துணிச்சல் இருந்தால் மட்டும் செல்லுங்கள்! இந்தியாவின் டாப் 10 அமானுஷ்ய இடங்கள்!

Top 10 Paranormal Places in India!
Paranormal places...

சிலர் தங்களது பயணத்தில் திரில் இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள். திரில்லுடன் திகிலும் நிறைந்த இடங்கள் இந்தியாவிலும் உள்ளன. அந்த இடங்களுக்கு சென்று வருவது மறக்க முடியாத ஒரு சிறந்த அனுபவமாகவும், துணிச்சலுக்கு எடுத்துக் காட்டாகவும் இருக்கும். 

1. மல்சா மஹால் - டெல்லி

Top 10 Paranormal Places in India!
மல்சா மஹால் - டெல்லி

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, அயோத்தி அரச வம்சத்தின், கடைசி இளவரசியான விலாயத் மஹாலின் சொத்துக்களை அபகரித்து ஏமாற்றியுள்ளனர். இதனால் மனமுடைந்த இளவரசி வைரத்தை உடைத்து விழுங்கி தற்கொலை செய்துகொண்டாள். பின்னர் இந்த கோட்டையில் இளவரசியின் ஆவி உலா வருவதாகவும், அங்கு செல்லும் எவரும் உயிருடன் திரும்ப வந்ததில்லை, என்றும் உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

2. சனிவார் வாடா கோட்டை - புனே

Top 10 Paranormal Places in India!
சனிவார் வாடா கோட்டை - புனே

இந்தக் கோட்டை மராட்டிய அரச குடும்பத்தின் இருப்பிடமாக இருந்துள்ளது. அந்த வம்சத்து ஒரு இளவரசனை உறவினர்கள் சேர்ந்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். அந்த இளவரசனின் ஆவி கோட்டைக்குள் சுற்றித் திரிவதாக கூறுகின்றனர். இரவில் இந்தக் கோட்டையில் இருந்து இளவரசனின் ஓலமும் அழுகை சத்தமும் கேட்பதாக உள்ளூர் வாசிகள் பயத்துடன் கூறுகின்றனர்.

3. வாஸ் வில்லா - பெங்களூர்

Top 10 Paranormal Places in India!
வாஸ் வில்லா - பெங்களூர்

பெங்களூர் நகரின் செயிண்ட் மார்க்ஸ் சாலையில் இந்த வீடு உள்ளது. இந்த பங்களாவில் குடியிருந்த தாய்ஸ் வாஸ் என்ற வழக்கறிஞரை, பங்களாவை அபகரிக்கும் நோக்கத்தில் கொடூரமாக கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர். அதன் பின்னர் பங்களாவில் வசிப்பவர்கள் காலி செய்துவிட்டு சென்றுவிட்டனர். இந்த இடத்தில் அமானுஷ்ய சக்தி நடமாட்டம் இருப்பதாக கன்னட ஊடகங்கள் பலமுறை செய்திகளை வெளியிட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:
Tote bag Vs மற்ற Handbag... இரண்டில் எந்த பேக் உங்களுக்கு ஏற்றது? சரியான ஒன்றைத் தேர்வு செய்வது எப்படி?
Top 10 Paranormal Places in India!

4. எழுத்தாளர் கட்டிடம் - கொல்கொத்தா 

Top 10 Paranormal Places in India!
எழுத்தாளர் கட்டிடம் - கொல்கொத்தா

மிகவும் கொடூரமான பிரிட்டிஷ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சிம்ப்சனை விடுதலைப் போராட்ட வீரர்களான பாதல் குப்தா , பினாய் பாசு , தினேஷ் குப்தா ஆகியோர் சேர்ந்து கொலை செய்துள்ளனர். அப்போதிருந்து, இந்த இன்ஸ்பெக்டரின் ஆவி இந்த கட்டிடத்தில் நடமாடுவதாக கூறப்படுகிறது.கட்டிடத்தின் காலி அறைகளிலிருந்து அடிக்கடி இன்ஸ்பெக்டரின் அழு குரல் கேட்பதாக, அங்கு பணிபுரியும் ஊழியர்கள் கூறியுள்ளனர்.

5. ஃபெர்ன் ஹில் பேலஸ் - ஊட்டி 

Top 10 Paranormal Places in India!
ஃபெர்ன் ஹில் பேலஸ் - ஊட்டி

ஒருவழியாக தமிழ் நாட்டிற்கும் வந்தாச்சு.நூற்றாண்டு பழமையான இந்த ஹோட்டலில் ராஸ் என்கிற இந்தி திரைப்படம் படமாக்கப்பட்டது . அந்த படப்பிடிப்பின் பொது இந்த ஹோட்டலில் நிறைய அமானுஷ்ய சக்திகளை உணர்ந்ததாக படப்பிடிப்பு குழுவினர் கூறியுள்ளனர். தங்கள் அறையின் மேல் பகுதியில் அடிக்கடி பொருட்கள் உருளும் சத்தமும் , பேச்சுக் குரல் கேட்டு பயந்துள்ளனர்.

