
வாட்டி வதைக்கும் வரப்போகும் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க விரும்பினால் குறிப்பிட்டுள்ள நீர் வீழ்ச்சி உள்ள இடங்களுக்கு நண்பர்கள் அல்லது குடும்பத்துடன் சுற்றுலா செல்லலாம்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் வைக்காத அறிவியல் ஒன்று உதகை அருகே பைக்காரா என்ற ஊரில் உற்பத்தியாகும் ஆறானது பைக்கார் அருவியாக உருவெடுத்து 55மீட்டர் மற்றும் 61 மீட்டர் உயரத்தில் இருந்து கொட்டுகிறது. பைக்காரா அருவி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் சிறந்த சுற்றுலா தலமாகும். இங்கு காலை எட்டு மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி உண்டு. படகு சவாரி செல்ல கட்டணமாக ரூ150 முதல் முதல் 300 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. ஒரு நாள் முழுவதும் பைக்காரா நீர்வீழ்ச்சியில் நேரம் செலவிடுவது மிக சிறந்த அனுபவமாக இருக்கும்.
தமிழகத்தின் கர்நாடக எல்லையில் காவிரி ஆற்றில் அமைந்துள்ளது ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்து போக்குவது உண்டு மிதமான நீரோட்டம் இருக்கும் நேரத்தில் படகு சவாரிக்கு அனுமதி உண்டு.
தர்மபுரி மாவட்டத்தில் காவிரி ஆற்றங்கரையல் அமைந்துள்ளது ஒகேனக்கல் அருவி. இந்தியாவின் நயாகரா என்று அழைக்கப்படும் ஒரு பிரபலமான சுற்றுலா தலம் ஆகும். பாறைகளில் மோதி தெறிக்கும் நீர் வீழ்ச்சி பரிசல் சவாரி, எண்ணெய் மசாஜ் மற்றும் உள்ளூர் மீன் உணவுகள் இங்கு மிகவும் பிரபலம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்ப்பரப்பு அருவி. உலக புகழ் பெற்றது திற்பரப்பு அருவி. நாகர்கோயிலில் இருந்து 42 கிலோமீட்டர் தொலைவிலும் திருவனந்தபுரத்தில் இருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 50 அடி உயரம் கொண்டது வருடத்தில் 7 மாதம் இந்த அருவி அதிக அளவு ஆர்ப்பரித்து கொட்டும். நீர்வீழ்ச்சிக்கு அருகில் குழந்தைகளுக்கான நீச்சல் குளம் உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி பசுமையான பசுமையாக சூழப்பட்டுள்ள தால் சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது.
ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி அணைக்கட்டு ஒரு பிரபலமான சுற்றுலாத்தலமாகும். இங்கு அணையில் இருந்து வெளியேறும் நீர் அருவியாக கொட்டுகிறது கொடிவேரி அருவி. இந்த அருவி இடம் பெண்கள் குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பானது. கோடை காலத்தை மிகவும் அமைதியாக கழிக்கலாம். சுற்றுலாப் பயணிகள் அணையின் மேல் பகுதியில் பரிசல் சவாரி செய்யலாம். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.
கோயம்புத்தூரில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு அழகான இயற்கையான அருவியாகும். இது அதன் மிகவும் சுவையான மற்றும் தெளிவான நீருக்காக பலரால் அறியப்படுகிறது. உலகின் இரண்டாவது சுவையான குடிநீர் என்று பலரால் கூறப்படுகிறது.
அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது இது. சுற்றுலா மலையேற்றம் இயற்கை ஆர்வலர்களுக்கு இது சிறந்த இடம் ஆகும். இப்பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு கடுமையான கட்டுப்பாடு உள்ளது. கோடையில் இந்த சுற்றுலா தலங்களுக்கு சென்று இயற்கையான சூழலை குடும்பத்துடன் அனுபவியுங்கள்!