

உலகில் ஏராளமான நாடுகளில் குளிர்ச்சி அதிகம் இருக்கும். சில நாடுகள் பள்ளத்தாக்குகளில் இருக்கும். சில நாடுகள் கடல் மட்டத்திலிருந்து அதிக உயரத்தில் இருக்கும். இதில் அதிக குளிரான 10 நாடுகளை பார்ப்போம்.
அண்டார்டிகா
உலகின் முதல் 10 குளிரான நாடுகளின் பட்டியலில் அண்டார்டிகா முதலிடத்தில் உள்ளது. இப்பகுதி மக்கள் வசிக்க முடியாத அளவுக்கு குளிர்ச்சியாக உள்ளது. மிகக் குறைந்த வெப்பநிலை மைனஸ் - 89 டிகிரி சென்டிகிரேட் ஆகும். குளிர் காலம் வந்தால் மக்களின் எண்ணிக்கை 1000 குறைந்து விடும்.
ரஷ்யா
உலகின் இரண்டாவது குளிரான நாடு ரஷ்யா. கடுமையான கோடை காலங்களிலும் வெப்பநிலை 03 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். கடுமையான குளிர்காலத்தில் மைனஸ் 40 டிகிரி சென்டிகிரேட் வரைக்கும் குறைவாக இருக்கும். இரண்டு மாதங்கள் தவிர ஆண்டு முழுவதும் சூரிய ஒளியை பார்க்க முடியாது. அந்த நாட்களில் மக்களின் எண்ணிக்கை 500 பேர் மட்டுமே இருப்பார்கள்.
கனடா
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக அமைந்துள்ள நாடு கனடா. வெப்பநிலையை சுமார் 40 டிகிரி செல்சியஸ் வரை குறைகிறது. மிகக் கடுமையான குளிர்காலம் 5 மாதங்கள் நீடிக்கும். இங்கு மொத்தமாகவே 40,000 பேர் மட்டுமே இருப்பர்.
அமெரிக்கா
இது உலகின் குளிர் மட்டும் வெப்பமான பகுதிகள் இரண்டையும் கொண்டுள்ளது. 50 மாநிலங்கள் உள்ளடக்கியது அமெரிக்கா. இங்கு வெப்பநிலை சராசரி நிலைகளில் 30 டிகிரிக்கு குறைகிறது.
கிரீன்லாந்து
மிகக்குளிர்ந்த நாடான கிரீன்லாந்து ஐந்தாவது இடத்தில் உள்ளது. இங்கு வெப்பநிலை 69.4 சென்டிகிரேடு வரை இருக்கும் கிரீன்லாந்து மிக குளிரான நாடாக இருப்பதால், இங்கு மக்கள் குளிருக்கு ஏற்றவாறு உடைகள் அணிந்து வாழ்கிறார்கள்.
மங்கோலியா
குளிர் பகுதிகளில் சுமார் 30 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். இங்கு வெப்பநிலை 20 டிகிரி சென்டி கிரேடுக்கும் கீழே குறைகிறது.
நார்வே
நார்வேயின் வடபகுதியில் வாழும் மக்கள் சுமார் 40,000 பேர் உள்ளனர். இங்கு வெப்பநிலை 51 சென்டி கிரேடு வரை இருக்கும். கடும் பனிக்குளிரை சமாளிக்க gakti எனப்படும் பாரம்பரிய உடைகள் அணிகிறார்கள்.
ஸ்வீடன்
ஸ்வீடன் வடபகுதியில் குறிப்பாக கிரூனா, லூவியா போன்ற இடங்களில் சுமார் 2 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். இங்கு வெப்ப நிலை 52 டிகிரி C கிரேடு வரை இருக்கும். இங்கு மக்கள் வெப்பத்தை தக்க வைக்கும் கட்டிடங்கள் மற்றும் பனிக்கு எதிர்ப்பு தரும் பைபர் உடைகள் அணிகிறார்கள்.
ஐஸ்லாந்து
ஐஸ்லாந்து குளிரான நாடுகளில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இங்கு சுமார் 3.7 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். இங்கு வெப்பநிலை 20 டிகிரி C கிரேடு வரை இருக்கும். இங்கு மக்கள் பைபர் ஆடைகளை குளிருக்கு அணிகிறார்கள்.
கஜகஸ்தான்
கஜகஸ்தான் குளிரான நாடுகளில் 10வது இடத்தில் உள்ளது. இங்குள்ள மக்கள் இன்றும் இடம் பெயரும் வாழ்க்கை முறையிலேயே இருக்கின்றனர். இங்கு வெப்பநிலை 14.5 சென்டிகிரேட் வரை இருக்கும். இங்கு குளிருக்கு ஏற்ற கம்பளிஆடைகளை அணிகிறார்கள்.
இன்னும் நிறைய நாடுகள் குளிராக இருக்கும் பட்டியலில் உள்ளது. இருந்தாலும் மிகக் குளிரான நாடுகளில் இவையே முதல் 10 இடங்களை பிடித்துள்ளன.