கேரளாவின் வெனிஸ்: ஆலப்புழாவின் டாப் 6 அழகிய கடற்கரைகள்!

Payanam Articles
The Venice of Kerala

லப்புழா தென்னிந்திய மாநிலமான கேரளாவில் உள்ள ஒரு அழகிய கடற்கரை நகரமாகும். கேரளாவின் வெனிஸ் எனப்படும் ஆலப்புழா அதன் அமைதியான உப்பங்கழிகள், அழகிய கடற்கரைகள் மற்றும் அழகிய நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்றது. இதன் இயற்கை அழகு, கலாச்சார செழுமை மற்றும் வரலாற்று முக்கியத்துவம் ஆகியவற்றின் தனித்துவமான கலவையை வழங்குகிறது. இங்குள்ள மராரி கடற்கரை, தூம்புலி கடற்கரை, புன்னப்பரா கடற்கரை, தோட்டாப்பள்ளி கடற்கரை போன்ற கடற்கரைகள் சிறந்த சுற்றுலா அனுபவங்களை வழங்குகின்றன.

1. ஆலப்புழா கடற்கரை Alappuzha Beach: 

Payanam Articles
Alappuzha Beach

ஆலப்புழா கடற்கரை அதன் தங்க மணல், தெளிவான நீல நீர் மற்றும் அமைதியான பயணத்திற்கு ஏற்றது. 1862 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கலங்கரை விளக்கம் கடற்கரை மற்றும் அரபிக் கடலின் பரந்த காட்சிகளை வழங்குகிறது. கடற்கரைக்கு அருகிலுள்ள ஒரு சிறிய பொழுதுபோக்கு பூங்காவான விஜயா பூங்கா, குழந்தைகளுக்கு குதூகலத்தை தரக்கூடியது. ஆலப்புழாவின் முதன்மை கடற்கரை. 150 ஆண்டுகள் பழமையான பாலம், கலங்கரை விளக்கம் மற்றும் விஜயா பீச் பார்க் ஆகியவற்றுக்கு பெயர் பெற்றது

2. மராரி கடற்கரை Marari Beach:

Payanam Articles
Marari Beach

ஆலப்புழா நகரத்திலிருந்து சிறிது தூரத்தில் (11 கி.மீ.) அமைந்துள்ள மராரி கடற்கரை குறைவான கூட்ட நெரிசலைக் கொண்டு, குடும்பத்துடன் நேரத்தை செலவிடக்கூடிய அமைதியான மற்றும் அழகான கடற்கரை ஆகும். மிகவும் அமைதியான கடற்கரையாக இருக்கும் இது நகர வாழ்க்கையின் சலசலப்பில் இருந்து தப்பிக்க விரும்புவர்களுக்கு ஏற்ற கடற்கரையாகும்.

மராரி கடற்கரை அதன் ஆயுர்வேத ரிசார்ட்டுகளுக்கு பிரபலமானது. இங்கு பாரம்பரிய கேரள ஆயுர்வேத மசாஜ்கள் மற்றும் சிகிச்சைகளை அனுபவிக்க முடியும். அருகிலுள்ள மீன்பிடி கிராமங்களுக்குச் சென்று உள்ளூர் கலாச்சாரத்தை அனுபவிக்கலாம். நவம்பர் முதல் பிப்ரவரி வரை இதமான வானிலை நிலவுவதால் கடற்கரையை பார்வையிட சிறந்த நேரமாகும்.

இதையும் படியுங்கள்:
விசாகப்பட்டினத்தின் அழகிய கடலோரப் பயணம்!
Payanam Articles

3. தும்போலி கடற்கரை Thumpoly Beach:

Payanam Articles
Thumpoly Beach

ஆலப்புழாவில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தும்போலி கடற்கரை ஒருபுறம் கம்பீரமான அரபிக் கடலும், மறுபுறம் வசீகரமான ஏரியும் கொண்டது. கடற்கரையில் உயர்ந்த பனை மரங்கள் வரிசையாக அமைந்துள்ளன. தூய்மையான மணல் மற்றும் இயற்கை அழகிற்கு பெயர் பெற்ற அமைதியான கடற்கரை இது. இங்கு 500 ஆண்டுகள் பழமையான செயிண்ட் தாமஸ் தேவாலயம் மற்றும் அற்புதமான கேரள பாணி கட்டிடக்கலையில் அமைந்த தீர்த்தசேரி கோயிலும் பார்க்க வேண்டிய இடங்கள். 

4. புன்னப்ரா கடற்கரை Punnapra Beach:

Payanam Articles
Punnapra Beach

இந்த கடற்கரை ஆலப்புழாவிலிருந்து 15 நிமிட தூரத்தில்(7.5 கி.மீ.) தொலைவில் உள்ளது. தங்க நிற மணல் பரப்பிற்கும், தூய்மையான தண்ணீருக்கும் பிரபலமான ஒரு அமைதியான சுற்றுலா தலமாகும். இங்கு அதிக கூட்டம் இல்லாததால் நகர வாழ்க்கையில் இருந்து விலகி அமைதியான சூழலை விரும்பும் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற ஏகாந்தமான கடற்கரையாக உள்ளது. கடற்கரையில் ஆயுர்வேத மசாஜ்கள் மிகவும் பிரபலமானவை. இது மனதையும் உடலையும் இதமாக வைத்திருக்க உதவும்.

5. தொட்டாப்பள்ளி கடற்கரை Thottappally Beach:

Payanam Articles
Thottappally Beach

புகழ்பெற்ற நாவல் மற்றும் திரைப்படமான 'செம்மீன்' மூலம் பிரபலமான கடற்கரை இது. இது காயல்கள் (backwaters) மற்றும் ஆற்றுநீர் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது. கூட்டம் குறைவாகவும், அமைதியாகவும் இருக்கக்கூடிய வெகு அழகான கடற்கரை. அழகான சூரிய அஸ்தமன காட்சியை இங்கு கண்டு களிக்கலாம். மீன்பிடி துறைமுகமான இதற்கு அருகில் உள்ள தொட்டப்பள்ளி ஸ்பில்வேயும் ஒரு சிறந்த ஈர்ப்பாகும். இது தொட்டப்பள்ளி ஏரியின் நன்னீரையும், அரபிக்கடலில் கலக்கும் ஆற்றின் முகத்துவாரத்தில் உள்ள உப்பு நீரையும் பிரிக்க இந்த ஸ்பில்வே கட்டப்பட்டுள்ளது.

6. அந்தகரணாழி கடற்கரை Andhakaranazhi Beach:

Payanam Articles
Andhakaranazhi Beach

கொச்சியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கடற்கரை அந்தகரணாழி என்ற சிறிய அழகான கிராமத்தில் அமைந்துள்ளது. கேரளாவில் உள்ள சில வணிகமயமாக்கப்படாத கடற்கரைகளில் இதுவும் ஒன்று. இரவில் மாலுமிகளுக்கு வழிகாட்டும் ஒரு கலங்கரை விளக்கம் கடற்கரையில் உள்ளது.

இது ஆழமற்ற, இயற்கையாகவே உருவாக்கப்பட்ட முகடாகும். மாசற்ற மணல், சுத்தமான நீர் மற்றும் அழகான கடற்கரையுடன் அதன் பச்சைபசேல்  இயற்கை எழில் கொஞ்சும் இடத்தை அனுபவிக்க சிறந்த இடமாகும். இப்பகுதியில் நீர்மட்டங்கள் ஒழுங்கற்றவை என்பதால் சுற்றுலாப் பயணிகள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com