ஆன்மீகப் பயணம் தரும் ஆனந்தம்: யாத்திரையின் மகத்துவமும் நன்மைகளும்!

A spiritual journey
The greatness and benefits of pilgrimage!
Published on

ந்திய கலாச்சாரத்தில் கோவில்கள் என்பது வெறும் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமல்ல, ஆன்மீக ஆற்றலை வழங்கும் புனித இடங்களாகவும் கருதப்படுகின்றன. வாழ்க்கையின் சிக்கல்கள், மன அழுத்தம், அச்சம் ஆகியவற்றை மறந்து, இறைவனின் அருளை அனுபவிக்கும் தருணம் தான் கோயில் யாத்திரை. குடும்பத்தாருடன் அல்லது பக்தர்களுடன் சேர்ந்து செல்லும் இந்த ஆன்மீகப் பயணம் மனித மனதுக்கு அளிக்கும் ஆனந்தம் சொல்லில் அடங்காதது.

மனித வாழ்வில் பக்தி உணர்வு மிகப் பெரிய ஆற்றலாகும். மனக்குழப்பம், சோர்வு, கவலை ஆகியவற்றை நீக்கி, நிம்மதியையும் நம்பிக்கையையும் தருவதுதான் கோயில் யாத்திரை. புனிதத் தலங்களை தரிசித்து இறைவனை வணங்கும் இந்த ஆன்மீகப் பயணம் (The greatness and benefits of pilgrimage!) வாழ்வில் புதிய உற்சாகத்தையும் ஆனந்தத்தையும் அளிக்கிறது.

மன அமைதி தரும் அனுபவம்: கோயிலுக்குள் நுழைந்தவுடன் ஏற்படும் புனித சூழ்நிலை, மந்திர ஓசைகள், மணி ஓசை ஆகியவை மனதை சாந்தமாக்குகின்றன. தெய்வத்தை தரிசித்தவுடன் மனதில் ஏற்படும் நிம்மதியே யாத்திரையின் முக்கியப் பயன்.

கூட்டுப் பணி மற்றும் ஒற்றுமை: குடும்பத்தினருடன், நண்பர்களுடன், கிராம மக்கள் அல்லது யாத்திரை குழுக்களுடன் சேர்ந்து பயணிப்பது உறவை வலுப்படுத்துகிறது. ஒருவருக்கொருவர் உதவி செய்து பயணிப்பது சமூக ஒற்றுமைக்கு உதவுகிறது.

ஆன்மீக உயர்வு: தெய்வத்தை தரிசிப்பது, பஜனை செய்வது, அன்னதானத்தில் பங்கேற்பது போன்றவை பக்தியின் ஆழத்தை உணரச் செய்கின்றன. மனதில் அகம்பாவத்தை குறைந்து தாழ்மையும் கருணையும் அதிகரிக்கின்றன.

புனித இடங்களின் சிறப்பை அறிதல்: ஒவ்வொரு கோயிலும் தனித்துவமான வரலாறும் கட்டிடக் கலை அழகும் கொண்டுள்ளது. யாத்திரை மூலம் அந்த இடங்களின் சிறப்பையும் புரிந்துகொள்ளலாம். இதனால் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் மதிக்கத் தொடங்குகிறோம்.

இதையும் படியுங்கள்:
உங்கள் பர்ஸைக் காலியாக்காமல் சொர்க்கத்தைப் பார்க்க ஒரு வழி!
A spiritual journey

உடல் ஆரோக்கியத்திற்கு பயன்:

நடப்பதன் பயன்: பெரும்பாலான கோயில்கள் நீண்ட நடைபாதைகளில் அல்லது மலைப்பகுதிகளில் அமைந்துள்ளன. அவற்றை அடைய நடைப்பயணம் செய்வதால் உடல் எடை குறையும், இரத்த ஓட்டம் சீராகும். நடைபயணத்துடன் ஆன்மீக அனுபவம் சேர்ந்ததால் மன அழுத்தம் குறைந்து உடல்நலத்துக்கும் நேரடி பயன்தருகிறது.

சுவாச பயிற்சி: மலைக்கோயில்களுக்கு ஏறிச்செல்லும்போது ஆழ்ந்த சுவாசம் இயல்பாக நடைபெறும். இது நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

உடல் சக்தி அதிகரிப்பு: நீண்ட தூரம் நடந்தல், படிகள் ஏறுதல் போன்றவை உடல் சக்தியையும், தசை வலிமையையும் அதிகரிக்கின்றன.

இயற்கை சூழல் அனுபவம்: கோயில் யாத்திரைகள் பல நேரங்களில் பசுமை சூழலில், சுத்தமான காற்றில் நடைபெறும். இதனால் மனமும் உடலும் புத்துணர்ச்சி பெறுகின்றன.

உடல் நோய் எதிர்ப்பு சக்தி: யாத்திரையின் போது எதிர்கொள்ளும் சிறிய சிரமங்கள் – வெயில், மழை, நடை சோர்வு போன்றவை உடலை இயற்கையாகத் தழுவச்செய்யும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுகிறது.

தூக்கம் மேம்பாடு: நாள் முழுவதும் நடந்த சிரமத்திற்குப் பிறகு உடலுக்கு நல்ல ஓய்வு தேவைப்படுகிறது. இதனால் இரவு தூக்கம் சீராகவும் ஆழமாகவும் அமைகிறது.

பகிர்வு மற்றும் தானத்தின் மகிமை: யாத்திரையின்போது யாருக்கும் உதவுதல், அன்னதானம் செய்வது, தண்ணீர் வழங்குவது போன்றவை மனித நேயத்தை வளர்க்கின்றன. இதனால் மனநிறைவு ஏற்பட்டு ஆனந்தம் இரட்டிப்பாகிறது.

இதையும் படியுங்கள்:
ஆந்திராவின் பறவைகள் சொர்க்கம்: நெலப்பட்டு சரணாலயம் ஒரு பயணம்!
A spiritual journey

பாரம்பரியமும் கலாச்சாரமும்: ஒவ்வொரு கோயிலும் தனித்துவமான வரலாறும் கட்டிடக் கலையும் கொண்டுள்ளது. யாத்திரை மூலம் நாம் அந்த புனிதத் தலங்களின் சிறப்பையும் பாரம்பரியத்தையும் புரிந்துகொள்வோம். இதனால் இந்திய கலாச்சாரத்தின் மகத்துவத்தை மதிக்கத் தொடங்குகிறோம்.

கோயில் யாத்திரை  வாழ்க்கையை அழகாக்கும். எனவே ஒவ்வொரு மனிதரும் வாழ்நாளில் குறைந்தது ஒருமுறை கோயில் யாத்திரையை மேற்கொள்வது அவசியம். அது மனதை சுத்தப்படுத்தும் மருந்தாகவும், ஆன்மாவை உயர்த்தும் சக்தியாகவும் அமையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com