மாயாஜால உலகத்திற்கு ஒரு பயணம் போகலாம் வாங்க!

Waitomo caves
Waitomo cavesImage Credits: Relaxing Journeys

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மாயாஜால உலகம் என்றால் பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா? ஹேரிபாட்டர் முதல் நார்னியா வரை மாயாஜால உலகத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படங்களை மக்கள் எப்படி கொண்டாடினார்கள் என்று நமக்கு தெரியும். அப்படியிருக்கையில் உண்மையிலேயே ஒரு மாயாஜால இடத்திற்கு உங்களை கூட்டி செல்ல போகிறேன் என்று சொன்னால் நம்பமுடிகிறது. சரி,வாங்க மாயாஜால உலகத்திற்கு ஒரு விசிட் அடிச்சிட்டு வரலாம்.

நியூசிலாந்தில் வடக்கு கடற்கரையில் உள்ள வைட்டோமா என்னும் இடத்தில் அமைந்திருக்கும் குகைதான் அந்த மாயாஜால உலகம். இக்குகை 30 மில்லியன் வருடம் பழமையானதாகும். ‘வை’ என்றால் தண்ணீர் என்றும் ‘டோமோ’ என்றால் குழி என்றும் பொருள். இங்கே இருக்கும் ஆயிரக்கணக்கான ஒளிரும் புழுக்கள்தான் இவ்விடத்தை ஒரு அதிசய உலகமாக மாற்றியுள்ளது. இந்த புழுக்கள் குகையின் கூரைப்பகுதியிலே இருக்கிறது.  இந்த வகை புழுக்களுக்கு ஒளிரும் தன்மை உள்ளது. அதை பார்க்கும் போதுதான் ஏதோ மாயாஜால உலகிற்கு வந்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

இந்த புழுக்களின் பெயர் அரக்னோகேம்பா லூமினோசா (Arachnocampa luminosa) ஆகும். உண்மையிலேயே இது புழுவல்ல ஒருவகை பூச்சியாகும். இந்த வகை பூச்சி இரையை தன் வசம் கவரவே இவ்வாறு ஜொலிக்கிறது. இந்த ஒளிரும் புழுக்கள் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் மட்டுமே உள்ளது. இது மழைக்காலங்களில் இன்னும் அதிகமாக ஒளிருமாம். இதற்கு தொடர்ந்து இரண்டு மணி நேரம் ஒளிரக்கூடிய ஆற்றல் உள்ளது. இந்த பூச்சிகளின் வாலில் உயிரொளிர்வு உள்ளது. அது ஆக்ஸிஜனுடன் வினைப்புரிந்து நீலநிற ஒளியை உருவாக்குகிறது.

Arachnocampa luminosa
Arachnocampa luminosa

வைட்டொமா குகை மிகவும் புகழ்பெற்ற ஒளிரும் புழுக்களை காணக்கூடிய குகையாகும். இங்கே மூன்று குகைகள் உள்ளது. அதில் இரண்டு குகைகளில் நடந்து சென்று ஆராயலாம். இதுவே மூன்றாவது குகையில் படகில் சென்று ஆராயலாம். இங்கே சுற்றுலாப்பயணிகள் படகில் சென்று சுற்றி பார்த்துவிட்டு வருவதற்கான வசதிகளும் இருக்கிறது.

இக்குகை Black water rafting சாகசம் செய்வதற்கு மிகவும் புகழ் பெற்றதாகும். சாகசப்பயணத்தின் மூலம் குகையை சுற்றிப்பார்க்க கூடிய வசதிகள் உள்ளது. இந்த குகையின் மேல்புறத்தில் இருக்கும் ஒரு ஓட்டையின் வழியாக அடியிலிருக்கும் நீர்நிலையில் சென்று சேர வேண்டும் பின்பு நீரில் நீந்திக்கொண்டே ஒளிரும் குகையின் அழகை ரசிக்கலாம். அது மட்டுமில்லாமல் சாகச விரும்பிகளுக்காக Zipline வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
பூமியில் இருக்கும் சொர்க்கம் 'பூகா பள்ளத்தாக்கு' - வாங்க ஒரு விசிட் அடிக்கலாம்!
Waitomo caves

இக்குகையில் ஒளிரும் புழுக்கள், சுண்ணாம்பு கற்களின் அமைப்புகள் போன்றவற்றை காண்பதற்காகவே ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருடம் முழுவதும் வருகை தருகிறார்கள். இக்குகைக்கு வருகை தருவதற்கு சிறந்த மாதங்கள் மார்ச் முதல் டிசம்பர் வரை ஆகும். முதலில் இக்குகையில் ஒரு ஓட்டை வழியாக நுழைந்து நேராக அடியில் இருக்கும் நீர்நிலையில் சென்று சேர வேண்டும்.

எனவே பேர்ரி டேல் (Fairy tale) கதைகளில் ஆர்வம் உள்ளவர்கள் நிச்சயம் இந்த இடத்திற்கு செல்வதும், தங்களுடைய ’பக்கெட் லிஸ்ட் ’ ல் சேர்த்து கொள்வதும் மிகவும் அவசியமாகும். இக்குகையில் செலவழிக்க கூடிய 45 நிமிட படகு சவாரி உங்களை வேறு ஒரு உலகத்துக்கு அழைத்து செல்லும் என்று சொன்னால் அது மிகையாகாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com