சித்ரா பௌர்ணமி அன்று கன்னியாகுமரி கடலில் அரங்கேறும் அதிசயம்!

sunset...
சூரியன் மறைவு...
Published on

சித்ரா பௌர்ணமி அன்று ஒரே நேரத்தில் சூரியன் மறைவு மற்றும் சந்திரன் உதயமாகும் அற்புதக்காட்சி உலகிலேயே கன்னியாகுமரியில் மட்டுமே காணமுடியும். வருடம்தோறும் சித்திரை மாதம் பௌர்ணமி அன்று சித்ரா பௌர்ணமி விழா கொண்டாடப்படுகிறது. அந்தச் சமயம் மாலை 6 மணிக்கு கன்னியாகுமரி கடலில் சூரியன் மறையும்போது சந்திரன் உதயமாகும். இது கண்கவர் காட்சியாக இருக்கும். இந்த அபூர்வக் காட்சியை உலகத்திலேயே கன்னியாகுமரியிலும் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள அடர்ந்த காடுகள் நிறைந்த ஒரு மலையிலும் மட்டுமே காணமுடியும். இந்த அபூர்வக் காட்சி காண ஆப்பிரிக்கா கண்டத்தில் அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதிக்கு மக்கள் யாரும் செல்லமுடியாது. அதனால் உலகிலேயே இந்தக் காட்சியை கன்னியாகுமரியில் மட்டுமே காண முடியும்!

இக்காட்சியைக் காண சுற்றுலா பயணிகள் பல்லாயிரக்கணக்கான கணக்கில் கூடுவார்கள். மாலையில் சூரியன் மேற்குப் பக்கம் உள்ள அரபிக்கடல் பகுதியில் பந்து போன்று, மஞ்சள் நிறத்துடன் மறையும். அந்தச் சமயத்தில் கிழக்குப் பக்கம் உள்ள வங்கக்கடலில் கடலும் வானமும் சந்திக்கும் இடத்திற்கு மேல் பகுதியில் சந்திரன் நெருப்பு பந்துபோல எழும்பும். அப்போது கடலின் மேல் பகுதியில் உள்ள வானம் வெளிச்சத்தால் பளிச்சென்று மின்னும். இந்த அபூர்வக்காட்சியை கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திருவேணிச்சங்கமும் சங்கிலித் துறை கடற்கரை பகுதியில் இருந்தும் பார்க்கலாம். இது தவிர கன்னியாகுமரியை அடுத்த பழத்தோட்டம் பக்கம் உள்ள முருகன் குன்றத்தில் இருந்தும் இந்த அபூர்வக்காட்சி கண்டு ரசிக்கலாம்.

சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தை அதன் உச்சபட்ச மகிமையில் பார்க்கக்கூடிய அற்புதமான கடற்கரையில் ஒரு மகிழ்ச்சியான விடுமுறையைக் கனவு காண்கிறீர்களா அல்லது அந்த இடத்தைச் சுற்றி வர விருப்பமா? கன்னியாகுமரிக்கு நீங்கள் உடனே செல்ல வேண்டும்.

கன்னியாகுமரி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இடம் ஆகும். இது இந்தியாவின் பெருநில பரப்பின் தென்கோடி முனையாகும். மூன்று முக்கிய நீர்நிலைகள் (அரபிக்கடல், வங்காள விரிகுடா மற்றும் இந்திய பெருங்கடல்) இங்கே சங்கமிக்கிறது. இத்தகைய புவியியல் ரீதியாக ஆசீர்வதிக்கப்பட்ட இடம் உலகிலேயே அரிதானது.

திருவள்ளுவர் சிலை...
திருவள்ளுவர் சிலை...

கிருஷ்ணனின்  சகோதரியாக கருதப்படும் இந்து தெய்வமான கன்னியாகுமரியின் பெயரால் இந்த இடம் அதன் பெயரைப் பெற்றது. டச்சுக்கிழக்கிந்திய கம்பெனி போர்ச்சுகீசியர் சிலோனை  கைப்பற்றியபோது இந்த இடம் கொமோரின் என்று சுருக்கப்பட்டது. இறுதியில் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது இந்த ஸ்தலம் கேப்கொமோரின் என்று அழைக்கப்பட்டது. பின்னர் இந்திய அரசு இதற்கு கன்னியாகுமரி என்ற பெயர் சூட்டியது.

இதையும் படியுங்கள்:
வலிகள்தான் நம் வாழ்க்கைக்கு வழிகாட்டி!
sunset...

கன்னியாகுமரி ஒரு கடற்கரை பிரதேசமாக இருப்பதால் விடுமுறையைக் கழிக்க ஏற்ற சிறந்த கடற்கரைகள் கன்னியாகுமரியில் ஏராளமாக உள்ளன.

கன்னியாகுமரியில் ஊரை பெருமைப்படுத்தும் கலாச்சார பரம்பரை பற்றி உங்களுக்கு நினைவூட்டும் கண்கவர் நினைவுச் சின்னங்களும் உள்ளன. பல்வேறு கோயில்கள், தேவாலயங்கள் இங்கு உள்ளன. இவை அனைத்தும் கன்னியாகுமரியை கட்டாயம் சுற்றிப் பார்க்க வேண்டிய இடமாக  ஆக்குகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com