6. முகேஷ் மில்ஸ் - மும்பை 

Top 10 Paranormal Places in India!
முகேஷ் மில்ஸ் - மும்பை

1982 களில் இந்த மில்லில் வேலை நிறுத்தம் நடைபெற்று , மில் இழுத்து மூடப்பட்டது. பின்னர் ஒருநாள் மில் நாசவேலை காரணமாக தீப்பிடித்து எரிந்து போனது. இதற்கு பின்னர் இடிபாடு கட்டிடமாக இருந்த இதில் சில அமானுஷ்ய நடவடிக்கைகள் தொடந்ததாக உள்ளூர் வாசிகள் பேசிக்கொள்கின்றனர். ஒருமுறை ஒரு பாலிவுட் திரைப்படத்தின் படப்பிடிப்பு இங்கு நடந்துள்ளது. அப்போது அங்கு தொடர்ச்சியாக பயமுறுத்தும் சம்பவங்கள் நடந்ததால் படப்பிடிப்பு குழுவினர் அவசரமாக வெளியேறிவிட்டனர். 

7. திரி கிங்ஸ் சர்ச் - கோவா 

Top 10 Paranormal Places in India!
திரி கிங்ஸ் சர்ச் - கோவா

தெற்கு கோவாவின் வெல்சாவோவில் அமைந்துள்ளது இந்த சர்ச். சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இரண்டு ராஜாக்களை சமரசம் பேச அழைத்து , ஒரு ராஜா விருந்து கொடுத்துள்ளார். விஷம் கலந்த அந்த விருந்தை சாப்பிட்ட, இரண்டு ராஜாக்களும் அங்கேயே இறந்துவிட்டனர். விஷம் வைத்த ராஜா ஊர் மக்களின் கோபத்திற்கு பயந்து அவரும் விஷ மருந்தி தற்கொலை செய்துகொண்டார். அதன் பின்னர் இந்த சர்ச் பகுதியில் 3 ராஜாக்களின் ஆவியும் நடமாடுவதாகவும் அவர்களின் குரல் கேட்பதாகவும், மக்கள் அந்த பக்கம் செல்லவே அச்சப்படுவதாகவும் கூறுகின்றனர்.

8. தேவ்ஜி மகாராஜ் கோயில் - மபி

Top 10 Paranormal Places in India!
தேவ்ஜி மகாராஜ் கோயில்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்த கோயிலில் பௌர்ணமி அன்று பேய்கள் மற்றும் தீய சக்திகளை விரட்டுகின்றனர். பக்தர்களின் உள்ளங்கையில் சூடத்தை ஏற்றி, ஆவிகளை விரட்டுகின்றனர். கோயில் வளாகத்தில் பூசாரிகள் விளக்கமாற்றால் அடித்து பேய்களை விரட்டுவதைப் பார்க்கவே திகிலாக இருக்கும். இந்த கோயிலில் பேய்களை அமைதிப்படுத்த ஒவ்வொரு வருடமும் பேய் திருவிழா நடத்துகின்றனர், அன்றைய நாளில் விசித்திரமாக இந்த திருவிழா நடைபெறுகிறது.

9. தத்தாத்ரேயா மந்திர்- கங்காபூர்

Top 10 Paranormal Places in India!
தத்தாத்ரேயா மந்திர்- கங்காபூர்

ம. பிரதேசத்தில் உள்ள மற்றொரு பேய்  விரட்டும் கோயில் இது. அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் இந்த கோயிலில் பேய் பிடித்தவர்களை அழைத்து வருகின்றனர். அவர்கள் இங்குள்ள கடவுள்களை திட்டுகின்றனர். அதுமட்டுமல்லாமல் பேய் பிடித்தவர்கள் மதில்களில் ஏறி வினோதமாக கத்துகின்றனர். இதை பார்ப்பவர்களுக்கு சற்று திகில் கலந்த வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

10. பாலாஜி கோயில் - மெஹந்திப்பூர்

Top 10 Paranormal Places in India!
பாலாஜி கோயில் - மெஹந்திப்பூர்

ராஜஸ்தான் மாநிலத்தில் மெஹந்திப்பூர் கிராமத்தில் உள்ள பாலாஜி கோயில் பேய்களை ஓட்டுவதில் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் நுழைந்த உடனேயே பேய் பிடித்தவர்கள் அங்குமிங்கும் ஓடுவதையும் அலறுவதையும் , தலைகீழாக நிற்பதையும் பார்ப்பதற்கு பயமாக இருக்கும். ஆனாலும் இந்த கோவிலில் உள்ள அனுமன் பேய்களை விரட்டுவதாக நம்பப்படுகிறது. இந்தக் கோயிலுக்கு வந்து சென்றவர்கள் மீதான தீய சக்திகள் விலகுவதையும் அதன் பின்னர் நலவாழ்வு கிடைத்ததையும் பக்தர்கள் கூறுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com