எங்க Summer Holiday Plan ரெடி! - வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

பகுதி-1
Summer Tourist Spot
Summer Tourist Spot

1. பிருந்தா நடராஜன்

kodaikanal
kodaikanalImage Credit: Tamilnadutourism

Summer holiday plan ready ஆ இல்லையா என்றால் ரெடி  ஆனால் இல்லை.. கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க கொடைக்கானல் போலாம்னு ஃப்ளான் இருக்கு.. வேர்த்து விறுவிறுக்காமல் நெடுந்து நிற்கும் மரங்கள் நடுவே மனமும் உடலும் குளிர நடக்க ஆசை. மலை மேல் இருக்கும் முருகனை தரிசிக்க ஆசை.. மலைகளின் ராணி ஆன ஊட்டிக்கு உல்லாசமாக செல்ல ஆசை..தேயிலை தோட்டங்கள் நடுவே யூகலிப்டஸ் மரங்களின் வாசத்தை நுகர்ந்தபடியே ஊஞ்சலில் ஆட ஆசை.. வண்ண வண்ண பூக்கள் வா வா என்று அழைத்து வரவேற்க பூங்காவில் படர்ந்து விரிந்த பூக்களை நலம் விசாரிக்க ஆசை.. அருகில் இருக்கும் குன்னூர் கோத்தகிரி செல்ல ஆசை தான்.

ஏலகிரி ஏற்காடு ஏதாவது இயற்கை கொஞ்சும் எழில் மிகு இடங்களைக் காண ஆசைதான்.. டார்ஜிலிங் சிம்லா வை விட்டு வைக்கலாமா? பனி படர்ந்த இடங்களை பார்க்காமல் விடலாமா? ஆக மனம் எனும் கோட்டைக்குள் எங்கெல்லாம் செல்லலாம் என்று எண்ணம் மட்டும் இருக்கிறது.. நம் plan எவ்வளவு தூரம் execute ஆகும் என்று தெரியவில்லை.. நம்ம summer holiday plan இதில் ஏதாவது ஒன்று.. எதுவும் இல்லை என்றால் எப்போதும் போல வீடு சமையல்..தவிர கோவில் சுற்றுலா செல்லலாம்..அட அதுவும் இல்லையா? உற்றார் உறவினர்களை சந்தித்து மகிழலாம்..அவ்வளவுதான் .

2. ஷெண்பகம் பாண்டியன்

Arcot
Arcot Image Credit: tamilnadutourism

மூத்த மகள் என் பேத்தியோடு சிங்கப்பூரிலிருந்து ஒரு மாத விடுமுறையாக மே இறுதியில் வருகிறார். ஜூனில் நாங்கள் ,என் இரண்டு நாத்தனார் குடும்பமாக முதலில் திருப்பதி போகிறோம். அடுத்து ஏற்காடு செல்ல வேண்டும். என் நீண்ட நாள் ஆசை. சமீபத்தில் என் அண்ணன் கர்நாடகா நந்தி ஹில்ஸ் சென்று வந்தார்.கோடை காலத்திற்கு ஏற்ற இடம் என்றிருக்கிறார்.  ஏற்காடு அல்லது நந்தி ஹில்ஸ் இந்த சம்மருக்கு சுற்றிப் பார்க்கப் போகிறோம். .

ஏற்காட்டில்,பூங்காக்கள்,மான் பூங்கா,அருவிகள், பார்க்க வேண்டும். பேத்திகள் சந்தோஷப்படுவார்கள். படகு சவாரியும் செல்ல வேண்டும். இருக்கை என்ற மலை அமைப்பு பெண்களுக்கான ஸ்பெஷல் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மேலும் மிளகு,காபி,எஸ்டேட் இருப்பதால் அவற்றை வாங்க வேண்டும். முடவாட்டுக்கால் சூப் கிடைக்கிறதாம். கிழங்கும் வாங்கி வரவேண்டும். சினிமா ஷூட்டிங் நிறைய நடந்திருக்கிறது. அதிர்ஷ்டம் இருந்தால் அதையும் பார்த்து விட வேண்டும். இந்த வருட கோடைக்கு ஏற்காடு என் சாய்ஸ்.

3. உஷா முத்துராமன்

wax museum kanyakumari
wax museum kanyakumari

வெளிநாட்டில் இருக்கும் என் மகள் இந்த வருடம் வரப்போவதாக சொல்லி இருப்பதால் அவள் வந்தவுடன் மதுரைக்கு அருகே உள்ள கன்னியாகுமரிக்கு சென்று சூரிய உதயம் சூரிய அஸ்தமனம் இரண்டையும் பார்க்க வேண்டும் என்று நாங்கள் திட்டமிட்டு இருக்கிறோம்.

