
விமான பயணம் என்பது மிடில் கிளாஸ் மக்களுக்கு கனவாகவே இருக்கிறது. உதான் (udan) திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்களும் கூட விமானத்தில் பயணிக்கும் வாய்ப்பினை மத்திய அரசின் விமான போக்குவரத்து அமைச்சகம் வழங்குகிறது. உள்நாட்டு மற்றும் உள்மாநில நகரங்களை இத்திட்டம் விமானத்தின் மூலம் இணைக்கிறது. விமானத்தில் குறைந்த கட்டணத்தில் பறக்க ஆசைப்படுகிறீர்கள் என்றால் கீழ் காணும் ஐடியாக்களை கடை பிடியுங்கள்.
1. பெரும்பாலான விமான நிறுவனங்கள் தங்களது விமான கட்டணத்தை செவ்வாய்க்கிழமை மாலையே நிர்ணயம் செய்கின்றன. ஆகவே விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு ஏற்ற நாட்கள் செவ்வாய் மற்றும் புதன்கிழமை ஆகும். மற்ற நாட்களில் புக் செய்யும்போது கட்டணம் பல மடங்கு கூட வாய்ப்புண்டு.
2. பயணம் செய்வதற்கு 21 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்வதால் முதல் 20 பயணிகளுக்கு கொடுக்கப்படும் சலுகை கட்டணம் கிடைக்க வாய்ப்புண்டு. ஏனெனில் விமான கட்டணங்களை நிர்ணயிக்கும் சாஃப்ட்வேர்கள் மலிவான டிக்கெட்டுகளுக்கு குறிப்பிட்ட இட ஒதுக்கீட்டினை கொண்டுள்ளது என்பதால் முதல் 20 டிக்கெட் மலிவு விலை கொண்டதாகவும், அடுத்த 200 டிக்கெட் நடுத்தர விலையிலும், மீதம் உள்ளவை அதிக கட்டணத்தில் நிர்ணயம் செய்யும் வகையில் அமைந்திருக்கும்.
3.சர்வதேச விமானத்தில் பறக்கிறீர்கள் என்றால் 11 முதல் 12 வாரங்களுக்கு முன்பாக விமான நிறுவனங்கள் சில சலுகைகளை வழங்கும். இந்தக் காலகட்டத்தில் டிக்கெட் விலையை தவறாமல் சரி பாருங்கள்.
4.நீங்கள் தரையிறங்கும் விமான நிலையம் முக்கியமான விமான நிலையம் என்றால் அதன் அருகில் உள்ள மற்றொரு சிறிய விமான நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ரயில் அல்லது பேருந்து மூலம் செல்வதால் பல ஆயிரங்களை மிச்சப்படுத்தலாம்.
5. பல நாட்களுக்கு முன்பு விமானத்தில் பயணித்திருந்தால் அந்த இணையதள ஹிஸ்டரியை அழிப்பதோடு குக்கீஸ்களையும் அழிக்கவும். ஏனெனில் இணையதளத்தினை நீங்கள் பார்வையிட்டதாக கருதி முன்பதிவு ஒரே மாதிரி இருப்பதோடு டிக்கெட் விலை அதிகரித்து காணப்படலாம். ஆகையால் பிரவுசரில் குக்கீஸ்களை அழிக்கும் பட்சத்தில் விமான கட்டணத்தில் மாறுபாடு இருக்கலாம்.
6. விமான டிக்கெட்டுகளின் முன்பதிவு கட்டணத்தை மற்ற இணையதளங்களுடன் ஒப்பிட்டு பார்த்து முன்பதிவு செய்வது உபயோகமாக இருக்கும்.
7.Skyscanner, CheapFlight, Momondo,KayakGoogle Flight,Ita Software இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணினால் இனி பேருந்து ரயில் பயணத்தைப் போல ஆகாய மார்க்கமும் எளிதாகவே இருக்கும்.
மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றினால் கட்டாயம் விமான பயணத்திற்கான செலவு குறைவதற்கு வாய்ப்பு உண்டு.