மலைக்கு மேலே இருக்கும் கப்பல் எப்படி அங்கே போனது தெரியுமா?

Sun cruise
Ship located on top of the hillImage Credits: MyBestPlace
Published on

ப்பல் என்றால் கடலிலேதானே மிதக்க வேண்டும். அதை விட்டு விட்டு மலைக்கு மேலே எப்படி சென்றது என்று ஆச்சர்யமாக உள்ளதா? அப்போது இந்த பதிவை முழுமையாக படியுங்கள்.

தென்கொரியாவில் உள்ள ஜியோங்டாங்ஜின் என்னும் புகழ்பெற்ற சுற்றுலாத்தளத்தில் ஒரு மலையின் குன்றின் உச்சியில் அமைந்திருப்பதுதான் 'சன் குரூஸ்' என்னும் கப்பல். இவ்விடம் சிறந்த சூரிய உதயத்திற்கும், அஸ்தமனத்திற்கும் புகழ் பெற்றதாகும். அதனால் இந்த மலை உச்சியில் கப்பல் வடிவத்தில் இந்த சொகுசு ஹோட்டலை கட்டியுள்ளனர். இதுவே உலகத்தில் முதல் முறையாக கட்டப்பட்ட கப்பல் தீமிலான சொகுசு ஹோட்டலாகும்.

மலையேறி இந்த கப்பலுக்குள் நுழைந்தாலும், கடலில் உள்ள கப்பலுக்குள் எவ்வாறு உணர்வு தோன்றும் அவ்வாறு இதை வடிவமைத்திருப்பதாக கூறுகிறார்கள். இந்த கப்பலின் மேல் தளத்திற்கு சென்றால், சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் ஆகும் காட்சிகளை துல்லியமாக பார்வையிடலாம். இந்த கப்பலில் தங்கும் அறைகள், உணவகங்கள், பார், பொழுது போக்கு அம்சங்கள், நீச்சல்குளம் என அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றுள்ளது. இந்த கப்பல் 541 அடி நீளமும், 148 அடி உயரமும் 30 ஆயிரம் டன் எடையும் கொண்டது.

இந்த கப்பல் 211 அறைகளை கொண்டிருக்கிறது. இந்த கப்பலை வடிவமைத்ததன் முக்கிய காரணம் சுற்றுலாப்பயணிகளுக்கு கடலில் செல்வது போன்ற தத்ரூபமான அனுபவத்தை கொடுப்பதற்காகவே ஆகும். இந்த கப்பலில் ஸ்பீக்கர்களில் அலைகளின் ஓசை மற்றும் பறவைகளின் ஒலி போன்றவற்றையும் சேர்த்து போடுவதால், கடலிலே பயணிப்பது போன்ற அனுபவத்தை சுற்றுலாப்பயணிகள் உணர முடியும்.

இதையும் படியுங்கள்:
திடமான மனதுடையோர் வெற்றியடைய பின்பற்றும் 12 விதிமுறைகள். என்னென்ன தெரியுமா?
Sun cruise

சன் க்ரூஸ் கப்பல் 2002 ல் தென்கொரியாவில் திறக்கப்பட்டது. இந்த ஹோட்டல் பொதுமக்கள் பார்வைக்கு வந்த உடனேயே மிகவும் பிரபலமாகி விட்டது. ஒரு இரவு இந்த கப்பலில் தங்குவதற்கு 80,000 Won தரவேண்டும்.

இதற்கு பிறகு 2003 ஆம் ஆண்டு துருக்கியில் டைட்டானிக் ஹோட்டல் என்று கப்பல் தீமில் ஹோட்டல் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தென்கொரியா சுற்றுலா செல்ல வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் கண்டிப்பாக இந்த கப்பல் ஹோட்டலை மிஸ் பண்ணிடாதீங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com