கன்னியாகுமரியில் wax எக்ஸிபிஷன் என்று பிரபலங்களை மெழுகினால் செய்யப்பட்ட சிலைகளுடன் கூடிய கண்காட்சி இருப்பதாக தெரிந்து கொண்டோம். அங்கு சென்று அந்த பிரபலங்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்று யோசித்து வைத்திருக்கிறோம். நாங்கள் செல்லவிருக்கும் இந்த கன்னியாகுமரி பயணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.

4. கே.எஸ்.கிருஷ்ணவேணி

Mamallapuram
MamallapuramImage Credit: tripsavvy

இந்த கோடை விடுமுறைக்கு நாங்கள் பாண்டிச்சேரி மற்றும் மகாபலிபுரம் செல்ல நினைத்துள்ளோம். பாண்டிச்சேரியில் மூன்று நாட்களுக்கு ரூம் புக் செய்தாகிவிட்டது. எங்கள் பேரக் குழந்தைகள் பெங்களூரிலிருந்து ஏப்ரல் முதல் வாரம் வருகிறார்கள். அவர்கள் வந்ததும் எல்லோருமாக சேர்ந்து பாண்டிச்சேரிக்கு சென்று அங்கு அரவிந்தர் ஆஸ்ரமம், பொட்டானிக்கல் கார்டன், ஆரோவில், மணக்குள விநாயகர் கோவில், பீச் ஆகிய இடங்களை பார்த்துவிட்டு அங்கிருந்து மகாபலிபுரம் செல்ல இருக்கிறோம்.

அங்கு ஒரு நாள் தங்கி புகழ்பெற்ற மாமல்லபுரம் சிற்பங்களை கண்டு களித்து, கடற்கரை கோயில்களையும், புகழ்பெற்ற பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. (ஸ்தலசயன பெருமாள்) அதனையும் தரிசித்து, பேரக் குழந்தைகளுடன் பீச்சில் விளையாடி, ஒட்டக சவாரி செய்து, குழந்தைகளுக்கு பிடித்த பானி பூரி, பேல் பூரி, சேவ் பூரி, ஐஸ்கிரீம் ஆகியவற்றை வாங்கிக் கொடுத்து நாங்களும் சாப்பிட்டு.... என ஏகப்பட்ட பிளான் வைத்துள்ளோம். நினைத்தாலே சந்தோஷமாக உள்ளது. எப்பொழுது அந்த நாள் வரும் என காத்திருக்கிறோம்.

5. என்.புவன நாகராஜன்

palani temple
palani templeImage Credit: tamilnadutourism

ஆறு மாத காலமாய் சமயபுரம் வேண்டுதல் முடித்து, குல தெய்வம் பழனி முருகன் தரிசனம், முடிக்கவேண்டும். அதோடு திருச்சி வந்து முத்தரசநல்லூாில் எனது கணவரின் சகோதரர் இல்லத்தில் தங்கிவிட்டு நேராக ஈரோடு உறவினா் இல்லம் விஜயம். ஈரோட்டில் துணிவகைகள் வாங்குதல் அதோடு பண்ணாாிஅம்மன் தரிசனம். அதைத்தொடா்ந்து திம்பம் மலைப்பகுதி வழியாக மைசூா் ஹெப்பல் பகுதியில் எனது நாத்தனாா்வீடு விஜயம்.

இதையும் படியுங்கள்:
பாவம் செய்தவர்கள் மேல் படாத அருவி… எங்கிருக்கு தெரியுமா?
Summer Tourist Spot

மூன்று நாட்கள் ஸ்டே.  பிருந்தாவனம், காவோி ஆறு, சாமூண்டீஸ்வரி கோவில், மைசூா்அரண்மனை, ஜகன்மோகன் பேலஸ்,  தாவன்கரே, மாண்டியா நேஷனல் பேப்பர் மில், மத்தூா் வந்து மத்தூா் ஸ்பெஷல் வடை சாப்பிடுதல், 100அடிசாலை மைசூா் ஜங்சன் ... ஆங்காங்கே தேவையான பா்ச்சேஸ்.  பின்னா் மைசூாிலிருந்து புறப்பட்டு பெங்களூா்.

அங்கு எனது சகோதரி மகன் இல்லத்தில் தங்குதல். அங்கு மெஜஸ்டிக் பகுதியில் உள்ள பெரிய மாா்க்கெட்டில் பர்ச்சேஸ். அதோடு சேலம் வழியாக வந்து எனது கணவரின் சித்தப்பா மகன்- மகள் வீடு விஜயம். அத்துடன் திருச்சி மலைக்கோட்டை தஞ்சை பின் கும்பகோணம் கோவில்கள் தரிசனம் முடித்து திருநாகேஸ்வரம்.  அங்கு எனது சகோதரி வீடு தங்கல். காலை கிளம்பி மயிலாடுதுறை செம்பனாா்கோவில் எங்கள் இல்லம் திரும்புதல். இதுதான் விடுமுறையைக் கழிக்க பிளான். மே மாதம் முதல் வாரம் பயணம். வாடகைகாாில் நான் எனது கணவர் மகன் மருமகள் நால்வர் மட்டுமே பயணம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com