
சீனாவில் ஹூபே மாகாணத்தில் சிசிகுவான் என்ற இடத்தில் இந்த வியக்க வைக்கும் மிதக்கும் பாலம் உள்ளது. 500 மீட்டர் நீளம் 4.5 மீட்டர் அகலம் கொண்ட வளைந்து நெளிந்து செல்லும் பிரம்மாண்டமான பாலமாகும்.
கிங் ஜியாங் ஆற்றில் உள்ள இரண்டு முனைகளில் உள்ள கிராமங்களை இந்த மிதக்கும் பாலம் இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. ஆற்றின் அடியில் எந்த தூண்களும் இல்லாமல் அதிநவீனத்துடன் மிகுந்த தொழில்நுட்பத்துடன் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பொறியியல் வல்லுநர்கள் பல மாதங்களாக ஆற்றில் தங்கி பாண்டூன் எனப்படும் பிளாஸ்டிக் பெட்டகங்களைக் கொண்டு அடுக்கி அதன் மேல் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு மாயாஜாலம் போன்று இருக்கும்.
ஆற்றின் இருபுறமும் அழகிய இயற்கை காட்சிகளும் மரங்களும்நிறைந்து காணப்படுகிறது. இந்த பாலத்தின் மீது நடந்து சென்றால் ஆடி அசைந்து செல்வதுபோல் இருக்கும். ஆற்றில் வளைந்து நெளிந்து செல்வது கொள்ளை அழகு. இந்த ஆறு அதிக ஆழம் கொண்டது.
2016 ஆம் ஆண்டு இந்த பாலம் திறக்கப்பட்டது. சிறிய வாகனங்கள் சைக்கிள் மற்றும் நடந்து செல்பவர்கள் இதை பயன்படுத்தி வருகிறார்கள். 2.8 டன் எடை வரை வாகனங்கள் செல்ல முடியும். ஒருவழி பாதையாக செயல்பட்டு வருகிறது.
அலைகளை தவிர்க்க வாகனங்கள் 20 கிலோ மீட்டருக்கு மேல் செல்ல அனுமதி இல்லை. இந்த மிதக்கும் பாலம் மூலம் உள்ளூர்வாசிகள் இதை இரண்டு கிராம மக்களும் பயன்படுத்தி வருகிறார்கள்.
இதில் பயணிப்பது புதிய அனுபவமாக இருக்கும். ஏராளமான சுற்றுலா பயணிகள் இதை பார்வையட்டும் பயன்படுத்தியும் வருகிறார்கள். சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.
இந்த ஆற்றின் இருபுறமும் அடர்ந்த பசுமை காடுகள் ரம்யமாக காணப்படுகிறது. இதேபோன்று சீனாவில் 10 மிதக்கும் பாலங்கள் உள்ளன.
இதில் ஒருமுறை சென்றால் உங்களை மயக்க வைக்கும் விதத்தில் அற்புதமாக கட்டப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் இந்த இடத்திற்கு அடிக்கடி வருகை தருகிறார்கள்.