலாப் பயணிகளை கவரும் இலங்கை..!

Sri Lanka attracts tourists..!
Srilanka tourist places
Published on

ஸ்ரீலங்கா என்ற இலங்கையில் காண்பவை பற்றி. இங்கு ஓடும் எல்லா வகை வாகனங்களில் நம்பர் பிளேட்டுக்கள் முகப்பில் வெள்ளையிலும், பின் பகுதியில் மஞ்சள் நிறத்திலும் காணப் படுகின்றன. எண்கள் கருப்பு வண்ணத்தில் இருக்கின்றன.

இங்கு சிலர் முள்ளம் பன்றிகளை வளர்ப்பு பிராணிகளாக வைத்து இருக்கின்றனர். அவைகளுக்கு நீண்ட சங்கிலி கட்டி வாக்கிங் அழைத்து செல்வதையும் காணலாம்.

வீதிகளில் வலம் வரும் மினி மொபைல் பேக்கரி வண்டிகளை நிறுத்தி வாங்கி கொள்பவர்கள் இருக்கிறார்கள்.

பல இடங்களில் பல வடிவங்களில், சைசுகளில் புத்தர் சிலைகளை கண்டு களிக்கலாம்.

இங்கு பொது இடங்களில், அலுவலகங்கள், தபால் நிலையம், ரயில் நிலையம், விமான கூடம் பலகைகள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் மொழிகளில் காணப்படுகின்றன.

அந்தக் காலத்தில் டச்சுகாரர்கள் உபயோகித்த கட்டிடங்கள் இன்றும் காணப்படுகின்றன.

பல கட்டிடங்களில் ஓடுகள் இருப்பதை பார்க்க முடிகின்றது.

சுற்றுப்புற சூழலுக்கு முக்கியத்துவம் அளிக்கப் படுகின்றது.

வாகனங்களில் இருந்து ஹாரன் சப்தம் அரிதாகத்தான் கேட்க முடிக்கின்றது.

வீதியில் இந்த பக்கத்தில் இருந்து எதிர்பக்கம் கிராஸ் செய்து செல்பவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப் படுகின்றது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் காணமுடிகிறன்றது.

இதையும் படியுங்கள்:
உலகின் அதிபயங்கரமான சிறையை சுற்றி வருவோமா?
Sri Lanka attracts tourists..!

மிரிசா கடற்கரையிலிருந்து (MIRISSA Beach) இந்து மகாசமுதிரத்தில் வசிக்கும் திமிங்கிலங்களை பார்வையிட (Whale Watching) படகுகளில் பயணம் செய்கின்றனர்.

அப்படி போகும் வழியில் கூட்டம் கூட்டமாக டால்பின்கள் தரிசனம் அளிக்கின்றன.

யானைகள் ஒரே இடத்தில் கண்டு மகிழ, செல்ல வேண்டிய இடம் பின்னாலா அனாதை யானைகள் காப்பகம். (Pinnala Elephants Orphanage). இங்கு பல யானைகள் ஒன்றோடு ஒன்று உலா வருக்கின்றன. சண்டை போடுகின்றன. போட்டோக்களுக்கு போஸ் கொடுக்கின்றன.

இங்கு ஆவலுடன் யானைகளை பார்க்க வரும் டூரிஸ்டுக்கள் யானைகளுக்கு உணவு (பல வகை பழங்கள்) வழங்கவும், யானைகளை குளிப்பாட்டவும் வசதிகள் உண்டு.

பெண்டோட்டா என்ற இடத்தில் (Bentota) ஆமைகளின் முட்டைகளை அடைகாத்து குஞ்சுகளை மாலை ஆறு மணிக்கு மேல் (சூரிய அஸ்த்தமனத்தின் சமயத்தில்) கடலில் விடும் காட்சி புதுமையாக காணப்படும்.

மிரிசாவில் இருந்து கடற்கரை ஒட்டிய சாலையில் பயணிப்பது தனி அனுபவம்.

காலே கோட்டை (Gale Fort) புகழ் பெற்றது. அங்கு அந்த காலத்தில் பயன்படுத்திய பீரங்கிகள் இன்றும் காணப்படுகின்றன.

இந்த கோட்டையின் மதில் சுவர்களில் அமர்ந்து எதிரே இருக்கும் காலே ஸ்டேடியத்தில் நடைப்பெரும் கிரிக்கெட் மேட்சுக்களை பலரும் கண்டு மகழ்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com