எங்க Summer Holiday Plan ரெடி! - வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

பகுதி-3
Summer Tourist Spot
Summer Tourist Spot

1. N. கோமதி

Flower show in Ooty
Flower show in OotyImage Credit: blog via

கணவர், பணி ஓய்வு பெற்ற பின், எல்லா நாளும் விடுமுறை நாளே. போலாமா ஊர்கோலம்ன்னு தோணிச்சா.. உடனே பரணிலிருந்து சூட்கேஸ் கீழே இறங்கிடும். கடல் கடந்தும் இப்படித்தான் நிறைய இடம் போனாலும், வருடம் தோறும் ஏப்ரல் பிறந்ததும் மனசு ஏங்கும். ஊட்டிக்குப் போகணும், இந்த வருஷமாவது மலர்கண்காட்சியை பார்வையால் பருகி, ரசிக்கணும்ன்னு. ஆனால் இது வரை நிறைவேறவேயில்லை. அந்த ஆசையை மங்கையர் மலர் இப்பவே உசுப்பி விட்டது.

இந்தத் தடவை மிஸ் பண்ணாம, பிளவர்ஷோ போகணும். கலர்கலரா பூக்களை ரசிக்கணும். பூக்களின் நடுவே நான் நிற்கணும்,மொபைல்ல போட்டோ எடுத்து குரூப்ல ஷேர் பண்ணி அலப்பறை பண்ணனும்ன்னு ஆசையோ ஆசை. என்னதான் சின்னதிரை, வெள்ளித்திரை, கைத்திரை ( மொபைல் ஸ்கிரீன்)யில் விதவிதமாய் மலர்களை பார்த்தாலும், நேரில் நறுமணம் சுவாசித்து, புதிதாய் கண்குளிர பார்க்கும் மகிழ்ச்சியை அனுபவிக்கப் போகிறேன்

2. T. சுதா

Kallanai
KallanaiImage Credit: wikipedia

கோடை கால விடுமுறைக்கு இம்முறை கல்லணை, முக்கொம்பு, புளியஞ்சோலை, சித்தன்னவாசல், போன்ற இடங்களுக்கு பேரன் பேத்திகளுடன் செல்ல திட்டம். ஒகேனக்கல், தேனி மாவட்டத்தில் உள்ள கும்பக்கரை அருவிக்கும் செல்லத் திட்டம்.

3. S. செல்வமணி

Yanam
Yanam Image Credit: nativeplanet

அழகான கோவில்கள், தேவாலயங்கள், அழகிய மலைகள், பாறைகள் நிறைந்த பள்ளத்தாக்குகள், அழகான கடற்கரைகள், கம்பீரமான நீர்வீழ்ச்சிகள், காபி பண்ணைகள் மற்றும் பசுமையான காடுகள் ஆகியவற்றின் தாயகமாக, தமிழ்நாட்டின் ஹாட்ஸ்பாட்கள் பல சிறந்த கோடைகால விடுமுறை இடங்களாக விளங்குகின்றன. எதை விடுவது? எதை தேர்ந்தெடுப்பது? புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம்  ஏனாம். இது  கோடை விடுமுறைக்குச் செல்ல  தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.

இந்த இடம் அதன் சுவாரஸ்யமான வரலாறு மற்றும் கலாச்சாரத்திற்கு பிரபலமானது. இந்த இடத்தில் இருந்து சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனக் காட்சியை ரசிக்கலாம். நகரத்தைச் சுற்றி பரவியுள்ள சில புனிதக் கோயில்களுக்குச் செல்லலாம். இந்த நகரத்தில் பிரெஞ்சு கட்டிடக்கலையுடன் கூடிய சில பழைய தேவாலயங்களும் உள்ளன. 

பாடும் அலைகளின் நிலம் என்று அழைக்கப்படும் அமைதியான இடமாக டிரான்க்யூபார் உள்ளது. இந்த சிறிய கடற்கரை நகரத்தில்  1306 ஆம் ஆண்டு கட்டப்பட்ட சிவன் கோயில் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்த இடம் நிச்சயமாக கற்றுக் கொள்ள நிறைய வரலாற்றையும், ரசிக்க வேண்டிய அற்புதமான கட்டிடக்கலையையும் கொண்டுள்ளது.

4. சௌமியா சுப்ரமணியன்

Ladakh
Ladakh Image Credit: wikipedia

கோடை விடுமுறைக்கு நான் செல்ல இருக்கும் ஒரு பரபரப்பான இடம் லடாக் தான். விமானம் மூலம் குஷோக்கு பகுலா ரிம்போச்சி விமான நிலையத்தில் இறங்கி, பரத் ஹோட்டல் சென்று அங்கு தங்குவேன். வாங்சுக்கின் உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு, மலை சிகரங்கள், பிரமிக்க வைக்கும் ஏரிகளை கண்டு மகிழ்வேன்.

இதையும் படியுங்கள்:
எங்க Summer Holiday Plan ரெடி! - வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!
Summer Tourist Spot

மான்ஸ்டர் பள்ளத்தாக்கு, தேசியப் பூங்கா ஆகியவற்றை சுற்றிப் பார்ப்பேன். இரட்டை கூம்பு கொண்ட பாக்டிரியன் ஒட்டகத்தை ஓட்டுவதோடு, கார்டுங்லா கணவாய் வரை பைக்கில் சவாரி செய்து மகிழ்வேன்.

5. மகாலெட்சுமி சுப்ரமணியன்

Isha
IshaImage Credit: tusktravel

இந்த கோடைகாலத்தில் கோயம்புத்தூர், பொள்ளாச்சி செல்ல ப்ளான் பண்ணியுள்ளோம்.சில முறை சென்றிருந்தாலும் தற்போதைய கோயம்புத்தூர், பொள்ளாச்சி அதன் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்களுக்கு சென்று வர திட்டமிட்டு உள்ளோம். மகாசிவ ஆதியோகி அமைந்துள்ள தலம், சிறுவாணி அணை, ஆனைமலை புலிகள் காப்பகம், அடுத்த நாள் ப்ளாக் தண்டர் போக வேண்டும். பின் பொள்ளாச்சியில் தங்கி அந்த கிளைமேட், டாப் சிலிப் போக எண்ணியுள்ளோம்.

முக்கியமாக இதுவரை போகாத யானை சஃபாரி போக திட்டமிட்டுள்ளோம். ஆழியார் அணை, குரங்கருவி, அறிவுத் திருக்கோயில் போக வேண்டும். முடிந்தால் அங்கிருந்து 65 கிமீ-ல் உள்ள வால்பாறை போக ப்ளான் பண்ணியுள்ளோம். இவற்றையெல்லாம் முறைப்படுத்தி நன்றாக என்ஜாய் பண்ண எண்ணியுள்ளோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com