
சாகச பயணம் என்றால் என்ன?
சாகச பயணங்கள் என்பவை சவால்கள் மற்றும் அபாயங்களை உள்ளடக்கிய உற்சாகமான பயணங்களாகும். இது நம் ஆறுதல் மண்டலங்களுக்கு வெளியே சென்று புதிய இடங்களையும் செயல்பாடு களையும் ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இவற்றில் மலையேற்றம், முகாம், ராஃப்டிங், பைக்கிங் போன்ற நடவடிக்கைகள் அடங்கும். தமிழ்நாடு மற்றும் சிக்கிம் போன்ற இந்தியாவின் பல மாநிலங்கள் சாகச பயணங்களுக்கு ஏற்ற இடங்களை வழங்குகின்றன. அங்கு இயற்கையை அனுபவிப்பதுடன் பல்வேறு சவாலான சாகச நடவடிக்கைகளிலும் ஈடுபடலாம்.
இவற்றின் முக்கிய அம்சங்கள்:
பாரம்பரிய சுற்றுலா பயணங்களைப் போலன்றி சாகசபயணத்தில் சாகசங்களை அனுபவிப்பதற்கு உடல் உழைப்பு, சவாலான செயல்களில் ஈடுபடுதல் போன்றவை மிகவும் முக்கியம். சாகச பயணங்கள் மேற்கொள்ளும் போது பொறுப்புடனும், பாதுகாப்பாகவும் இருப்பதுடன் சுற்றுச்சூழலை பாதிப்புக்கு உள்ளாக்காமல் இருப்பதும் அவசியம்.
பாதுகாப்பு மற்றும் உடல் ஆரோக்கியம்:
சாகச பயணத்திற்கு முன்பு உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது, பயணக்காப்பீடு எடுப்பது மற்றும் பயணத்திற்கான தேவையான பொருட்களை சரி பார்த்துக்கொள்வது போன்றவை மிகவும் முக்கியம்.
உடல் உழைப்பு:
பல சாகச பயணங்களுக்கு சிறப்புத் திறன்கள் மற்றும் உடல் உழைப்பு அதிகம் தேவைப்படும்.
திட்டமிடல்:
மற்ற சுற்றுலா வகைகளிலிருந்து இந்த சாகச சுற்றுலா முற்றிலும் மாறுபடும். இதற்கு விரிவான திட்டமிடலும் தயாரிப்பும் அவசியம். பயணம் செல்லும் இடத்தைப் பற்றி ஆராய்வது, நம்பகமான நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது மற்றும் தேவையான உபகரணங்களை ஏற்பாடு செய்வது போன்ற திட்டமிடுதல்கள் மிகவும் அவசியம்
புதிய அனுபவங்கள்:
ஆறுதல் மண்டலங்களுக்கு வெளியே சென்று புதிய கலாச்சாரங்கள் மற்றும் புதிய இடங்களை ஆராய முடிகிறது. இது வழக்கமான சுற்றுலாவில் இருந்து விலகி தனித்துவமான மற்றும் உற்சாகமான அனுபவங்களை தருகிறது.
ஆபத்து மற்றும் சவால்:
உண்மையான அல்லது உணரப்பட்ட ஒரு குறிப்பிட்ட அளவு அபாயங்கள் இதில் உள்ளன. சவால்கள் நிறைந்த இந்த சாகசப் பயணத்தை மேற்கொள்வது சுவாரஸ்யமாகவும், சிலிர்ப்பானதாகவும் நம் செயல்பாடுகளை மாற்ற உதவும்.
