மரத்தடியில் விமானப் பயணிகள் காத்திருக்கும் விமான நிலையம்!


The airport where the passengers are waiting under the tree!
Open airport...
Published on

ந்தக் காலத்தில் பள்ளிக்கூடத்திற்கு சென்றால் மரத்தடியில்தான் பெரும்பாலும் வகுப்புகள் நடைபெறும். அதேபோல இன்றைய சூழ்நிலையில் ஒரு விமான நிலையத்தில் பயணிகள் காத்திருப்பதற்கு மரத்தடியைத்தான் பயன்படுத்துகின்றனர் அதைப் பற்றி காண்போமா!

சாதாரண விமான நிலையங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு விமான நிலையம் உலகில் உள்ளது. ஒரு காலத்தில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நடந்துதான் சென்றனர். அதன் பிறகு மாட்டு வண்டி. அதன் பிறகு வந்தவைதான் பேருந்தும், ரயில் போக்குவரத்தும். பயணம் செய்வது மக்களுக்கு ஆடம்பரமாக இருந்தது. அதுவும், விமானத்தில் செல்வது என்பது பெருமைக்குரிய ஒன்றாக இருந்தது.

மாறிவரும் சூழல் விமானப் பயணத்தையும் தற்போது இயல்பாக மாற்றியுள்ளது என்றாலும், இன்றும் விமான பயணம் பலருக்கு காஸ்டலியான ஒன்றாகவே உள்ளது. எனினும் கொடுக்கும் காசுக்கு ஏற்றவாறு விமான பயணிகளுக்கு சொகுசான வசதிகளை வழங்கும் விமான நிலையங்கள் உலகில் நிறைய உள்ளன. விமான நிலையத்தில் வழங்கப்படும் உயர்தர வசதிகளால் சோதனை, காத்திருப்புகளை தாண்டி ஒவ்வொருவரின் பயணமும் மகிழ்ச்சியான பயணமாக அமைகிறது.

அதேநேரம், ஆடம்பர வசதிகள் எதுவும் இல்லாத விமான நிலையம் ஒன்று இப்போது பேசுபொருளாக மாறி உள்ளது. இங்கு ஆடம்பரம் என்று எதுவும் இல்லை. மரத்தடிதான் காத்திருப்பு அறை. கொலம்பியாவின் அகுவாச்சிகா என்ற இடத்தில் ஹகரிதாமா விமான நிலையம்தான் அது. முற்றிலும் சிறிய விமான நிலையம். இந்த விமான நிலையத்தில் மொத்தமே இரண்டு பகுதிகளே உள்ளது. அவற்றில் ஒன்று பயணிகளின் லக்கேஜ்களை பரிசோதிக்கும் இடமாக உள்ளது.

அதன்படி, இங்கு பயணிகளின் லக்கேஜ்களை சரிபார்க்க ஆட்டோமேட்டிக் ஸ்கேனர் கிடையாது. சொல்லப் போனால் ஸ்கேனர் இயந்திரம் வைக்கும் அளவுக்கு இங்கு இடம் கிடையாதாம். அதனால்தான், விமான நிலைய அதிகாரிகள் கைகளை கொண்டே லக்கேஜ்களை சோதனையிடுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
சமையலுக்கு ருசி சேர்க்கும் 5 விசேஷப் பொருட்கள்!

The airport where the passengers are waiting under the tree!

இதனால் விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் வெயிலில் வரிசையில் காத்திருக்கும் நிலைதான் இங்கு காணப்படுகிறது. மற்ற விமான நிலையங்களில் இருப்பதுபோல் ஆடம்பரமான காத்திருப்பு அறை இல்லை. மாறாக மாமரத்தின் அடியில் கட்டப்பட்டுள்ள பெஞ்சுகள்தான் காத்திருப்பது அறையாக இருக்கின்றன அந்த பெஞ்சுகளில் பயணிகள் காத்திருக்கின்றனர். இதில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக பெஞ்சுகள் ஒதுக்கப்பட்டுள்ளது

சிறிய விமான நிலையம் என்றாலும் சுத்தமாக உள்ளது. இங்கு வரும் விமானங்களும் சிறிய ரக விமானங்கள்தான் என்று சொல்லப்படுகிறது. இயற்கையோடு ஒட்டி உறவாடும் விமான நிலையம் என வைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com