மனதை மயக்கும் மணாலிக்கு ஒரு ட்ரிப் அடிக்கலாமே!

Payanam articles
gulu manali
Published on

லகில் அழகான இடங்கள் பல உள்ளன. அதுவும் இந்தியாவில் இருக்கும் பல இடங்கள் நம் மனதை கொள்ளை கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதும் அதற்கான வாய்ப்பு அமையும் போதும் இவைகளை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

"கடல் மட்டத்திலிருந்து 1950 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மணாலி சுற்றுலாத்தலம் ஹிமாச்சல் பிரதேச மாநிலத்திலேயே மிகப்பிரசித்தமான மலைவாசஸ்தல சுற்றுலாத்தலமாக அமைந்துள்ளது. ‘தேவர்கள் வசிக்கும் பூமி’ எனப்படும் குலு மாவட்டத்தின் ஒரு அங்கமாக உள்ள இந்த மணாலி மாநிலத் தலைநகரான சிம்லாவிலிருந்து 250 கி.மீ தூரத்தில் உள்ளது. 

ஹிந்து புராண நம்பிக்கைகளின்படி, ஆக்கக்கடவுளான பிரம்மாவால் இந்தியாவை நிர்வகிக்குமாறு நியமிக்கப் பட்ட மனு எனும் அவதாரத்தின் பெயரால் இந்த மணாலி அழைக்கப்படுகிறது. ஏழு யுகங்களை ஆக்கி அழித்தபின் மனு இந்த இடத்திற்கு வந்து சேர்ந்ததாக சொல்லப் படுகிறது.

ஏழு முக்கிய ரிஷிகள் வசித்த புனித பூமியாகவும் இந்த மணாலி நகரம் ஹிந்து புராண ஐதீகத்தில் குறிப்பிடப்படுகிறது. மனம் மயக்கும் இயற்கை அழகு, வண்ணமயமான மலர்த்தோட்டங்கள், பனிமுடீய மலைச்சிகரங்கள் மற்றும் சிவப்பு-பச்சை ஆப்பிள் தோட்டங்கள் போன்ற உன்னதமான அழகம்சங்களின் மூலம் இந்த மணாலி காலங்காலமாக சுற்றுலாப் பயணிகளை வசீகரித்து வருகிறது."

இங்கு வரும் பயணிகள் ‘கிரேட் ஹிமாலயன் நேஷனல் பார்க்’, ஹடிம்பா கோயில், சோலங் வாலி எனும் பள்ளத்தாக்கு, ரோஹ்தங் பாஸ் மற்றும் பியாஸ் குண்ட் எனும் சிறு ஏரி போன்ற இடங்களை தவறாமல் பார்ப்பது அவசியம். பண்டோஹ் அணை, சந்திரகானி பாஸ், ரகுநாத் கோயில் மற்றும் ஜகந்நாதி தேவி கோயில் ஆகியவை இங்குள்ள இதர முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும். 1533ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ள ஹடிம்பா கோயில் ஹடிம்பா தேவிக்காக கட்டப்பட்டிருக்கிறது. 

இதையும் படியுங்கள்:
தவாங் இயற்கையின் அழகுப் பிரதேசம்!
Payanam articles

ஹடிம்பா எனும் அசுரனின் சகோதரி இந்த ஹடிம்பா தேவி என்பதாக புராணிக ஐதீகம் கூறுகிறது. உள்ளூர் நம்பிக்கைகளின்படி, இந்த கோயிலை கட்டுவித்த அரசன் இது போன்று மற்றொரு கோயில் உருவாககக்கூடாது என்பதற்காக இந்த கோயிலைக்கட்டிய கலைஞர்களின் வலது கையை துண்டித்து விட்டதாக கூறப்படுகிறது. 

மணாலியில் உள்ள மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமான சோலங் பள்ளத்தாக்கு இங்குள்ள 300 மீ உயரம் கொண்ட ‘ஸ்கி’ (பனிச்சறுக்கு) மின் தூக்கி வசதியை கொண்டுள்ளது.

மணாலியில் பியாஸ் குண்ட் எனும் ஸ்தலத்திற்கும் பயணிகள் விஜயம் செய்யலாம். மஹாபாரத காவியத்தை எழுதிய வியாச முனிவர் இந்த இடத்தில் நீராடியதாக சொல்லப்படுகிறது. உள்ளூர் நம்பிக்கைகளின்படி இந்த புனித ஆற்றில் மூழ்கி எழுந்தால் எந்த விதமான சரும வியாதியும் குணமாகிவிடும் என்று சொல்லப்படுகிறது.

மணாலி சுற்றுலாத்தலத்தில் வருடம் முழுதுமே இதமான இனிமையான பருவநிலை நிலவுகிறது. இருப்பினும் இந்தியாவிலேயே பிரசித்தமான இந்த மலைவாசஸ் தலத்துக்கு பயணம் மேற்கொள்ள மார்ச் முதல் ஜூன் வரையான பருவம் மிகவும் உகந்ததாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com