சாகச பயணத்தின் பல்வேறு வகைகள்:
தரை, ஆகாயம் மற்றும் நீர் சார்ந்த நடவடிக்கைகளான மலையேற்றம் மற்றும் பங்கி ஜம்பிங் போன்ற செயல்பாடுகள் சாகச பயணங்களில் அடங்கும். காடுகளில் அல்லது மலைப்பகுதிகளில் முகாமிட்டு தங்குவது, ரிவர் ராஃப்டிங் எனப்படும் ஆற்றின் வேகமான பகுதிகளில் படகு சவாரி செய்வது, மலைகள் மற்றும் சிகரங்களில் ஏறுவது, மலைப்பகுதிகளில் பைக்கிங் செய்வது, பனிச்சறுக்கு, வனவிலங்கு சஃபாரி, கடல் சாகசங்கள், ஸ்கூபா டைவிங் போன்ற சாகச பயண அனுபவங்கள் சுவாரஸ்யமாகவும், சிலிர்ப்பூட்டும் அனுபவமாகவும் இருக்கும்.
இந்தியாவில் உள்ள சில பிரபலமான சாகச பயண இடங்கள்:
தமிழ்நாடு:
சர்ஃபிங் செய்ய கோவளம், மலையேற்றத்திற்கு நீலகிரி மற்றும் கொடைக்கானல், பாராகிளைட்டிங்கிற்கு ஏலகிரி மற்றும் படகு சவாரிகளுக்கு முட்டுக்காடு என பல இடங்கள் உள்ளன. மலையேற்றம், முகாம் மற்றும் பிற சாகச நடவடிக்கைகள் போன்ற பல்வேறு சாகச அனுபவங்களை வழங்குகிறது.
சிக்கிம்:
இமயமலை சிகரங்கள், பனிப்பாறைகள் மற்றும் ஆறுகளால் நிறைந்த இந்த மாநிலம் பெல்லிங் - கஞ்சன்ஜங்கா மலையின் அற்புதமான காட்சிகளை வழங்கும் ஒரு நகரமாகும். மலையேற்றம், முகாம் மற்றும் ராஃப்டிங் போன்ற சாகசங்களுக்கு ஏற்றது.
லடாக்:
ரிவர் ராஃப்டிங், மவுண்டன் பைக்கிங், மலையேற்றம், ஒயிட் வாட்டர் ராஃப்டிங் போன்ற சாகச செயல்களை வழங்குகிறது. இமயமலையில் அமைந்துள்ள இந்த இடம் உயர்ந்த மலைகளால் சூழப்பட்ட லடாக் சாகச பயணங்களுக்கு ஏற்ற ஒரு அழகான இடமாகும். இதன் தனித்துவமான இயற்கை அழகு கலாச்சார செழுமை மற்றும் சவாலான நிலப்பரப்புகளால் சாகச ஆர்வலர்களை ஈர்க்கும் அற்புதமான இடமாகும்.
மணாலி, இமாச்சலப் பிரதேசம்: கோடை மற்றும் குளிர்கால சாகசங்களுக்கு சிறந்த இடமாகும். பனிச்சறுக்கு விளையாட்டுகளுக்கு இந்த இடம் முதன்மை பெற்றது. சோலாங் பள்ளத்தாக்கு (Solang valley) பாராகிளைடிங், சோர்பிங், குதிரை சவாரி, மலையேற்றம் போன்ற பல சாகச நடவடிக்கை களுக்கு பிரபலமானவை.
ரிஷிகேஷ், உத்தரகாண்ட்:
பங்கி ஜம்பிங் (bungee jumping), மலையேற்றம், ரிவர் ராஃப்டிங் மற்றும் பல்வேறு நீர் விளையாட்டுகளுக்குப் பெயர் பெற்றது. இந்த இடம் சாகச ஆர்வலர்களுக்கும், ஆன்மீக யாத்ரீகர்களுக்கும் மிகவும் பிடித்தமான இடமாகும்.
கர்நாடகா: கூர்க்கில் உள்ள மடிக்கேரி அருவிகள் மற்றும் பசுமையான மலைகளுக்கு பிரபலமானது. Pavanar hills மலை ஏறுதலுக்கான பிரபலமான இடமாகும். Gokarna கடற்கரை சாகச நடவடிக்கைகளுக்கு சிறந்த இடமாக உள்ளது. Nagarhole National Park ஜீப் சஃபாரிக்கு ஏற்ற இடமாகும்.