எங்க Summer Holiday Plan ரெடி! - வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

பகுதி-2
Summer Tourist Spot
Summer Tourist Spot

1. மஹ்முதா தௌபீக்

Ooty
OotyImage Credit: tamilnadutourism

"உன்னை சொல்லி குற்றமில்லை", "என்னை சொல்லியும் குற்றமில்லை"கதையாய், கணவரின் மளிகை கடையின் நான்கு சுவர்களே எங்கள் சுற்றுலாத்தலம். அவரிடம் சண்டையிட்டு பலனில்லாததால் பகமையில்லாமல் அப்படியே வாழ பழகிக் கொண்டேன். அவ்வப்போது ஓரிரு மணி நேரங்களே சுற்றுவட்டார பீச் பொருட்காட்சி அழைத்துச் சென்றாலும் சீக்கிரம் வந்து கடை திறப்பதிலேயே குறிக்கோளாக இருப்பார்.

அந்த "பாட்சா" குழந்தைகளிடம் பலிக்குமா.? சம்பாத்தியம் எதுக்கு சந்தோஷமா இருக்கத் தானேனு நிறைய நல்ல அட்வைஸ் கொடுத்து கல்லாக இருந்தவரை புரிய வைத்து கரைத்து விட்டார்கள். பிறகென்ன முதல் முறையாக குடும்பத்துடன் நெடுந்தூர பயணமாக இந்த சம்மரில் ஊட்டி செல்ல இருக்கிறோம். அதன் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்பேன். கணவர் குழந்தையோடு ஜாலியாக சுத்த போற மகிழ்ச்சி எனக்கு. இதுவரை எங்களுக்கு அறிமுகமில்லா இடம் என்பதால் அங்கு சென்று எப்படி சுத்த போகிறோம் என்பது சென்றால் தான் புரியும்.

2. அன்புக்கரசி பாலசுப்பிரமணியன்

Pannari Mariamman Temple
Pannari Mariamman TempleImage Credit: wikipedia

நான் இந்த விடுமுறையை செலவிட தேர்ந்தெடுத்த இடம் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலா தலங்கள். அதிக கூட்டம் இருக்காது. மேலும் புனிதத்தலங்களும் பொழுது போக்கும் இடங்களும் நிறைந்தது. முதலில் புனிதத் தலத்தை பார்ப்போம். சத்தியமங்கலத்தில் இருந்து மேற்கில் சுமார் பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பண்ணாரி.

சத்தியிலிருந்து மைசூர் செல்லும் பஸ்கள் அனைத்தும் பண்ணாரி வழியாகத்தான் செல்லும். வேண்டியதை வேண்டியபடியே நிறைவேற்றும் சக்தி படைத்தவள் அவள். அடுத்து அங்கிருந்து நேராக பவானிசாகர் அணையை பார்வையிட செல்லலாம். அணையை ஒட்டிய பூங்கா குழந்தைகள் விளையாட சிறந்த இடம் பூங்காவிலிருந்தபடியே அணையின் அழகை ரசிக்கலாம். மேலும் அங்கு சுடச்சுட மீன் வறுவல் ஃபிரஷாக கிடைக்கும். அடுத்து பவானிசாகரரை விட்டு புறப்பட்டு சத்தியமங்கலம் தாண்டினால் சத்திக்கும் கோபிக்கும் இடையில் அமைந்துள்ளது கொடிவேரி அணை.

பெரிய அருவியயெல்லாம் இல்லை. அருவியியிருந்து நீர் கொட்டும் இடத்தில் பயமின்றி குழந்தைகளுடன் குளிக்கலாம். பாறை வழுக்கும் என்பதால் கைப்பிடிகள் உண்டு. கோடையை கழிக்க அருமையான இடங்கள்.

3. சேமந்தகமணி ரகவாசிம்ஹன்

Melbourne
MelbourneImage Credit: wikipedia

சிறுவயதில் நான் பாட்டி வீட்டிற்கு கோடை விடுமுறைக்கு பயணத்ததில் இருந்த அத்தனை மகிழ்ச்சி அதே உற்சாகம் நான் பாட்டியாகி ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பேரன் பேத்திகளை பார்க்கபோகும் போதும். முதலில் மெல்பேர்ன் விசிட். பிறகு சிட்னி. இரண்டும் அழகான நகரங்கள் ஆதலால் தினமும் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதில் வியப்பில்லை. அழகிய கடற்கரைகள், விண்ணைமுட்டும் கட்டிடங்கள், பூத்துக்குலுங்கும் கார்டன், பச்சைபசேல் என்ற புல்வெளிகள், சரித்திர புகழ் வாய்ந்த பலயிடங்களை காணும் ஆவலுடன் உற்சாகமும் கூட, பயணதிட்டம் இடப்பட்டுள்ளது.

4. எஸ்.ஐ. சத்தியமூர்த்தி

Kollimalai
KollimalaiImage Credit: wikipedia

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை எனது ஆஸ்தான சுற்றுலா இடம் ஆகும். அங்கு உள்ள அரப்பள்ளி ஈஸ்வரர் கோயிலில் அமாவாசை அன்று சென்றால் கொல்லிமலை சித்தர் வருவதாக ஐதீகம். காலில் வலு உள்ள நபர்கள் என்றால் கீழே உள்ள  ஆகாச கங்கை நீர்வீழ்ச்சியில் குளிச்சு மனசுக்கு தேடிக்கலாம் மகிழ்ச்சி. அப்புறம் கொல்லிப்பாவை கோயில். கீத்து கூரையில் மலைவாழ் மக்களின் நம்பிக்கை நாயகியாக. அசைவ பிரியர்களுக்கு மாசி பெரியண்ணன் சுவாமி கோயில். அப்புறம் போட்டிங் போகலாம். வரும் போது காபிக்கொட்டை கொல்லிமலை மிளகு வாங்கி வரலாம். இந்த மிளகை சாப்பிட்டால்,

இதையும் படியுங்கள்:
எங்க Summer Holiday Plan ரெடி! - வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!
Summer Tourist Spot

இருமல் உறுமல் எல்லாம் உருவம் தெரியாமல் ஓடி விடும். ரிச்சார்ட்டில் தங்கி அதிகாலை பனியில் சூரிய குழந்தையை ரசிக்கலாம். பிரிய மனமில்லாமல் ப்ரியா விடை சொல்லி ஊர் திரும்பினால், அடுத்த சம்மர் ரீபீட் டு  ரிசார்ட்..

5. வி.பவானி

Mysore Palace
Mysore PalaceImage Credit: wikipedia

இந்த கோடை விடுமுறைக்கு என் மகள் வீட்டிற்கு பெங்களூர் செல்லப் போகிறேன். பேத்தியுடன் ஜாலியாக அங்கிருந்து மைசூர் அரண்மனை, சாமுண்டீஸ்வரி கோவில் செல்லவும் திட்டம். மேலும் திருச்சி மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், மதுரை மீனாட்சியம்மன் கோவில், இப்படி கோவிலுக்கும் செல்ல ஆவலாக இருக்கிறேன். பெங்களூரு சுற்றுலா தலங்கள் சுற்றவும் ஆசை. பேத்தியுடன் அரட்டை அடித்து நேரத்தை போக்க வேண்டும். பெங்களூர் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கோயில் போக வேண்டும். எல்லாம் நான் ஆசைப் பட்டது போல் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com