திருப்பதி: ஆன்மிகம் மற்றும் இயற்கை அழகின் சங்கமம்!

Tirupathi
Confluence of natural beauty
Published on

ந்திர மாநிலத்தின் சிறப்பே திருப்பதியில் உள்ள கோயில்கள்தான். இதில் மிகவும் பிரபலமானது ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயில் திருமலை மலைகளின் ஏழு சிகரங்களில் ஒன்றாக. நாடு மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள கோயில்களைவிட இந்த கோவிலுக்குத் தான் பக்தர்கள் அதிகம் உண்டு. கோயிலின் கட்டிடங்கள் பழைய காலமுறையில் அமைக்கப்பட்டிருக்கும். அதுவே  இதன் சிறப்பு அம்சமாகும்.

திருமலை திருப்பதி தேவஸ்தான தோட்டம்

திருமலை கோயிலின் பிரதான கட்டிடத்தை ஒட்டி உள்ள 460 ஏக்கர் பரப்பளப்பில் இந்த தோட்டம் அமைந்துள்ளது. தோட்டத்தில் பூக்கும் 200 வகையான பூக்கள் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும். இந்த தோட்டத்தில் பல குளங்களும் உள்ளன. திருப்பதியில் பார்க்க வேண்டிய பிரபலமான இடங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த தோட்டத்திலிருந்து வரும் பூக்கள் ஒவ்வொரு நாளும் தெய்வத்தையும், கோயிலையும் அலங்கரிக்க பயன்படுத்தப்படுகின்றன. தோட்டத்தில் பூக்கும் பூக்கள் மற்ற கோவில்களுக்கும் மற்ற கோவில்களுக்கும் அலங்கரிக்க பயன்படுத்துகிறார்கள். ஒரு நாளைக்கு 500 கிலோ விற்கும் மேல் பூக்கள் பூக்கக்கூடிய அற்புதமான தோட்டம் இது.

தல கோனா நீர்வீழ்ச்சி

270 அடி உயரம் கொண்ட தலை கோனா நீர்வீழ்ச்சி ஆந்திராவின் மிக உயரமான நீர்வீழ்ச்சி ஆகும். இது இந்தியாவின் சிறந்த அழகிய நீர் வீழ்ச்சிகளில் ஒன்றாகும்.  இந்த நீர்வீழ்ச்சி காட்டுப்பகுதியில் சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மேலும் நீர்வீழ்ச்சியை காண சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் மேலே ஏறவேண்டும். இருப்பினும் இந்த அற்புதமான நீர்வீழ்ச்சியை அதன் இயற்கையான சூழலில் காணும்போது மனதில் மகிழ்ச்சி நிலவும். இங்கே படகு சவாரி, கயிறு ஏறுதல் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் உண்டு. திருப்பதியில் பார்வையிட வேண்டிய அற்புதமான இடங்களில் இதுவும் ஒன்றாகும்.

ஸ்ரீவாரி அருங்காட்சியகம்

ஸ்ரீவாரி அருங்காட்சியகம் 1.25 லட்சம்சதுர அடி பரப்பளவில் திருப்பதி பாலாஜி கோவிலின் வளாகத்தில் எதிரே அமைந்துள்ளது. திருப்பதியில் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாக இதை மாற்ற பல காரணங்கள் உள்ளன. இது கோயிலின் சுற்றுப்புறத்தை பூர்த்தி செய்யும் வகையில் அழகாக அமைந்துள்ளது. திருமலை மரபுகள் மற்றும் இந்து மதம்  ஆகியவற்றின் வளமான களஞ்சியம் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் வரலாற்று மிக்க ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் உள்ளன. அவை தொல்லியல் முதல் சமகால பொருட்கள் வரையாகும்.

மேலும் வராக சுவாமி செப்பு கல்வெட்டு அன்னமையாவின் அசல் செப்பு தகடுகள் போன்ற மதிப்புமிக்க பழங்கால பொருட்களும் இங்கு காட்சிகளாக அமைந்திருக்கிறது காஞ்சியின் பல்லவர்கள், மதுரை பாண்டியர்கள், கம்பியின் விஜயநகரம் போன்றவை அருங்காட்சியத்தின் பல காட்சிகளை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. காலை 10 முதல் மாலை 6 மணி வரை பார்வையாளர்கள் பார்க்கலாம்.

கபில தீர்த்தம்

திருப்பதி பாலாஜி கோயிலில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற நீர்வீழ்ச்சியான கபில தீர்த்தம். இது திருப்பதியில் மக்கள் அடிக்கடி பார்வையிடப்படும் சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.  ஷேசாத்திரி  மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு தனித்துவமான நீர்வீழ்ச்சியாகும்.

Tirupathi
கபில தீர்த்தம்

கபிலேஸ்வர சுவாமி கோவில் வளாகத்திற்குள் நூறு அடி உயரத்திலிருந்து ஒரு பெரிய குளத்தில் தண்ணீர் விழுந்து கொண்டிருக்கும். கோயிலுக்குள் இருக்கும் குளத்தில் உச்சம் பெறும் அழகிய இயற்கையை நீர் நிலை திருப்பதிற்கு அருகில் உள்ள கட்டாயம்  பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்களில் இதுவும் ஒன்றாகும். கோயிலுக்குள் ஒரு பித்தளை சிவலிங்கமும் கோயிலின் நுழைவாயிலில் ஒரு காளையின் பிரம்மாண்டமான கல் சிலையும் உள்ளன.

நீர்வீழ்ச்சி மற்றும் கோவில் இரண்டும் மிகவும் புனிதமானது. குளத்தில் நீராடுவது புனிதமாக கருதப்படுகிறது. மழைக் காலங்களில் நீர்வீழ்ச்சி ஒரு அழகிய காட்சியாக ரம்மியமாக அளிக்கும். இக்கோயில் காலையில் 5 மணி முதல் மாலை 8 மணி வரை திறந்திருக்கும்.

இதையும் படியுங்கள்:
கிராண்ட் கேன்யன்: இயற்கையின் பிரமாண்ட அதிசயம்!
Tirupathi

சந்திரகிரி

திருப்பதியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் சதுரகிரி உள்ளது. விஜயநகர் ராஜ்யத்தின் நான்காவது தலைநகராக இருந்துள்ளது. இது ஆந்திராவில் ஒரு முக்கிய பாரம்பரிய தலமாகும். திருப்பதிக்கு அருகில் உள்ள மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் இதுவும் ஒன்றாகும். இங்கு பார்க்க பல இடங்கள் உள்ளன. திருப்பதியில் 2 நாட்கள் தங்கினால் மற்ற அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com